இலக்னாதிபதியின் முக்கியத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்னாதிபதியின் முக்கியத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மார்ச், 2024

இலக்னாதிபதி வலுத்திருப்பது நல்லது ஏன்?



ஜாதகரின் ஒட்டுமொத்த ஆளுமை, தன்னம்பிக்கை, செயல்படும் திறன், ஒரு பிரச்சனையை அணுகக் கூடிய விதம், ஒரு நல்லதை அனுபவிக்க கூடிய தன்மை போன்ற எல்லா விஷயங்களையும் இலக்னாதிபதியே குறிப்பார்.

பொதுவாக இலக்னம், இலக்னாதிபதி வலுத்தவர்கள் தோல்விகளால் பெரிய அளவில் துவண்டு விட மாட்டார்கள்.
எந்த விஷயத்தாலும் பெரிய அளவில் பாதிப்புகளை அடைந்து விட மாட்டார்கள்.

தொடர்ச்சியாக கவலை தரக்கூடிய சம்பவங்களையே  நினைத்து நினைத்து வருத்தப்படுபவர்களுக்கு இலக்னாதிபதி பலவீனமாக இருப்பார்.

இலக்னாதிபதி வலுத்தவர்கள் கவலைகளை கடந்து செல்பவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திற்காகவும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாத மனநிலை படைத்தவர்களாக இருப்பார்கள்.
இலக்னத்திற்கு ஆகாத அவயோக கிரகத்தின் தசாவை எதிர்கொள்வதாக எடுத்துக் கொண்டால் இலக்னாதிபதி வலுத்தவர்கள் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான வழியைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.
பாதிப்பின் வீரியம் அதிகமாக இருப்பினும் மனதளவில் தைரியம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் இலக்னாதிபதி வலுவில்லாதவர்களுக்கு மனதளவில் தைரிய குறைவு அதிகம் இருக்கும்.
இந்த தைரிய குறைபாடு ஜாதகரின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும். #Iniyavan 

இலக்னத்திற்கு நன்மையை தரக்கூடிய ஒரு கிரகத்தின் தசா நடைபெற்றாலும்
ஜாதகர் அனுபவிக்க கூடிய நற்பலன்களில் இலக்னாதிபதி வலுத்தவருக்கும், இலக்னாதிபதி வலுவில்லாதவர்க்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு யோக தசா தரக்கூடிய நன்மைகளை இலக்னாதிபதி வலுத்தவர் பெறக்கூடிய அளவிற்கு வலுவில்லாதவர்  பெற மாட்டார். (அ)பெற முடியாத சூழ்நிலையில் இருப்பார்.

உதாரணத்திற்கு இரு நண்பர்கள் போட்டித் தேர்வு எழுதுகிறார்கள்.இருவருக்கும் அவர்களின் ஜாதகரீதியாக யோக கிரகத்தின் தசா நடைபெறுகிறது.
இருவரில் ஒருவருக்கு இலக்னாதிபதி வழுத்த நிலையிலும், மற்றொருவருக்கு பலவீனமாகவும் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இருவருமே போட்டி தேர்வில் வெற்றி பெற்றாலும் இருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய வேலையின் தன்மை, வேலையின் தரம், வேலை பார்க்கக்கூடிய இடத்தில் காணும் சூழல் போன்றவற்றில் வித்தியாசம் இருக்கும். இலக்னாதிபதி வலுவில்லாதவரை விட இலக்னாதிபதி வலுத்தவருக்கு அவர்  அனுபவிக்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் மேம்பட்ட  தரம் இருக்கும்.திருப்திகரமான மனநிலை இருக்கும்.ஆனால் இலக்னாதிபதி வலுவில்லாதவரை கேட்டால் அவர் தான் பார்க்கக்கூடிய வேலை விஷயங்களில் ஆயிரம் குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவராக இருப்பார்.
இலக்னாதிபதி வலுத்தவர் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் இலக்னாதிபதி வலுவில்லாதவர் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் மாறுபட்ட கோணங்கள் இருக்கும்.#Iniyavan
இதைத்தான் இலக்னம் மற்றும் இலக்னாதிபதியின் வலு மற்றும் வலுவின்மைக்கு ஏற்பவே ஜாதகர் எந்த ஒரு பிரச்சனையும் அணுகக்கூடிய ஆற்றலும் நல்லதை அனுபவிக்கும் தன்மையும் இருக்கும் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

இலக்னத்தின் வலு என்பது இலக்னத்தோடு  இயற்கை சுப கிரகங்கள் தொடர்பில் இருப்பதே ஆகும்.

இலக்னம் மற்றும் இலக்னாதிபதி வலுவில்லாத தன்மையில் இருப்பவர்கள் அனுதினமும் தங்களுடைய இலக்னாதிபதியை வலுப்படுத்துவதற்கான 
வழிபாடுகளிலும் வாழ்வியல் பரிகாரங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இலக்னாதிபதியை வலுப்படுத்த என்ன செய்யலாம்?

அனுதினமும் இலக்னாதிபதியின் அதிதேவதை வழிபாட்டை கடைபிடித்து வருவது, இலக்னாதிபதிக்குரிய காயத்ரி மந்திரத்தை அனுதினமும்  ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் ஜெபித்து வருவது இலக்னாதிபதிக்குரிய நவரத்தினத்தினை  அணிந்து கொள்வது நல்லது.இலக்னாதிபதிக்குரிய தானியம் எதுவோ அதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இலக்னாதிபதியின் கிழமைக்குரிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது சிறப்பு.இலக்னாதிபதிக்குரிய நைவேத்தியம் தயாரித்து அதனை ஆலயங்களில் பிரசாதமாக வழங்கலாம்.

இலக்னாதிபதிக்குரிய நிறத்தை தம்முடைய அன்றாட உபயோகங்களில் பயன்படுத்தி வரலாம்.
இலக்னாதிபதிக்கு உரிய விருட்சத்தை வளர்த்து பராமரித்து வருவது நன்மை தரும்.  எல்லாவற்றிற்கும் மேலாக இலக்னக் காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சூரிய பகவான் வழிபாட்டை அனுதினமும் முறையாக கடைபிடித்து வருவது நலம் தரும்.  

ஒரு அவயோக கிரகத்தின் தசாவை எதிர்கொள்ளும் போது அந்த கிரகங்களுக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதை விட இலக்னாதிபதிக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. #IK 

இலக்னாதிபதி வலுவிழந்தவர்கள் இயல்பாகவே  தாழ்வு மனப்பான்மையுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆகவே தன்னை நேர்மறை எண்ணங்கள் கொண்டவராக வைத்துக் கொள்வதில் இவர்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். இலக்னாதிபதி வலுவிழந்தவர்கள் தன்னம்பிக்கை தரக்கூடிய நாவல்களை (எழுத்தாளர்கள் பாலகுமாரன், இறையன்பு உள்ளிட்டோர் எழுதிய நூல்கள்) வாசிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.#Iniyavan

எப்போதெல்லாம் மனக் கவலைகளுக்கு ஆட்படுகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை தரக்கூடிய கதைகளை கேட்டு வருவது, தன்னம்பிக்கை தரக்கூடிய திரைப்படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது நல்லது.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138