புதன் வலுப்பெறுவதற்கான வாழ்வியல் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன் வலுப்பெறுவதற்கான வாழ்வியல் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

புத்திசாலிக்காரகனான புதனை நீங்கள் வலுப்படுத்த விரும்பினால்



✏️ ஒரு மனிதனுடைய புத்திசாலித்தனத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்.
அறிஞர் அண்ணா சொல்வதைப்போல் "கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு" என்பதற்கு ஏற்ப தன்னுடைய புத்தியின் உதவியால் அனைத்தையும் சாதித்து கொள்ளக்கூடிய திறன் படைத்தவர்கள்  புதன் வலுப்பெற்றவர்கள்.. #Iniyavan 

✏️ புதன் வலுப்பெற்றவர்கள் யாரையும் பகைத்துக் கொள்வதில்லை..
அதே நேரத்தில் யாரிடமும் ஏமாறுவதும் இல்லை. அதிகப்படியான கட்டுப்படுத்த முடியாத கோபத்தை தன்னிடத்தே அவர்கள் ஒருபோதும் கொண்டிருப்பதில்லை.

🌼 புதன் தரும் புத்திசாலித்தனத்தை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்வது மட்டுமே நலம் தரும். #Iniyavan

✏️ நீங்கள் ஆக்ரோஷமாக முரட்டுத்தனமாக செயலாற்றும் போது உங்களுடைய புத்தி அங்கே செயல்படுவதில்லை. நீங்கள் ஆக்ரோஷம் உள்ளவராகவும் கோபமானவராகவும் இருப்பின் புத்தி நாதன் புதன் உங்களுக்கு பலன் தருவதில்லை. அதாவது உங்களது புத்தி அங்கே செயல்படுவதில்லை.

🌺 புதன் வலுப்பெற்றவர்களை ராஜதந்திரிகள் என்று கூறலாம். அவர்கள் யாருடனும் சண்டை போடுவதில்லை. மாறாக தன்னுடைய தரப்பு நியாயங்களை புள்ளிவிவரங்களுடன்  எடுத்து வைத்து எதிர்தரப்பினையும் ஏற்றுக் கொள்ள வைப்பதில் கில்லாடிகள் அவர்கள். #Iniyavan

🌼 நீங்கள் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் நடந்து கொள்ளும்போது பலதரப்பட்ட உறவுகளை எதிரியாக்கி கொள்வீர்கள்.
புதன் வலுப்பெற்றவர்கள் யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. அந்த வகையில் உங்களது வாழ்க்கையில் புதனை வலுப்படுத்த விரும்பினால் யாரையும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல்  நீங்கள்  புத்திசாலித்தனமாகவும் சாதுர்யமாகவும் நடந்துகொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். #Iniyavan

✏️ உடல் பலம், முன்கோபம்,துணிவு ஆகியவற்றை தரக்கூடிய செவ்வாயின் பலத்தை விட மூளையின் உதவியால், எவரையும் வெல்லக்கூடிய திறனையும், எந்த ஒரு சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய புதன் தரும் பலம் வாய்ந்தது என்பதை உணரவேண்டும்.

🌼 செவ்வாய் மற்றும் சனி வலுப்பெற்று நிலையில் இருக்கக்கூடிய உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால்  புதன் பலம் பெற்றவர்கள் உடல் உழைப்பின்றி புத்திசாலித்தனத்துடன் செளகர்யமாக பிழைத்துக் கொள்வார்கள்.
இன்றைய உலகில் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்து பணிகளும் புதனுடைய காரகத்துவம் சார்ந்ததே என்பதை உணருங்கள். #Iniyavan

🌼 நவகிரகங்களில் புதனுக்கு சொல்லப்பட்ட கதையை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அவருக்கு பெற்றோரின் வளர்ப்பு முறையாக இருந்திருக்காது. யாருடைய வழிகாட்டுதலும் இருந்திருக்காது.
அவர் சுயமாக தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட புத்திசாலி நபர். அவரை பாதுகாக்கவோ அல்லது வழிநடத்த யாரும் தேவை இல்லை.
அந்தவகையில் யாருமற்ற அனாதை குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியாக அவருடைய கல்வி செயல்பாடுகளுக்கு உதவி செய்வது உங்களுடைய ஜாதகத்தில் புதனை வலுப்படுத்த உதவும். (ஏனெனில் கல்விக்காரகன் புதன்) இளம் குழந்தைகளை சுட்டிக்காட்டக் கூடிய கிரகமும் புதனே. #Iniyavan

✏️ அவர் யாரையும் ராஜாவாகவும் ஏற்பதில்லை. யாரையும் ஏளனமாகவும் பார்ப்பதில்லை. அதனால்தான் புதனுடைய இரு ஆதிபத்திய வீடுகளான மிதுனம் மற்றும் கன்னியில் வேறு எந்த கிரகமும் பலம் பெறுவதில்லை.
புதனுடைய இரு வீடுகளில் வேறு எந்த கிரகமும் உச்சம் பெறவதில்லை. புத்திசாலித்தனத்தின் முன் மற்ற அனைத்தும் சர்வசாதாரணம் என்பதை உணர்த்தவே தன்னுடைய சொந்த வீட்டிலே உச்சம் பெற்ற நிலையில் இருக்கிறார்.
 
🌼 புதன் வலுப்பெற்றவர்கள் பிறருடைய உதவியின்றி எந்த ஒரு விஷயத்தையும் தானாகவே கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறருக்கு தெளிவாக புரிய வைப்பதில் வல்லவர்கள்.
அந்த வகையில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் உங்களுடைய  புதனை வலுப்படுத்த இயலும். #Iniyavan

✏️ புதனுடைய இரு ராசிகளான மிதுனம் மற்றும் கன்னிக்கு நேரெதிர் வீடுகள் குருவின் தனுசு மற்றும் மீனம்.
குருபகவான், கொழுப்பு அமிலம் அதிகம் உள்ள உணவினை சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்.
குரு வலுத்து லக்ன ராசியுடன் தொடர்பு கொள்ளும்பொழுது உடற்பருமன் அவர்களுக்கு அதிகமிருக்கும். உடற்பருமன் அதிகம் இருக்கும் போது மந்தத்தன்மை இருக்கும். உடலில் மந்தத்தன்மை அதிகரித்தால் புத்திசாலித்தனம் என்பது குறைந்து போகும். அந்த வகையில் உணவில் கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொண்டு, புத்திசாலித்தனத்தை அதிகரிக்க உதவும் கீரைகள், பச்சை காய்கறிகள்
(பச்சைப் பயிறு) போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலே சொல்லப்பட்டுள்ள கீரைகள், பச்சை காய்கறிகள், பச்சைப்பயிறு போன்றவை புதனுடைய காரகத்துவத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Iniyavan

✏️ புதன் ஒரு இடத்தில் இருக்கக்கூடிய தகவலை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு கிரகம்.
தகவல் தொழில்நுட்பம்,செய்தி துறை, (media, fb, whatsapp, youtube) பத்திரிக்கை போன்ற அனைத்தும் புதனுடைய காரகத்துவத்தில் அடங்கும். தனிப்பட்ட நோக்கங்களுக்காக தவறான செய்தியை பரப்புவது, வதந்திகளை பரப்புவது, வேடிக்கையாக பொய்யான தகவலை பரப்புவது,  ஒரு செய்தியை முன்னுக்குப் பின்னாக திரித்து வெளியிடுவது போன்றவை புதனின் அருளை உங்களிடத்தில் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

✏️ இந்த உலகில் கண்டுபிடிக்கக் கூடிய புதுப்புது விஷயங்கள் அனைத்தும் முதன்முதலில் புத்தியில் தோன்றியவைதான்.
அந்த வகையில்  ஒரு மனிதனுக்கு புத்திசாலித்தனத்தை வழங்கக்கூடிய புத்தகங்களை படிப்பது நம்முடைய புதனின் நிலையை வலுப்படுத்திக் கொள்ள  உதவும்.
படிப்பதோடு  மட்டுமின்றி படித்த பயன் தரக்கூடிய விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் உங்களது புத்திக்காரகன் புதனை வலுப்படுத்த உதவும். #Iniyavan

😎 புதன் வலுப்பெற்றவர்கள் புதுப்புது  விஷயங்களை அறிந்து கொள்வதில் கில்லாடிகள்.
தங்களை எப்பொழுதும் அப்டேட் ஆக வைத்துக் கொள்பவர்கள். அந்த வகையில் எல்லா விஷயங்களிலும் நீங்கள் அப்டேட் ஆக இருப்பதும் உங்களுடைய புதனை வலுப்படுத்த உதவும்.

🌼 புதன் காலபுருஷ லக்கினத்திற்கு 12ம் இடமான மீனத்தில் நீசம் பெறுகிறார்.
12ஆம் இடம் ஒருவரின் உறக்கம் மற்றும் போக சுகங்களை சுட்டிக் காட்டக்கூடிய இடம். நீங்கள் உறக்கத்திற்கு அதிகப்படியான நேரம் கொடுக்கும் போது உங்களிடத்தில் சோம்பல் தன்மை ஏற்பட்டு புத்திசாலித்தனம் குறைந்து போகும். அந்த வகையில் உறக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து  உங்களுடைய புதனை engage ஆக வைத்துக் கொள்ளுங்கள். #Iniyavan
✏️ புதன்கிழமை தோறும் தவறாது, மகாபாரத கதா நாயகன்  கண்ணன் மற்றும் பெருமாள்  வழிபாடு செய்து வருவது,  தினமும் அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு வருவது (கேட்பதை விட நீங்களே சொல்வது சிறப்பு)
புதன்கிழமை தோறும் பசுமாட்டிற்கு கீரையை உணவாக அளிப்பது,
உங்களுக்கு நன்கு பாண்டித்தியம் பெற்ற விஷயங்களைப் பற்றி மற்றவர்கள் சந்தேகங்கள் கேட்கும் போது அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வது, உங்களது புதனை நிச்சயம் வலுப்படுத்தும்.
நாளடைவில் நீங்கள் புத்திசாலியாகுவீர்கள்..
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f