#Iniyavan
ஒருவருக்கு எந்த விஷயத்தில் அதிக ஆர்வம் , அதிக ஆசை இருக்கும் என்பதை பொருத்தவரையில் அவரின் ஆழ்மனம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏனெனில் ஆழ்மனதில்தான் ஆசை என்பது துளிர்விடவே ஆரம்பிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை 5-ஆம் இடம் என்பது ஒருவரின் ஆழ்மனதினை சுட்டிக்காட்டக் கூடிய இடமாகும். அந்த வகையில் எந்த கிரகம் 5-ஆம் இடத்துடன் அதிக தொடர்பு கொண்டு இருக்கிறதோ,
அந்த கிரகம் இலக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறதோ அது சார்ந்த விஷயத்தில் ஜாதகனுக்கு அதீத ஆர்வம் இருக்கும்.
உதாரணத்திற்கு 12ஆம் வீட்டிற்கு உரியவர், ஐந்தாம் இடத்தோடு வலுப்பெற்ற நிலையில் தொடர்பு கொண்டிருந்தால் 12 ஆம் இடம் குறிக்கக்கூடிய விஷயங்களான படுக்கையறை இன்பம், தாம்பத்திய சுகம், நல்ல தூக்கம், வரைமுறையின்றி நிறைய செலவு செய்து எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது குறித்த ஆசைகள் ஜாதகரிடம் அதிகம் இருக்கும்.
இதோடு ஐந்தாம் அதிபதி ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார். ஐந்தாம் அதிபதி எந்த கிரகத்துடன் இணைந்து இருக்கின்றார் என்பதை பொருத்தும் ஜாதகரின் ஆசைகள் இருக்கும்.
இதுமட்டுமின்றி போகக்காரகன் என்று அழைக்கப்படக்கூடிய ராகு, ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கின்றார் எந்தெந்த கிரகங்களின் தொடர்பில் இருக்கின்றார் என்பதை பொருத்தும் ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் எவற்றின் மீது அலாதியான விருப்பம் இருக்கும் என்பதை அறிந்திட இயலும்.
அந்த வகையில் இலக்னத்தில் ராகு இருப்பதை எடுத்துக்கொண்டால் இலக்னம் என்பது ஜாதகரை குறிக்கும். இலக்னத்தில் ராகு இருக்கும் பொழுது ஜாதகர் எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி கொள்வதில் விருப்பம் உடையவராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் பிறர் தலையீடு, கட்டுப்பாடின்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற ஆசை உடையவராக இருப்பார்.
தனம் மற்றும் குடும்பத்தினை குறிக்கக்கூடிய 2 ஆமிடத்தில் ராகு இருக்கும் பொழுது ஜாதகர் பணத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுப்பவராக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உடையோராக, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற ஆசை உடையவராக இருப்பார்.
தன்னுடைய குடும்பத்தில் தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபராக இருக்க வேண்டும் என்பதிலும் அதீத விருப்பம் இருக்கும்.
வெற்றி, கீர்த்தி, புகழ் பராக்கிரமம், இளைய சகோதரம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் ராகு இருக்கும் பொழுது ஜாதகர் எல்லோரும் தன்னுடைய வீர,தீர பராக்கிரமங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருப்பார். எல்லா விஷயங்களும் தான் மட்டுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணம், இளைய சகோதர உறவுகள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜாதகருக்கு இருக்கும்.
நிலம், பூமி, வீடு, மனை போன்ற வசதிகளை சுட்டிக்காட்டும் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு இருக்கும் பொழுது ஜாதகர் நிறைய சொத்துக்களை குவித்தாக வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருப்பார். உறவினர்கள் எல்லோரும் தன்னை மதிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஏனெனில் நான்காமிடம் உறவுகளை சுட்டிக் காட்டக்கூடிய இடமாகும்.
ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதை பொறுத்தவரை எப்போதும் தன்னுடைய சந்தோஷம் கெட்டு விடக் கூடாது என்பதில் ஜாதகர் அதிக ஆர்வத்தோடு இருப்பார். குழந்தைகள் மீது அலாதியான பிரியம், எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருப்பார். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகமிருக்க வாய்ப்புண்டு.
ஆறாமிடத்தில் ராகு இருப்பதை பொருத்தவரை 6-ஆம் இட மென்பது நோய்,கடன், எதிரி போன்ற விஷயங்களைச் சுட்டிக் காட்டும் இடமாகும்.
அந்த வகையில் எதிரிகளை வீழ்த்த வேண்டும். எதிரிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எதிரிகள் இவரை பார்த்து பயப்பட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் இவற்றில் விருப்பம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் ராகு இருப்பது பொறுத்தவரை வாழ்க்கை துணை தன்னை புகழவேண்டும்.
வாழ்க்கை துணையோடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக, நண்பர்கள், கூட்டாளிகள், எதிர்த்தரப்பு, சமூகம் என எல்லோரும் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதில் ஜாதகருக்கு ஆசை இருக்கும்.
எட்டில் ராகு இருப்பதை பொருத்தவரை நீண்ட ஆயுளுடன் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்தாக வேண்டும் என்பதில் ஈடுபாடு இருக்கும். உடல் சார்ந்த தேவைகள், சந்தோஷங்களை பெறுவதற்கு அனுபவிப்பதற்கு உடல்வலு நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஜாதகருக்கு இருக்கும்.
ஒன்பதில் ராகு இருப்பது பொறுத்தவரை ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம் என்பதால் சகல விதமான பாக்கியங்களையும் பெற்று, ஊர், உலகம் மெச்சும்படி வாழ்ந்தாக வேண்டும் தந்தை, தந்தை வழி உறவினர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதில் ஜாதகருக்கு விருப்பம் இருக்கும்.
பத்தில் ராகு இருப்பதை பொருத்தவரை 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம் என்பதால் தொழிலில் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வரவேண்டும். தொழிலில் புகழ் பெற வேண்டும். தன்னைவிட, தான்சார்ந்த தொழில் துறையில் சிறந்த ஆளுமை இருக்க முடியாது என்ற அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்பதில் ஜாதகருக்கு விருப்பம் இருக்கும்.
ஜாதகருக்கு பல்வேறு வகையான தொழில் செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வம் இருக்கலாம்.
11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதை பொருத்தவரையில் ஜாதகர் ஈடுபடக் கூடிய அனைத்து விஷயத்திலும் லாபம் பெற்றாக வேண்டும் என்ற ஈடுபாடு உடையவராக, தன்னை பிறர் புகழ வேண்டும் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக மிக உயர்வான நிலையை அடைந்திட வேண்டும் என்ற ஆசை உடையவராக இருப்பார்.
12ஆம் இடமான போக ஸ்தானத்தில் ராகு இருப்பது பொறுத்தவரையில் ஜாதகருக்கு தாம்பத்திய சுகம் பெறுவதில் அதிக ஆர்வம், ஆசைகள் இருக்கும்.
பல்வேறு வகைகளில் தாம்பத்திய சுகத்தை பெற்றாக வேண்டும் என்ற எண்ணம் ஈடுபாடு உடையவராக இருக்க வாய்ப்புண்டு.
அந்த வீட்டு அதிபதி வலுப்பெற்ற நிலையில் இருந்து 12க்கு சுபர்களின் தொடர்பு இருக்கும் பொழுது தானதர்மங்கள் செய்வதும் ஜாதகருக்கு அதிக ஈடுபாடு இருக்கும்.
பணபர ஸ்தானங்களான 2,5,8,11 ஆம் இடங்களில் இராகு வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு பொருள் ஈட்டுவதில் நாட்டம் அதிகம் இருக்கும்.
காமத் திரிகோண ஸ்தானங்கள் 3,7, பதினொன்றில் ராகு பலம் பெரும் பொழுது காமம், இன்பத்தை அனுபவிப்பதில் ஜாதகருக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
இது மட்டுமின்றி இராகு எந்த கிரகத்துடன் இணைந்து உள்ளாரோ அந்த கிரகம் இலக்னத்திற்கு ஆதிபத்தியம் பெற்று உள்ளதோ அந்த ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்களிலும் ஜாதகருக்கு நாட்டம் ஏற்படுவது இயல்பு. இவற்றை எல்லாம் போகக்காரகன் இராகுவின் தசையில் ஜாதகரால் கண்கூடாக உணர இயலும்.
#Iniyavan
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/Hv1tvebRHj71HOa8kVLY5K