ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் உபயோகப்படும் தளம். உங்களது தனிப்பட்ட ஜாதக கட்டண ஆலோசனைகளுக்கு Whatsapp மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். ப.இனியவன் கார்த்திகேயன் MA, B.Ed, MA (Astrology) Cell:- (+91) 965 965 31 38
செல்வவளம் தரும் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் பரிகாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வவளம் தரும் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் பரிகாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022
பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகள்..
செல்வம் வேண்டாம் என்று கூறக்கூடிய மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. இவ்வுலகில் பிறந்த மனிதர்களில் பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வினை வளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றோம்.
வளமான வாழ்விற்கு அடிப்படையாக தேவைப்படுவது செல்வம்..
செல்வத்தின் மதிப்பை உணர்ந்தே வள்ளுவர் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார்.
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படுவது பணம்..
பணம் தனக்கு ஒரு பொழுதும் முக்கியமில்லை என்று யாராவது ஒருவர் சொன்னால் கண்டிப்பாக அந்த நபர் பொய் சொல்கிறார் என்றுதான் அர்த்தம்.
உண்மையில் இக்காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் இறைவனால் பொருளாதார ரீதியாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான்.
இறையாற்றலின் உதவியுடன் பொருளாதார ரீதியாக ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள சாஸ்திரங்களில் சில பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை முறையாக கடைப்பிடிக்கும் போது இறைவனின் உதவியால் ஒரு மனிதனின் பொருளாதாரம் ஓரளவேனும் மேம்படும் என்றே சாஸ்திரங்கள் நமக்கு சொல்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் தற்போது பார்ப்போம்.
1.கடுமையான பொருளாதார பிரச்சினைகளில் இருப்பவர்கள் ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளைகளில் மகாலட்சுமி அன்னை முன்பு நெய் தீபம் ஏற்றி தொடர்ச்சியாக வணங்கி வருவது நல்லதாகும்.
2.செல்வம், வளமை போன்றவற்றிற்கு காரணமாக சொல்லக்கூடிய அன்னை மகாலட்சுமி தூய்மையை விரும்பக்கூடியவள்.
தூய்மையான இடங்களில் மட்டுமே அன்னை மகாலட்சுமி வாசம் புரிவாள். தூய்மையற்ற இடங்களை அவள் விரும்பவதில்லை.
அந்த வகையில் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லதாகும்.
3.தவறான வழிகளில் நமக்கு வரக்கூடிய பணம் ஒருபொழுதும் தங்காது.அதனால் தவறான வழியில் பணம் ஈட்ட வேண்டும் என்பதை அறவே மனதிலிருந்து ஒதுக்கி விட வேண்டும்.
3.ஒவ்வொரு மாதமும் நாம் சம்பாதிக்கக்கூடிய தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு (நம்மால் முடிந்த அளவிற்கு தானதர்ம விஷயங்களுக்காக ஒதுக்க வேண்டும்)தொடர்ச்சியான இது போன்ற நற்செயல்கள் அன்னை இலட்சுமியின் ஆசீர்வாதங்களை நமக்குப் பெற்றுத்தரும்.
#Iniyavan
4.செல்வம் நம்மிடம் நிலை பெற்று இருப்பதற்கான மற்றொரு விஷயம் பெண்களிடத்தில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் "பெண்கள் லட்சுமி தேவியின் உருவங்கள்" என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
5.நம்முடைய வீட்டில் ஒரு துளசி செடியை நட்டு வைத்து நன்கு பராமரித்து தினமும் மாலை வேளைகளில் நெய் நிரப்பப்பட்ட மண் விளக்கை அந்த செடிக்கு அருகில் வைத்து தீபம் ஏற்றி லட்சுமி தேவியை வழிபட்டு வர வேண்டும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வளத்தின் நாயகி லட்சுமி நம்முடைய வீட்டிலேயே தொடர்ந்து வாசம் செய்வாள். #Iniyavan
6.ஒவ்வொரு நாளும் குளித்த பிறகு லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற நம்முடைய நெற்றியில் குங்குமம் கொண்டு திலகம் வைத்துக் கொள்வது நல்லது.
7.வீட்டில் உள்ள பெண்கள் தினமும் அதிகாலை வேளையில் வாசலை சுத்தம் செய்து, வாசல் தெளித்து அரிசிமாவு கொண்டு கோலமிட்டு வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
8.உடைந்த பாத்திரங்கள், கண்ணாடி போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதோ பயன்படுத்துவதோ கூடாது. #Iniyavan
9.வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் பணப்பெட்டி அல்லது பீரோ வைத்துக்கொள்வது நலம். அங்கே வைக்கும்போது அது வடக்கு திசையில் திறக்கப்படும். வடக்கு குபேரருக்கு உகந்த திசையாகும். இந்த திசையில் லாக்கரை திறப்பதன் மூலம் மீண்டும் அங்கு பணம் பெருகும் என்பது ஓர் நம்பிக்கை.
10.செல்வத்தை ஈர்க்க பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டியினுள் ஒரு கண்ணாடி வைக்க வேண்டும். இந்த கண்ணாடி அதனை பிரதிபலிக்கும். அதனால் பணம் பெருகும் என்பதும் மற்றொரு நம்பிக்கை.
11.மகாலட்சுமிக்கு உரிய நாளாக சொல்லப்படும் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி மற்றும் விஷ்ணுவை இருவருக்கும் உரிய காயத்திரி மந்திரங்களைக் கூறி ஜெபித்து வருவது வாழ்வை வளப்படுத்தும்.
#Iniyavan
12.கடுமையான நிதி நெருக்கடி நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பசுவிற்கு பச்சைப்புல் வழங்கி வருவது நெருக்கடி நிலையினை நீக்கும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)