கிரகங்கள் அதன் காரகத்துவத்தில் தரக்கூடிய தொழில்கள் மற்றும் பன்னிரு ராசிகள்(இயல்பை பொருத்து) குறிக்கக் கூடிய தொழில்கள் இவற்றை ஓரளவு புரிந்து கொள்ளும் போது ஒருவரின் தொழில் நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரு ராசிகள் குறிக்கக் கூடிய தொழில்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் ஒவ்வொன்றாக பார்ப்போம். #Iniyavan
12 ராசிகள் தரக்கூடிய தொழிலைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ராசியின் தன்மை (நெருப்பு ராசி, நீர் ராசி, காற்று ராசி,நில ராசி) அந்த ராசியில் கிரகங்கள் நின்றால் பெறக்கூடிய இயல்புகளைப் பொறுத்து தொழில் நிர்ணயிக்கப்பட்டுள்றது.
அந்த வகையில் காலபுருஷ இலக்கணத்திற்கு முதல் ராசியான மேஷ ராசி குறிக்கக் கூடிய தொழில்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
மேஷ ராசியில் அதிகாரம், ஆளுமை போன்றவற்றுக்கு காரகம் வகிக்கக்கூடிய சூரியன் உச்சம் பெறுவதால் அரசு உத்தியோகம் சம்பந்தப்பட்ட பணிகள், நிர்வாகம் மேஷ ராசியில் அடங்கும்.
மேஷ ராசி பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் நெருப்பு ராசியாக விளங்குவதால் தீயணைப்புத்துறை, செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டம் தயாரித்தல், மின்சாரம் சம்மந்தப்பட்ட பணிகளும் மேஷ ராசியையே சுட்டிக்காட்டும்.#Iniyavan
மேஷம்,செவ்வாயின் ஆட்சி வீடாக இருப்பதால் காவல்துறை, ராணுவம், விளையாட்டுத்துறை, ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தொடர்பான தொழில் போன்றவை மேஷ ராசியையே குறிக்கும்.
செவ்வாய் பூமிக்காரகன் என்பதால் விவசாயம் சார்ந்த தொழில்கள், கட்டுமானம்,ரியல் எஸ்டேட், சுரங்கத்தொழில் போன்றவையும் மேஷ ராசியில்தான் அடங்கும்.
இரும்பினை சுட்டிக் காட்டக்கூடிய சனி மேஷத்தில் நீசம் பெறுவதால் இரும்பு, இயந்திரம்,தொழிற்சாலை சம்பந்தபட்ட தொழில்களும் மேஷத்தில்தான் அடங்கும்.#Iniyavan
மேஷம், லக்னம் ராசிக்கு 10-ஆம் பாவகமாக அல்லது ஆறாம் பாவகமாக அமைந்து மேற்கண்ட கிரகங்களின் தொடர்பு ஏற்படும்போது மேற்சொன்ன தொழில்கள் அமைவதற்கு வாய்ப்பு உண்டு. வலுப்பெற்ற பிற கிரகங்களின் இணைவு மற்றும் பார்வை இவற்றைப் பொறுத்து தொழில்கள் மாறுபடலாம்.#Iniyavan
உதாரணத்திற்கு மேஷத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் குருவின் இணைவு அல்லது பார்வையைப் பெறும் பொழுது மருத்துவம் சார்ந்த தொழில்களை தரலாம். ஒருவேளை சனியின் தொடர்பினை மேஷத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பெரும்பொழுது இரும்பு இயந்திரம் சம்பந்தபட்ட பணிகளை தரலாம்.
நாளை ரிஷப ராசியின் இயல்பினைப் பொருத்தும், ரிஷபத்துடன் தொடர்பு கொண்டிருக்க கூடிய கிரகங்களின் தன்மையை பொறுத்தும் அமையக் கூடிய தொழில்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f