பெளர்ணியில் பிறந்தவரா நீங்கள்? ஜோதிட ரீதியான நன்மைகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெளர்ணியில் பிறந்தவரா நீங்கள்? ஜோதிட ரீதியான நன்மைகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜனவரி, 2022

பெளர்ணமியின் மேன்மைகள்...

பெளர்ணமி தினத்தன்று பிறப்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படும் நன்மைகள்...

மனோகாரகனான சந்திரன் வானில் முழு நிலவாக காட்சியளிக்கும் நாள் பௌர்ணமி ஆகும். பொதுவாக பௌர்ணமி அன்று பிறக்க கூடியவர்கள் உண்மையில் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பது நம் முன்னோர்களுடைய வாக்கு.
நம்முடைய வாழ்வானது நல்ல முறையில் செல்வதற்கும் தீய முறையில் சொல்வதற்கும் நம்முடைய எண்ணங்களே காரணமாகின்றன. ஏனெனில் ஏனெனில் எண்ணங்கள்தான் நம்முடைய செயல்களாகின்றன. செயல்கள்தான் நம்முடைய வாழ்வின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. #Iniyavan

அந்த வகையில் ஒருவருடைய மனதில் தோன்றக்கூடிய எண்ணங்களுக்கு காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன் ஆவார். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்று அழைக்கின்றோம்.

இத்தகைய சந்திரன் முழு ஒளித்திறனுடன் இருக்கக்கூடிய பவுர்ணமி தினத்தன்று பிறக்ககூடியவர்கள் இயல்பாகவே நல்ல மனோபலம் கொண்டவராக,  தெளிவான திடமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தைப் 
பொறுத்தவரையில் உங்களுடைய சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் பெளர்ணமி சந்திரன் இருக்கின்றாரோ அந்த பாவகம் வலுப்பெறும். அந்த பாவக ரீதியாக நல்ல பலன்களை பெற்றவராக இருப்பீர்கள்.

உதாரணத்திற்கு ஒன்பதாம் பாவகத்தில் பௌர்ணமி சந்திரன் இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகர் மிகவும் நல்ல பொறுப்பான, அக்கறையான தந்தையினை பெற்றவராக இருப்பார்.

தந்தையால் ஜாதகருக்கு நல்ல கௌரவம், புகழ் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்பு, பூர்விகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரின் குடும்பம் சிறப்பு பெற்றதாக இருக்கும்.
 பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

ஓன்பதாம் இடம் குறிக்ககக் கூடிய உயர் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள், சாஸ்திர சம்பிரதாய ஞானம், ஒழுக்கம், நீதி, நேர்மை, கடமை உணர்வு போன்றவற்றிற்கு ஜாதகர் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராகவும் மேற்கண்ட விஷயங்களில் திறமையானவராகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். Iniyavan Karthikeyan 

ஆதிபத்திய ரீதியாக ஒன்பதாம் வீட்டு அதிபதியும், காரகத்துவ ரீதியாக சூரியனும் நன்றாக இருக்கக்கூடிய பட்சத்தில் மேற்கண்ட பலன்கள் கண்டிப்பாக பொருந்தும்.

தன ஸ்தானமான 2-ஆம் இடம், லாப ஸ்தானமான 11-ஆம் இடம் போன்றவற்றில் பெர்ணமி சந்திரன் இருக்கக்கூடிய போது பொருளாதார ரீதியாக ஜாதகர்  தன்னிறைவினை பெறுவார்.
குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இருக்கும்போது ஜாதகருடைய குடும்ப சூழல் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும்.

மூன்றாம் பாவகத்தில் பௌர்ணமி சந்திரன் இருக்கும்போது மூன்றாம் இடம் குறிக்கக்கூடிய இசை, சங்கீதம், எழுத்து போன்ற விஷயங்களில் ஜாதகர் திறமையானவராக, இளைய சகோதர வகையில் நல்ல ஒத்துழைப்பு பெற்றவராகவும் இருப்பார்.
ஏழாம் பாவகத்தில் பௌர்ணமி சந்திரன் இருக்கும் பொழுது நல்ல மனைவியை பெறுவீர்கள்.
 ஐந்தாம் பாவகத்தில் பௌர்ணமி சந்திரன் இருக்கும்போது நல்ல குழந்தைகளை பெறுவீர்கள்.

நான்காம் பாவகத்தில் பௌர்ணமி சந்திரன் இருக்கும்போது நான்காமிடம் குறிக்கக் கூடிய விஷயங்களான  நல்லதாய், தாய் வழி சொந்த பந்த ஆதரவு, நல்ல கல்வி , நிலம், பூமி ,வீடு மனை, வாகனம் போன்றவற்றில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

பத்தாம் பாவகத்தில் இந்த அமைப்பு இருக்கும் போது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், ஆறாம் பாவத்தில் இந்த அமைப்பு இருக்கும் போது உத்தியோக ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், எட்டாம் பாவத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது ஆயுள் பலத்தினையும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் ஜாதகர் பெற்றவராக இருப்பார். பன்னிரண்டாம் பாவகத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது நல்ல தூக்கம், நல்ல சுக போக வசதிகள், தானதர்மம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவராக ஜாதகர் இருப்பார்.

இலக்ன பாவகத்தில் இருப்பதும் ஜாதகருக்கு நல்ல தோற்றம், புகழ் செல்வாக்கு, கௌரவத்தை அளிக்க கூடியதாக  இருக்கும்

எந்த பாவகத்தில் சந்திரன் இருக்கின்றாரோ அந்த பாவக அதிபதி வலுவாக இருக்கும் போது இந்த பலன்கள் கண்டிப்பாக பொருந்தும். அந்த பாவக அதிபதி பலவீனமாக இருக்கும்போது பலன்கள் மாறுபடலாம்.

பௌர்ணமி நிலையில் சந்திரன் இருக்கக்கூடிய பட்சத்தில் சனியின் இணைவு அல்லது பார்வையை பெறாத நிலையில் இருப்பது நல்லதாகும். சனி இணைவு அல்லது பார்வை பெறும் போது அதற்கேற்றவாறு பலன்கள் குறைவுபடும்.
அதேபோல் சந்திரன் ராகு கேதுக்களுடன் டிகிரி அடிப்படையில் மிக நெருங்கிய நிலையில் இணைந்து இருப்பதும் நல்லதல்ல .
ஏனெனில் ராகு கேதுக்களுடன் சந்திரன் இணைந்திருக்கும் போது கிரகண நிலையினை அடைவார்.

பெளர்ணமி சந்திரன் தான் நிற்கக்கூடிய பாவகத்தை வலுப் படுத்துவது மட்டுமின்றி பௌர்ணமி சந்திரனுக்கு ஆறு, ஏழு ,எட்டில் இயற்கைச் சுபக்கிரகங்களான குரு, புதன், சுக்கிரன்   தனித்தோ, சேர்ந்தோ இருக்கும் பொழுது அந்த கிரகத்தின் தசா காலங்களில் மேற்கண்ட கிரகங்களின் காரகத்துவம்  மற்றும் லக்ன ரீதியாக அந்த கிரகம் பெற்றுள்ள ஆதிபத்ய ரீதியாக ஜாதகருக்கு நல்ல நன்மையை செய்வார். முழு ஒளியளவினில் இருக்கக்கூடிய சந்திரனின் ஒளிச்சிதறல்கள் மேற்கண்ட இடத்தில் விழுவதால் நன்மை உண்டு.
 #Iniyavan
மேற்கண்ட நிலையில் பாப கிரகங்கள் இருக்கும் பொழுது அந்த பாப கிரகங்களின் வாயிலாக ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.
குறிப்பிட்ட கிரகத்தின் காரகத்துவ ஆதிபத்திய ரீதியாக தசா காலங்களில் ஓரளவு நன்மைகளும் இருக்கும். ஆனால் பாபர்கள் அங்கு இருக்கும் போது அவர்களால் சந்திரனுக்கு ஒளித்திறன் குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

பௌர்ணமி நிலையில் இருக்கக்கூடிய சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டாம் இடங்களில்  சுப கிரகங்கள் நின்று தொடர்புடைய தசாவும்  வருவது சிறப்பிற்குரிய ஒன்று. வரக்கூடிய பட்சத்தில் ஜாதகர் கண்டிப்பாக நல்ல மன மகிழ்ச்சியும் வளர்ச்சியினையும் பெறுவார். இதுபோன்ற அமைப்பே சந்திர அதியோகம் என்று அழைக்கப்படுகிறது.
#Iniyavan
பௌர்ணமி சந்திரனுக்கு 6, 7,8 ஆம் இடங்களில் சுபக்கிரகங்கள் நின்று அவை நீசமான நிலையில் இருந்தாலும் அந்த கிரகத்தை நீசம் பெற்றதாக எடுக்க வேண்டியது இல்லை.
அந்த கிரகம் அந்த ஜாதகருக்கு தரவேண்டிய காரகத்துவ ஆதிபத்ய விஷயங்களை தருவதற்கு ஏற்ற தகுதியினை பெற்றதாகவே இருக்கும்.



வருடம் முழுவதும் 12 பௌர்ணமிகள் வந்தாலும் மிகச்சிறப்பான பௌர்ணமியாக முதன்மையானதாக கருதப்படுவது சந்திரன் ரிஷபத்திலும்  சூரியன் விருச்சிகத்தில் இருக்கக் கூடிய திருக்கார்த்திகை பவுர்ணமி ஆகும்.
இத்தகைய பௌர்ணமி தினத்தன்று பிறந்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்றால் அதற்கு மிகை இல்லை.
ஏனெனில் இந்த பௌர்ணமி தினத்தன்று சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று நிலையில் இருப்பார். #Iniyavan

இரண்டாம் நிலை சிறப்பான பௌர்ணமியினைப் பொருத்தவரை சந்திரன் துலா ராசியிலும் சூரியன் உச்சமான நிலையில்  மேஷ ராசியில் இருக்கக்கூடிய சித்ரா பௌர்ணமி ஆகும்.

மூன்றாவது சிறப்பான பௌர்ணமியினை பொருத்தவரை கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்ற நிலையிலும் மகரத்தில் சூரியனும் இருக்கக்கூடிய தைப்பூச பௌர்ணமி ஆகும்.

நான்காவது சிறப்பான பௌர்ணமியினை பொருத்தவரை
சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்ற நிலையிலும் கும்பத்தில் சந்திரன் இருக்கக்கூடிய ஆவணி மாத பௌர்ணமி ஆகும். #Iniyavan 

மீதமுள்ள பௌர்ணமிகளும் நன்மையைத் தரக் கூடியது என்றாலும் மேற்கண்ட நான்கு பௌர்ணமிகள் மிகவும் சிறப்பிற்குரியதாகும். ஏனெனில் முதல் நிலை பௌர்ணமியன்று சந்திரன் உச்சம் பெற்ற நிலையிலும், இரண்டாவது நிலை பெளர்ணமி தினத்தன்று சூரியன் உச்சம் பெற்று நிலையிலும், மூன்றாவது சிறப்பிற்குரிய பெளர்ணமியன்று சந்திரன் ஆட்சி பெற்ற நிலையிலும்,
நான்காவது சிறப்பிற்குரிய பௌர்ணமி அன்று சூரியன் ஆட்சி பெற்ற நிலையிலும் இருப்பார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். #Iniyavan
பெளர்ணமிக்கு முன், பின் ,நாட்களில் பிறந்தவர்களுக்கும் மேற்கண்ட பலன்கள் பொருந்தும்...
அடுத்த பதிவில் பௌர்ணமியன்று செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளையும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N