📝 போதுமானவரை ஒருவருடைய ஜாதகத்தில் ராகு எந்த கிரகத்துடன் இணையாமல் இருப்பது நல்லது.
ராகு எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அந்த கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளாகும்.
📝 ராகு எந்த அளவுக்கு பிற கிரகங்களுடன் நெருங்கி இணைந்துள்ளாரோ அதற்கு ஏற்ப தொடர்புடைய கிரகத்தின் காரக ஆதிபத்திய விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கும் இதை சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா புத்தி நடைபெறும் போது ஜாதகரால் நிச்சயம் உணர இயலும்.
📝 உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் குருவானவர் ராகுவுடன் ஓரிரு டிகிரிகளில் மிக நெருங்கி இருக்கும் பொழுது குரு தசா நடைபெறக்கூடிய பட்சத்தில் குருவின் காரகத்துவ விஷயங்களான பணம், குழந்தைகள், ஜாதகரின் பெயர் கெட்டுப்போதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். இப்படிப்பட்ட நிலைகளில் ராகு தசா நல்ல பலனையும் இணைந்துள்ள கிரகமான குருவின் தசா தீய பலனையும் தரும்.
📝 ராகுவிற்கும் குருவிற்குமான இடைவெளி அதிகம் இருக்கும் பொழுது குருதசாவும் ஓரளவு நல்ல பலனைத் தரும்.இருவருக்கும் வீடு கொடுத்த கிரகம் வலுப்பெறுவது நல்லதாகும்.
📝 ராகுடன் ஒரு கிரகம் மிக நெருங்கி இணைந்திருக்கும் பொழுது அந்த கிரகத்தின் தசா வராத போது அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
#IK_ASTRO_SERVICE
📲 9659653138