லக்னம் தெரியாதவர்கள் கணிப்பது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்னம் தெரியாதவர்கள் கணிப்பது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

பிறந்தநாள் தெரிந்திருந்து,பிறந்த நேரம் அறியாதவர்களுக்கு அவர்களுக்கான ஜாதக பலன்களை கணித்து பலன் கூறுவது எவ்வாறு?



இன்றைய கால சூழலில் மருத்துவம், விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதைப் போல 50 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சி பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆகையால் பெரும்பாலான நபர்களுக்கு தங்களது பிறந்த நேரம் குறித்த விபரங்கள் சரிவர தெரிந்து இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், பாரம்பரியமாக ஜோதிடம் பார்க்கக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வாரிசுகளின் பிறந்த நேரத்தை குறித்து வைத்திருப்பார்கள்.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வை பெறாத குடும்பங்களை சார்ந்தவர்கள் பெரும்பாலும் பிறந்த நேரம் பற்றிய விவரங்களை குறித்து வைத்திருப்பதில்லை.
அதேபோல் அந்த காலங்களில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 4:30 மணி வரை பிறந்தவர்களுக்கும் அவர்களுடைய பிறந்த நேரம் பெரும்பாலும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐந்து வயதானவுடன் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தின் அடிப்படையில் ஒருவேளை அவர்களுக்கு பிறந்தநாள் குறித்த விவரங்கள் மட்டும் தெரிந்திருக்கலாம்.
இதுபோல் பிறந்த நாள் மட்டும் தெரிந்திருந்து, பிறந்த நேரம் குறித்த விவரங்களை பற்றி அறியாதவர்கள் தங்களுக்கான ஜாதக பலன்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம்.
ஒருவருடைய பிறந்த நேரத்தை தெரிந்து கொள்வதற்கான முதல் வழிமுறையை பொருத்தவரை அவருடைய தொழில், அவர் பார்க்கக்கூடிய வேலை, இவற்றைப் பொருத்தது ஆகும்.#Iniyavan
ஒருவருடைய ஜாதகத்தில் லக்ன ராசிக்கு 10-ஆம் பாவகங்கள் மற்றும் அடிமை உத்யோகத்தினை சுட்டிக்காட்டும் ஆறாம் பாவகம், வருமானத்தை சுட்டிக் காட்டுகின்ற இரண்டாம் பாவகம் இவற்றுடன் தொடர்பு கொள்ளக்கூடிய கிரகங்களை பொருத்து ஒருவரின் தொழில் அமைவதற்கான வாய்ப்புண்டு.
அடுத்ததாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் அதிகப்படியான சுபர்களின் தொடர்பினை  பெற்று உள்ளதோ அதை பொருத்தும் ஒருவருடைய தொழில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
அந்த வகையில் பிறந்தநாள் மட்டும் தெரிந்திருந்து, பிறந்த நேரம் தெரியாத ஜாதகருடைய தொழிலை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். #Iniyavan 

அடுத்ததாக ஜாதகர் சொன்ன பிறந்த நாளுக்குரிய 12 இலக்னங்களை அமைத்துக்கொண்டு,  அன்றைய நாளுக்குரிய கிரக நிலைகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றுடன் ஜாதகர் செய்து வருகின்ற தொழில் மேற்கண்ட லக்னங்களுடன் எந்த லக்னத்துடன் பொருந்திப் போகிறது என்பதை வைத்து அவருடைய லக்னத்தை யூகிக்க இயலும்.
சில நிலைகளில் இரண்டு லக்னங்களுக்கு அவருடைய தொழில் நிலைகள் ஒத்துப் போவதையும் காண இயலும். இது போன்ற தருணங்களில் இரண்டு லக்கினங்களுடைய குணாதிசயங்களையும், லக்ன அதிபர்கள் பெற்றுள்ள பிற கிரகங்களின் தொடர்பினை பொருத்தும் குணாதிசயங்களை கூறும் பொழுது எந்த குணாதிசயம் அவருக்கு அதிகம் ஒத்துப் போகின்றதோ அதுவே அவருடைய இலக்னமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.#Iniyavan
அடுத்ததாக லகஒவ்வொரு பாவகத்தின் சாதக பாதக விஷயங்களை அவரிடத்தில் சொல்லும் போது அவை அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்சத்தில் இருக்கும் போது கண்டிப்பாக அதுவே அவருடைய பிறந்த லக்னமாக இருக்கும்.
ஒருவரின் தொழில் அல்லது பார்க்கும் வேலையை வைத்து, லக்னத்தை நிர்ணயம் செய்ய ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய தங்களது காரகத்துவம் சார்ந்த தொழில்கள் என்னென்ன என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
ஜாதகர் தற்போது பார்க்க கூடிய தொழில் அல்லது வேலையை வைத்து ஒருவரின் லக்னம் என்ன என்பதை எவ்வாறு யூகிக்க முடியும் என்பதை  ஒரு எடுத்துக்காட்டு ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பிறந்த நாள் மட்டும் தெரிந்திருந்து பிறந்த நேரம் தெரியாத ஒருவர் எனக்கான ஜாதக பலன்களை கணித்து தருமாறு என்னிடம் கேட்டார். அவர் பிறந்த தேதி அவர் குறிப்பிட்ட நாள் ஆகஸ்ட் 7, 1978. அவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சுய ஜாதகத்தில் குரு வலுப்பெற்ற நிலையில் இருந்து வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடம் ,உத்யோக ஸ்தானமான 10-ஆம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் போது அவர் போதிக்கும் துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
அவர் கூறிய 1978, ஆகஸ்ட் 07 ஆம் தேதிக்கூறிய 12 இலக்னங்களை அமைத்த பின்பு மேற்கண்ட ஆசிரியராக பணியாற்றுவதற்கான விதி எந்த லக்னத்தின் இரண்டு, பத்தாம் பாவகங்களுடன் ஒத்துப் போகிறது என்பதை ஆராய்ந்த போது துலாம் லக்னம் என்பது தெரியவந்தது.‌
துலாத்திற்கு பத்தாம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்ற நிலையில் இருந்து தன்னுடைய ஐந்தாம் பார்வை மூலம் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டினை (விருட்சகம்) பார்வையிடுகிறார்.
பேராசிரியராக பணியாற்றுவதற்கான விதி, ஜாதகர் குறிப்பிட்ட பிறந்த தேதியின் துலாம் லக்னம் வரும் போது, பொருந்திப் போவதை வைத்து, அவர் துலாம் லக்னம் என நிர்ணயித்து, பின்பு ஒவ்வொரு பாவகத்தின் பலம் மற்றும் பலவீனம் சொல்லப்பட்டபோது 
பெரும்பாலான விஷயங்கள் அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்சத்தில் இருந்ததால் துலாம் லக்னம் என நிர்ணயம் செய்யப்பட்டது.#Iniyavan

இதோடு அவருடைய ஜாதகத்தில் அடிமை உத்தியோகத்தை சுட்டிக் காட்டக்கூடிய லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான குரு, பத்தாம் பாவகத்தில் உச்சநிலையில் இருப்பதால், ஜாதகர் குருவின் காரகத்துவமான போதிக்கும் தொழிலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறையில் ஒருவர் பிறந்த லக்னம் என்ன என்பதை தோராயமாக அவர் பார்க்கக்கூடிய வேலையை வைத்து அறிய இயலும். ஆனால் பிறந்த நேரத்தை துல்லியமாக அறிய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாள் தெரிய வரும்பொழுது அவர் பார்க்கக்கூடிய வேலையை வைத்து பிறந்த இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.பிறந்த ராசி என்பது பெரும்பாலும் சந்திரன் இரண்டேகால் நாட்களுக்கு ஒரே ராசியில் இருப்பதால் ராசியினையும் அறிந்திட இயலும்.

பிறந்த லக்னம், பிறந்த ராசி போன்றவற்றை கண்டறிந்த பின்பு ஒவ்வொரு பாவகத்தின் பலம் மற்றும் பலவீனம், ஒவ்வொரு கிரகம் அடைந்துள்ள பலம் மற்றும் பலவீனம், இவற்றிற்கு ஏற்ப ஜாதகருடைய குடும்ப உறுப்பினர்கள் இவரிடத்தில் நடந்து கொள்ளக்கூடிய விதம் ஜாதகரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள், தற்போதைய சூழல் போன்றவற்றை சொல்வதன் மூலம் பிறந்த லக்னம் சரிதான் உறுதி செய்து கொள்ள இயலும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f