இலக்னம் மற்றும் ராசிக்கு ஏழாம் வீட்டுடன் வலுப்பெற்ற சனி தொடர்பு கொள்ளும்பொழுது வயது, தோற்றம், ஜாதி, இனம், கல்வித்தகுதி, பொருளாதார நிலை இவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அமையக் கூடிய வாழ்க்கைத் துணை அமைய வாய்ப்புண்டு.
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை வாழ்க்கை துணையின் மீது ஜாதகருக்கு ஒருவித நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும்..
வரக்கூடிய வாழ்க்கைத் துணை பொறுப்பானவராகவும், விசுவாசமான வராகவும், நல்லவராகவும் இருப்பார்.
மணவாழ்க்கையைப் பொருத்தவரை இல்லற வாழ்க்கையானது கட்டுப்பாடுகள் நிறைந்த ஒன்றாகவும் அன்பு, அரவணைப்பு, ஈர்ப்பு போன்ற விஷயங்கள் மற்ற தம்பதியினரை விட சற்று குறைவாகவும் இருக்கக் கூடும். திருமண வாழ்வில் சுவாரசியமான விஷயங்கள், மகிழ்ச்சி குறைவாக இருப்பினும் ஒட்டுமொத்த மண வாழ்க்கை நீண்ட காலம் உடையதாகவும், நிறைவானதாகவும் இருக்கக்கூடும்.#Iniyavan
மண வாழ்க்கை ஓரளவு கண்ணியம் நிறைந்ததாக இருப்பினும், இருவருக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறைவாகவே இருக்கும்.
ஜாதகருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை அவருடைய நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடியவராகவும், குடும்பப் பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து கொள்பவராகவும் இருப்பார்.#Iniyavan
ஜாதகரை விட ஜாதகருக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை உயர்வான தகுதியைப் பெற்றிருந்தாலும் ஜாதகரை மதித்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பிலேயே அவருக்கு இருக்கும். ஆனால் அதனை ஜாதகர் ஒரு பொழுதும் புரிந்து கொள்வதில்லை.
இங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆகும்.
7-ஆம் வீட்டில் சனி இருக்கும்பொழுது இலக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் அதிகப்படியான சுயநல விரும்பியாக இருப்பார்.தன்னுடைய குடும்பம் தன்னுடைய மனைவி, தன்னுடைய குழந்தைகள் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதால் வாழ்க்கைத் துணைக்கு இவர் மீதான பிரியம் மற்றும் ஆர்வம் படிப்படியாக குறைந்து போக வாய்ப்புண்டு. ஏழாம்வீட்டில் சனி இருக்கும் பொழுது ஜாதகருக்கு சுய நல எண்ணங்கள் அதிகம் இருப்பின் அவற்றைக் குறைத்துக் கொள்வது மட்டுமே மணவாழ்க்கைக்கு நல்லதாகும். ஏழில் இருக்கக்கூடிய சனி இலக்னத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு பொறுப்புகளை தட்டிக்கழிப்பவராகவும் ரத்த உறவுகளிடத்தில் கூட எவ்வித பந்த பாசமின்றி இருப்பதால் ஜாதகர் வாழ்க்கை துணையின் விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடும். #Iniyavan
தாம்பத்திய வாழ்க்கையிலும் ஒருவருக்கு விருப்பம் இருந்து, மற்றொரு ஆர்வம் இல்லாத சூழல் ஏற்படக்கூடும்.
ஏழில் சனி இருக்கும் போது வாழ்க்கைத்துணை எவ்வளவு நியாயமானவராகவும்
பொறுப்பானவராகவும் நடந்து கொண்டாலும் ஜாதகர் அதை உணராமல் அலட்சியத்துடன் செயல்படுவதால் நாளடைவில் வாழ்க்கைத் துணைக்கு இவர் மீதான அன்பு, பிரியம், ஈடுபாடு போன்றவை குறைந்து போகக்கூடும்.
ஏழில் சனி இருக்கும் போது வாழ்க்கை துணையிடம் எவ்வளவு நல்ல குணங்கள் தென்பட்டாலும் இவருக்கு ஒன்றும் தென்படுவதில்லை.
ஏழில் சனி நின்ற ஜாதகர் அதை முழுமையாக உணர்வதும் இல்லை. எனக்கு அமைந்த வாழ்க்கை துணையிடம் இது சரியில்லை, அது சரியில்லை என்று குறைக் சொல்லக்கூடியவராகவும் எதிலும் திருப்தி அடையாதவராகவும் இருப்பார்.
ஏழில் சனி இருக்கும் பொழுது வாழ்க்கைத் துணையிடம் காணப்படக்கூடிய குறைகளுக்கு முக்கியத்துவம் தராமல் நிறைகளுக்கு முக்கியத்துவத்தை அதிகமாக தரும்பொழுதும்,
தன்னிடத்தில் இருக்கக்கூடிய இயல்பான சுயநல எண்ணங்களை குடும்ப வாழ்க்கையிலாவது அறவே ஒழித்து செயல்படும் போது மண வாழ்க்கை ஆத்மார்த்தமானதாக அமையும்.#Iniyavan
வலுப்பெற்ற சுபக்கிரகத்தின் தொடர்பு ஏழாம் வீட்டிற்கு இருப்பது, ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருப்பது, களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது இவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
7-ஆம் வீட்டில் சனி இருக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை கடைபிடிப்பதுடன், இறை வழிபாட்டினைப் பொறுத்தவரை எந்த வீட்டில் சனி இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதிக்குரிய கிழமையில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வதும், சனிக்கிழமைதோறும் வரக்கூடிய மகா பிரதோஷ வழிபாட்டினில் கலந்து கொள்வதும் மணவாழ்க்கைக்கு நல்லதாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741