சனி ஒளியற்ற இருளைச்சுட்டிக் காட்டக் கூடிய கிரகம். வாழ்வில் நடக்கும் மங்கலம் இல்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம்.. சனி பகவானுக்கு முற்றிலும் எதிரான கிரகம் சூரிய பகவானாவார்..
சனி வலுப்பெற்ற துலாம் ராசியில் சூரியன் வலுவிழக்கிறார்.
சூரியன் வலுப்பெற்ற மேஷ ராசியில் சனி வலுவிழக்கிறார்.
சனியின் எதிர்மறை காரகத்துவங்களை ஒழிக்க சூரியனுடைய நேர்மறை காரகத்துவங்களை உங்களிடத்தில் கொண்டு வாருங்கள்..
அதிகாலையில் தினமும் சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள்..
ஒவ்வொரு கணத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்..
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக வீட்டில் தீபம் ஏற்றுங்கள்..
உங்கள் இல்லத்திலும் வாழ்க்கையிலும் ஒளியைக் கொண்டு வாருங்கள்..
உங்கள் வாழ்க்கை ஒளி பெறத் தேவையான முயற்சிகளைச் செய்யுங்கள்.. #Iniyavan
சனி தூய்மையின்மை, அழுக்கு போன்றவற்றிற்கு காரக கிரகம் உங்கள் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்..
இல்லம் மட்டுமின்றி உங்கள் உள்ளமும் தூய்மையாக இருக்கட்டும்..
சனி மந்த கிரகம்
ராசிகட்டத்தில் முழுமையாக வலம் வருவதற்கு சனிக்கு 30 ஆண்டுகள் பிடிக்கும்.இதனால்தான் தடை, தாமதம், சோம்பல் போன்றவற்றிற்கு சனி காரகத்துவம் பெறுகிறார்..
முடிந்தவரை எல்லா விஷயங்களையும் வேகமாக செய்யுங்கள்.
வீட்டிலும் சரி, வேலை பார்க்கக் கூடிய இடத்திலும் சரி ,உங்களுடைய பொறுப்புகளை தடை, தாமதம் இன்றி விரைந்து செய்யுங்கள்.
ஒரு விஷயத்தை மிக மெதுவாக செய்பவர்கள், ஒரு செயலுக்கு நீண்ட காலவிரயத்தை தருபவர்களுக்கு அவர்கள் செயல்களை விரைந்து முடிக்க உதவுங்கள்..
சனி மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ,யாருமற்ற ஆதரவற்றவர்களை சுட்டிக் காட்டக் கூடிய கிரகம்
நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் அல்லது சக்கர நாற்காலி இவற்றினில் உங்களால் முடிந்த ஒன்றை வாங்கித் தாருங்கள்.
பேருந்துகளில் பயணிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு உட்கார்வதற்கு இடம் தாருங்கள்..
ஒரு காரியத்தின் பொருட்டு வரிசையில் இருக்கும் பொழுது மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உங்கள் முன் செல்ல அனுமதியுங்கள்..
வீடற்றோர், ஆதரவற்றோர் பொது இடங்களில் படுத்து இருப்பவர்களுக்கு அவர்கள் குளிர் தாங்கும் பொருட்டு போர்வை வாங்கித் தாருங்கள்..#Iniyavan
முதியோர் இல்லங்கள் அனாதை இல்லங்களுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று உங்களால் முடிந்தவற்றை செய்து வாருங்கள்.
வசதி இருப்பின் அவர்களின் ஒருநாள் உணவிற்கான பொறுப்பினை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
சனி தடைகளுக்கு காரக கிரகம்.. மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்காதீர்கள்..
நீங்கள் பயணிக்கும் பாதையில் முள், கற்கள், போன்ற தடைகள் இருந்தால் அவற்றை தூரம் ஒதுக்கி போட்டு செல்லுங்கள்.
முடிந்தவரை பின் வருபவர் யாரேனும் செய்யட்டும் என்று கடந்து செல்லாதீர்கள்
நீங்கள் முதலாளியாக இருக்கக்கூடிய பட்சத்தில் பிறருக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்யாதீர்கள்.
அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை தக்க தருணத்தில் வழங்கிவிடுங்கள்..
சனி நமது பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிக்க விடாமல் தடை செய்யக்கூடிய கிரகம்..
உங்கள் வாழ்க்கையின் குறிப்பிட்ட நல்ல விஷயத்திற்கான உங்களின் முயற்சியில் வரும் தொடர்ச்சியான தடைகள் தற்செயலாக நடந்து விடுவதில்லை.
குறிப்பிட்ட செயலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சினை வருவதை உங்களால் உணர்ந்து இருக்க இயலும். ஏனெனில் உங்களின் தீர்க்கப்படாத பழைய கர்மாவினால் இது சனிபகவானால் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாகும்.
முடிந்தவரை நிகழ்கால வாழ்க்கையில் புண்ணியச் செயல்களை அதிகப்படுத்துங்கள்.
காஞ்சி மஹா பெரியவர் அவர்களே "ஒரு பாவச் செயலை தெரிந்தே செய்ய நேர்ந்தால் அதற்கு ஈடாக நான்கு புண்ணியச் செயல்களை செய்து விடவேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.
உங்களின் எவ்வளவு நல்ல புண்ணியச் செயல்களுக்கான பலன்களை சனி பகவானால் தடை செய்திட இயலும்?
மனிதர்களுக்கு மட்டுமல்ல,
அஃறிணை உயிரினங்களுக்கு உணவளிப்பது கூட புண்ணியம்தான் மறந்து விடாதீர்கள்..
சனி சந்தேக புத்தி, நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை,எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கான காரக கிரகம்..
உறவுகளை சந்தேகப்படாதீர்கள். உங்களை யாரிடமும் ஒப்பிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
கடினமான நேரங்களையும் திடமான நம்பிக்கையோடு கடந்து செல்லுங்கள்.
முடிந்தவரை எந்த சூழ்நிலையும் எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்..
நீங்கள் முழு நம்பிக்கையோடு, முயற்சியோடு எதிர்பார்த்த விஷயம் எதிர்மறையாகவே இருந்தாலும் அடுத்த முறையும் நம்பிக்கையோடு செயல்படுங்கள்..
உங்களுடைய இஷ்ட தெய்வத்தை முழுமையாக நம்புங்கள்..
தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு அவரிடம் உங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து வாருங்கள்..
உங்களின் முழு முயற்சிக்கான பலன் கிடைக்காது போகும் பொழுது உங்களுடைய பழைய கர்மா ஒன்று தீர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரக கிரகம் சனி ஆவார்.
எவ்வித சுபர் தொடர்பும் இன்றி மனோக்காரகன் சந்திரனுடன் தொடர்பு பெற்ற சனி சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் மனம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்குவார்.
உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள் உங்களை சுற்றி இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள முற்படுங்கள்.
அவர்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வாருங்கள்.
உங்களால் அவர்களுடைய தேவை பூர்த்தியாகும்கும் பட்சத்தில், இறைவனால் உங்களுடைய தேவைகளும் நிச்சயம் பூர்த்தியாகும்.. நம்புங்கள்...
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed..
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741