எந்த லக்னம் ஆயினும் லக்னத்தில் குரு இருப்பது சிறப்பு. குரு திக்பலம் அடைவார். இலக்னம் வலு அடையும். ஒரு அவயோகக கிரகத்தின் தசாவே பாதிப்பினை தரக்கூடிய வகையில் நடக்கிறது என்றாலும் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் தன்னை காத்துக் கொள்ள முடியும். #Iniyavan
இலக்னாதிபதிக்கு நண்பரான ஒரு யோக கிரகத்தின் தசா நடக்கிறது இலக்னாதிபதியும் நல்ல நிலையில் உள்ளார். லக்னமும் குருவின் இருப்பால் வலுப்பெறுகிறது. கூடுதல் நன்மையை பெறுவீர்கள்.
இது மட்டுமின்றி குருவின் 5, 7, 9 ஆம் பார்வையால் நல்ல குழந்தைகளையும் நல்ல வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களையும் நல்ல தந்தை,
தெய்வ அனுக்கிரகத்தால் எதையும் நல்ல முறையில் அனுபவிக்க கூடிய தன்மை போன்றவற்றைப் பெறுவீர்கள்.
எவ்வளவு இக்கட்டான நிலையிலும் உங்களுக்கு கரம் கொடுக்க உங்களை உயர்த்தி விட ஒருவரேனும் நிச்சயம் இருப்பார்.
இலக்ன ரீதியாக நல்ல ஆதிபத்தியத்தினைப் பெற்ற குரு இலக்னத்தில் இருப்பது இன்னும் கூடுதல் நன்மை எவ்வளவு இக்கட்டான நிலையிலும் தரம் தாழ்ந்த விஷயங்களை செய்து விட மாட்டீர்கள்.
உங்கள் பெயருக்கோ, மதிப்பு மரியாதைக்கோ உங்கள் வாழ்நாளின் இறுதி வரை பங்கம் ஏற்படப் போவதில்லை..#Iniyavan
இலக்னத்தில் குரு இருந்தும் நீங்கள் மேற்கண்ட எந்த ஒரு விஷயத்திலும் நல்ல பலன்களை உணராத பட்சத்தில் சனி (அ) ராகுவால் குரு பாதிப்படைந்திருப்பார்.
குருவை வலுப்படுத்தும் வழிபாடுகளில் கவனம் செலுத்துவதோடு குருவிற்குரிய வாழ்வியல் பரிகாரங்களையும் செய்து வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கை நல்ல முறையில் மாறுவதை நீங்கள் உணர்வீர்கள்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன்
MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
https://t.me/Astrologytamiltricks