நட்சத்திரங்களின் கர்மா அடிப்படையில் ரோகிணி,உத்ராடம் மற்றும் பூராடம் போன்றவை புத பகவானின் கர்ம பதிவினை கொண்ட நட்சத்திரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒரு கிரகம் ரோகிணி,உத்ராடம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் இருந்து தசா புக்தி நடக்கும் போது புதனின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு நன்மையோ அல்லது தீமையோ நடக்க வாய்ப்புண்டு.
புதன் லக்னம் யோகராக இருந்து சுபர்களின் தொடர்பை பெரும்பொழுது புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலனும் புதன் லக்ன அவயோகராக இருந்து பாபர்களின் பார்வையில் இருக்கும் போது புதனின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு தீய பலன்களும் நடக்கும்.
பாபக்கிரக பார்வையில் புதன் இருக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்:-
புதனின் காரகத்துவம் எனும்பொழுது கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கல்வியில் தடை உண்டாகுதல், படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத வேறு வேலைகளில் ஈடுபடுவது அதன் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு.
"புத்திக் காரகன்" புதன் என்பதால் புத்தியை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஜாதகர் பிரச்சனைகளில் சிக்குதல்.
மேற்கண்ட நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்து தசாபுக்தி நடத்தும் பொழுது புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் வரும்போது பெரிய அளவில் முதலீடு இன்றி செய்து வருவது நல்லதாகும்.
புதனுடைய காரத்துவ அடிப்படையில் உள்ள தொழிலில்களில் ஜாதகருக்கு நாட்டம் உண்டாகும்.
எ-டு)கணிதம், ஜோதிடம் சம்பந்தப்பட்ட போதிக்கும் தொழில்கள், தகவல் தொழில்நுட்பம், வங்கிப்பணி,ஓவியம் சிற்பம் போன்றவற்றில் விருப்பம் ஏற்படுதல், பெருமாள் வழிபாடுகளில் நாட்டம்.
வியாபாரம்,தரகு, கமிஷன் காண்ட்ராக்ட் போன்ற வேலைகளுக்கும் புதனே காரகத்துவம் பெறுவதால்
வியாபாரத்தில் தவறுதலான முடிவுகளை எடுத்து அதன் மூலம் பெரிய இழப்புகளை சந்தித்தல்,
புதனின் காரகத்துவங்களான பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் உள்ளாகுதல் தன்னுடைய பேச்சே தனக்கு வினையாக மாறுதல்..
தாய்மாமன்,நண்பர்கள் மற்றும் இளம்பெண்களை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம் என்பதால் அந்த வகையில் ஜாதகருக்கு கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகள் வர வாய்ப்பு..
புதன் கல்விக்குரிய கிரகமாக இருப்பதால் கல்வி சம்பந்தப்பட்ட மேற்படிப்புகளை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. மற்றவர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு தவறான கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகலாம். அதன் மூலம் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு.
நோய் பாதிப்புகளை பொறுத்தவரை நரம்புக் கோளாறு நரம்பு தளர்ச்சி வாதம் சம்பந்தப்பட்ட வியாதிகள், வலிப்பு நோய், நரம்பு பாதிப்பு,
கழுத்து, முதுகு, மார்பு போன்றவற்றில் வாய்வு பிடிப்பு, சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், புத்தி பேதலித்தல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
சுய ஜாதகத்தில் புதன் லக்ன யோகராக இருக்கும் பொழுது புதனுக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது ஆகும். அதே நேரத்தில் புதன் லக்ன அவயோகராக இருக்கும் போது, லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளையும் புதனுக்குரிய பீரிதி முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138