ஆதிபத்ய காரகத்துவ முக்கியத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதிபத்ய காரகத்துவ முக்கியத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 செப்டம்பர், 2022

ஆதிபத்யமும் காரகத்துவமும்

ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பன்னிரு வீடுகள் சுட்டிக்காட்டும் விஷயங்களை ஆதிபத்தியம் என்றும், ஒன்பது கிரகங்கள் சுட்டிக்காட்டக் கூடிய விஷயங்களை காரகத்துவம் என்றும் கூறுகிறோம்.
தனி மனிதனின் வாழ்வில் நடக்கக் கூடிய அனைத்து சம்பவங்களும் ஆதிபத்தியம் காரகத்துவத்துடன் தொடர்புடையதே.
இதனை குறிப்பிட்ட கிரகத்தின் தசா புக்தி நடக்கும்போது அந்த கிரகம் பெற்றுள்ள  ஆதிபத்தியம்  மற்றும் காரகத்துவம் சார்ந்த விஷயங்களே சம்பவங்களாக வெளிப்படுவதை உணர இயலும்.
தனி மனிதன் ஜாதகரீதியாக கேட்க கூடிய அனைத்து கேள்விகளும் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்துடன் தொடர்புடையதே ஆகும். அந்த வகையில் ஜாதகர் கேட்கக்கூடிய கேள்வி எந்த ஆதிபத்யத்தினை சார்ந்தது, அந்த கேள்விக்கு உரிய காரக கிரகம் என்ன என்பதையும் பார்த்து பலன் சொல்வதே சிறந்ததாகும். #Iniyavan 

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் தன்னுடைய மகன் எவ்வாறு படிப்பான் என்ற கேள்வியை கேட்டால் மகனுடைய ஜாதகத்தில் நான்காம் பாவகம் எப்படி இருக்கிறது? நான்காம் அதிபதி எந்த நிலையில் இருக்கின்றார் என்பதையும் அதோடு கல்விக்குரிய காரக கிரகங்களான புதன் மற்றும் குருவின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தே பலன் சொல்ல வேண்டும்.
நான்காம் இடம் பெற்றுள்ள சுபர் மற்றும் பாபர் தொடர்பு, நான்காம் அதிபதியின் பலம் மற்றும் பலவீனம், இதோடு காரகர்களான புதன் மற்றும் குருவின் நிலை இவற்றின் ஒட்டுமொத்த பலம் மற்றும் பலவீனத்தை ஏற்பவே  ஜாதகரின் கல்விச் செயல்பாடுகள் இருக்கும்.
அடுத்ததாக ஒருவர், நண்பர்களின் ஆதரவு எனக்கு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை கேட்டால் நண்பர்கள், கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய ஏழாமிடம், ஏழாம் வீட்டு அதிபதியின் நிலை, இவற்றுடன் நட்பிற்கு காரகத்துவம் பெற்ற கிரகமான புதன் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்தே பலன் சொல்ல வேண்டும்.
அதேபோல் உறவுகளை சுட்டிக் காட்டக்கூடிய கேள்வி என்றால் எந்த உறவோ, அந்த உறவினை சுட்டிக்காட்டும் வீடு, அந்த வீட்டு அதிபதியின் நிலை இவற்றோடு காரக கிரகம் எதுவோ அவற்றின் நிலையையும் பார்த்தே பலனை கணிக்க வேண்டும்.#Iniyavan
ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட விஷயத்திற்கான ஆதிபத்தியமும் ,அந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய காரக கிரகமும் நல்ல நிலையில் இருக்கும்போது ஜாதகர் அந்த விஷயங்களில் மேலான பலனைப் பெற கூடியவராக இருப்பார்.
உதாரணத்திற்கு வாழ்க்கைத்துணையை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாம் இடம் 7-ஆம் வீட்டு அதிபதி போன்றோர் நல்ல நிலையில் இருந்து, காரக கிரகமான சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்கும்போது ஜாதகர் 
வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக நல்ல பலன்களைப் பெற கூடியவராக இருப்பார்.
ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் ஒன்று வலு குறைந்து, மற்றொன்று வலுப்பெற்றால்  அதற்கேற்ப பலன்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
குறிப்பிட்ட விஷயத்திற்கான ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் என இரண்டுமே பலவீனம் அடையும் பொழுது மட்டுமே ஜாதகருக்கு அது குறித்த விஷயங்களை பெறுவதில் மிகுந்த போரட்டங்கள் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஆதிபத்தியமும் காரகத்துவம் இரு கண்களைப் போன்றதாகும்.
இவற்றில் தெளிவு ஏற்படும் பொழுது நாளடைவில் பலன்களில் துள்ளியத் தன்மை மேலோங்கும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/Jbup09JXYReCCX6zfYjzvV