எல்லா நோய்களையும் நீக்கும் திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்லா நோய்களையும் நீக்கும் திருத்தலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

தீராத நோய் நீக்கும் திருத்தலம்..

 ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் 6-க்குடையவர் பலம் பெற்று, சுகாதிபதி பலவீனமான நிலையில் இலக்னாதிபதி பலமின்றி இருந்தால், 6-க்குடைய தசா அல்லது அவரின் சாரம் பெற்றவரின் தசா அல்லது ஆறாம் அதிபதியுடன் இணைந்த (அ) பார்வை பெற்ற கிரகத்தின் தசா நடைபெறும் போது ஜாதகன் நோய் தொந்தரவுகள் உண்டாகும்.

நோய் தொந்தரவிற்கு மனிதன் உள்ளாகும்போது, என்னதான் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாலும்  ஜாதகருக்கு மனோ ரீதியான பலம் இருக்க வேண்டும். அப்போதுதான் நோய் முற்றிலுமாக நீங்கும் என்ற நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையே நாளடைவில் நலம் தரும். அத்தகைய மன ரீதியான பலத்தை தருபவை தொடர்ச்சியான வழிபாடுகள். அவ்வகையில் நோயினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை போக்குவதற்காக அருள்பாலிக்கின்ற வைத்திய நாதரை வழிபடுவது சிறப்பிற்குரிய ஒன்றாகும். வைத்தியநாதனின் சிறப்பிற்குரிய ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டம் புள்ளிருக்கு வேளூரில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் சிறப்பினை அங்கு செல்லும்போது நிச்சயம் உணர இயலும். பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மனிதனின் கர்மவினையை தகுந்த நேரத்தில் தருகின்ற நவகிரகங்களின் சிலைகள் திசை மாறி இருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கே நவக்கிரங்கள் அனைத்துமே எல்லாம் வல்ல இறைவனுக்கு பின்புறமாக ஒரே நேர்கோட்டில் நின்று வைத்திய நாதருக்கு பணிந்திருப்பதை இருப்பதைப் பார்க்க இயலும். இந்த தளத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நவகிரகங்களில் அங்காரகன் என்று அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவானுக்கு வெண்குஷ்டம் நோய் ஏற்பட்ட போது அவர் இத்தலத்தில் ஒரு மண்டலம் வழிபட்ட பின்பு நோய் நீங்கியது என்பது புராணத் தகவல்.
அதனால் இது செவ்வாய் தோஷத்திற்கும்  பரிகாரத் தளமாகும்.

அந்த வகையில் தொடர்ச்சியான நோய் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள் உங்களது பிறந்த நட்சத்திர வரக்கூடிய நாட்களில் அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகளில் சரணடைந்து முன் ஜென்ம  பாவங்களுக்காக மனம் வருந்தி மன்றாடுங்கள்.
அங்ககாரனின் நோய் நீக்கிய வைத்தியநாதர் உங்களுக்கும் ஆபத்பாந்தவனாக அருள் புரிவார்.
நம்பிக்கை கொண்டோர் அனுதினமும் ஐந்தாம் திருமுறையில் குறிப்பிடப் பட்டுள்ள வைத்தியநாதன் பதிகத்தை படித்து வாருங்கள். அல்லது அனுதினமும் கேட்டு வாருங்கள். கேட்பவர்களுக்காக இணைப்பினை கீழே தந்துள்ளேன்.
http://vallalarfiles.org/vspace/2014/1/23/thiruarutpa5065/V000031006F.mp3
நன்றிகளுடன்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138