ஜோதிடத்தை பொருத்தவரை மனிதனுடைய வாழ்வை நவக்கிரகங்கள் அவனுடைய முன்ஜென்ம கர்மாக்களின் அடிப்படையில் நல்ல மற்றும் தீய பலன்களை தந்து தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. பாதிப்பைத்தரக் கூடிய வகையில் ஒரு கிரகம் இருந்து தசா புக்தி நடத்தும் போது அந்த கிரகத்தின் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே பல்வேறு விதமான பிரீத்தி முறைகளையும் அந்த கிரகங்களுக்கு என்ற மந்திரங்களையும் உருவாக்கித் தந்துள்ளனர் நம்முடைய முன்னோர்கள். இவற்றின் துணைகொண்டு நம்மால் பாதிப்பினை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். வேத காலத்திலிருந்தே மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழம்பெரும் வேதமான ரிக் வேதத்தில் மட்டுமே 10482 - க்கும் மேற்பட்ட மந்திர ஸ்லோகங்கள் பாடல்களாக உள்ளன.
அதர்வண வேதம் முழுவதும் மந்திரங்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரங்கள் நமக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவை ஆகும். #Iniyavan
உங்களை ஒருவர் ஒரு தீய வார்த்தைகள் சொல்லித் திட்டும் போது அந்த தீய வார்த்தைகள் உங்களது உடல் மற்றும் மன அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தும். பிறரால் உங்களை நோக்கி கூறப்பட்ட அந்த தீய வார்த்தை உங்களை கோபப்பட வைத்து உடல் மற்றும் மன அளவில் மாற்றத்தினைத் தருகிறது. ஒரு சிறிய தீய வார்த்தை உங்களிடத்தில் எப்படி எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
அதேபோல் நல்ல வார்த்தை கொண்டு ஒருவர் உங்களை பாராட்டும் போது உங்கள் மனம் மகிழ்ச்சி அடைகின்றது.
உங்களை நோக்கி கூறப்படும் நல்ல மற்றும் தீய வார்த்தைகள் உங்களுடைய மனம் மற்றும் செயல்பாடுகளில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ அதைப்போலவே மந்திரங்களை உச்சரிக்கும் போது அவை நம்மிடத்தில், நம்முடைய செயல்பாடுகளில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.
தொடர்ச்சியாக, தினமும் வழக்கமான ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மந்திரங்களை ஆத்மார்த்தமாக உச்சரித்து வருபவர்களால் இந்த மாற்றத்தை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்.
இந்து சமயத்தில் மந்திரங்கள் என்பவை புனிதமான உச்சரிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
இந்து சமய சடங்குகள் அடிப்படையில் பல்வேறு விஷயங்களுக்காக மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மந்திரங்களை உச்சரிப்பதற்கென்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
உண்மையில் தொடர்ச்சியாக ஒரு மந்திரத்தை சொல்லி வரும் போது அந்த மந்திரம் நம்மைச் சுற்றி ஒரு கவச உடையினை அணிந்து இருப்பது போல உணர்வைத் தரும். இரண்டொரு நாட்கள் சொல்லிவிட்டு இந்த பயனை நம்மால் எதிர்பார்க்க இயலாது.
எந்த ஒரு விஷயத்தையும் வரையறைக்கு உட்பட்டு, கால ஒழுங்கு முறையைக் கடைபிடித்து, தொடர்ச்சியாக செய்யும்போது அந்த விஷயத்தின் பொருட்டு நம்மால் பலன்களைப் பெற இயலும்.
அதுபோலவே மந்திரங்களை உச்சரிப்பதற்கு என்றும் சில விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் உள்ளன. உண்மையில் ஆத்மார்த்தமாக, உடல் மற்றும் உள்ளத்தூய்மையுடன் சொல்லப்படக்கூடிய ஒரு மந்திரம் நமக்கும் கடவுளுக்குமான தூரத்தை குறைக்கவல்லது.#Iniyavan
கடவுளோடு நம்மை தொடர்பில் வைத்துக் கொள்வதற்கு முதன்மை விஷயமாக பார்க்கப்படுவது தூய்மை.
தூய்மை என்பது உடல் தூய்மை மட்டுமல்ல, உள்ளத்தூய்மையே முதன்மையானது.
மந்திங்களை உச்சரிப்பதற்கு முன் மனமானது சலனமற்ற நிலையில் இருக்கவேண்டும். அந்த மந்திரங்களைத் தவிர வேறு எந்த எண்ண ஓட்டங்களும் நம்முடைய மனதில் இருக்கக் கூடாது.
மந்திரங்களை பொதுவாக பிரம்ம முகூர்த்த வேலைகளில் உச்சரிப்பதே சிறந்தது. முறையான இரவு உறக்கம், நம்மை உடல் அளவிலும் உள்ள அளவிலும் தயார்படுத்தி இருக்கும். அதற்கு பின்பு அதிகாலை வேளைதனில் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து வருவது சிறப்பாகும். #Iniyavan
உடல் மற்றும் உள்ளம் புத்துணர்ச்சியாக இருக்கும் பொழுது, நாம் எந்தத் தேவைக்காக மந்திரத்தை உச்சரிக்கின்றமோ அந்த தேவையை நிறைவேற்றக்கூடிய வல்லமையை அந்த மந்திரமே நமக்கு நாளடைவில் வழங்கும்.
அதிகாலையில் மந்திரங்களை கூற இயலாதவர்கள் மாலை வேளையினைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் அதிகாலையில் மந்திர ஜெபம் செய்வதே விரைவாக பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை வேளையினைப் பொருத்தவரை நித்திய பிரதோஷம் என்று அழைக்கப்படக்கூடிய சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடம், பின்பு 24 நிமிடம், என அந்த 48 நிமிடங்கள் மந்திர ஜபத்திற்கு உகந்த
காலகட்டமாகும்.#Iniyavan
ஒரு நாள் காலை சொல்வது, மறுநாள் மாலை சொல்வது என நம்முடைய இஷ்டத்திற்கு மந்திரங்களை உச்சரிப்பது
எந்த பலனையும் தராது.
மந்திரங்கள் மனிதரிடத்தில் உடல் மற்றும் மன அளவில் ஆதிக்கத்தை ஏற்படுத்தவல்லன.
தொடர்ச்சியாக உச்சரிக்கப்படக் கூடிய மந்திர ஒலிகள், நல்ல ஓசைகள் நம்முடைய வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக நரம்பியல் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.
நம்முடைய இந்து சமயத்தைப் பொறுத்தவரை பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு மந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மந்திரங்களில் சிறப்பானது காயத்ரி மந்திரம் ஆகும். காயத்ரி மந்திரம் நம்முடைய பாவங்களை போக்க வல்லதாகும்.
"மந்திரங்களில் நான் காய்த்ரி ஆவேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதிலிருந்தே காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவத்தினை நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.
காயத்ரி மந்திரங்களிலும் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு தெய்வத்திற்கும் காய்த்ரி மந்திரங்கள் உண்டு.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒன்பது நவக்கிரகங்களுக்கும், ஒன்பது காயத்ரி மந்திரங்கள் உண்டு.
எந்த கிரகத்தின் தசா புத்தி நடப்பில் உள்ளதோ அந்த கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரங்கள் அல்லது அந்த கிரகத்தின் அதிதேவதைக்குரிய காய்த்ரி மந்திரங்களை அதிகாலை வேளைதனில் ஜெபித்து வருவது சிறந்ததாகும்.#Iniyavan
உதாரணமாக ஒருவருக்கு சுக்கிர தசா அல்லது புத்தி நடப்பதாக எடுத்துக்கொள்வோம். சுக்கிரனுக்குரிய அதிதேவதை இலட்சுமி ஆகும். அந்த வகையில் அவர் அதிகாலையில் லட்சுமிக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வருவது சுக்கிர தசா அல்லது புத்தியினை நெறிப்படுத்த உதவும்.
ஜாதகத்தை பொருத்தவரை ஒரு மனிதனுடைய எண்ண ஓட்டங்கள் ஆழ்மன ஸ்தானம் என்று அழைக்கப்படக்கூடிய ஐந்தாம் இடத்துடன் தொடர்புடையது ஆகும்.
ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடத்துடன் தொடர்பு கொள்கின்ற வலுப்பெற்ற கிரகத்தின் காரக மற்றும் ஆதிபத்திய ரீதியான விஷயங்களையே எண்ணங்களாக ஜாதகர் அதிகம் சிந்தித்து கொண்டிருப்பார்.
ஆழ்மன ஸ்தானமான ஐந்தாம் இடத்துடன் தொடர்புடையதே மந்திர உச்சாடனம். ஆழ்மன ஸ்தானமான ஐந்தாம் இடம் குறிக்கக்கூடிய காரகத்துவங்களில் ஒன்றுதான் மந்திர உச்சாடனமும்.
மந்திரங்களும் மனிதர்களின் மனம் மற்றும் எண்ணங்களுடன் தொடர்புடையது. மந்திரங்கள் முதலில் ஒருவரிடத்தில் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வல்லன. மனதிலிருந்துதான் எண்ணங்கள் பிறக்கின்றன.
இதிலிருந்தே மந்திரங்கள் மனிதர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணர இயலும்.
குறிப்பிட்ட தசாபுத்தியினைப் பொருத்தும் மனிதனுடைய எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். அவ்வகையில் தசாபுத்தி நடத்தக்கூடிய கிரகத்தின் காய்த்ரி மந்திரம் அல்லது அந்த கிரகத்தின் அதிதேவதைக்குரிய காய்த்ரி மந்திரங்களை ஆத்மார்த்தமாக உச்சரிக்கும்போது அந்த குறிப்பிட்ட தசா புத்தியை நம்மால் நல்ல வகையில் நெறிப்படுத்திக் கொள்ள இயலும்.
மந்திரங்களை உடல் மற்றும் உள்ள தூய்மையுடன் ஆத்மார்த்தமாக குறிப்பிட்ட கால ஒழுங்கிற்கு உட்பட்டு உச்சரித்து வரும் பொழுது நம்முடைய எண்ணங்களில் மாற்றம் ஏற்படும்.
நம்மிடத்தில் நேர்மறை எண்ணங்கள், நேர்மறை ஆற்றல்கள் தூண்டப்படும்.
எண்ணங்களில் மாற்றம் ஏற்படும்போது நம்முடைய செயல்களும் சரியாகும்.
செயல்கள் சரியாக இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் சரியான பாதையில் செல்லும்.
அவ்வகையில் மந்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்தகூடியவன என்றால் மிகையல்ல.#Iniyavan
மந்திரங்கள் மூலமாகவே நம்முடைய வாழ்க்கையை நல்ல முறையில் நெறிப்படுத்திக் கொள்ள முடியும். மந்திரங்களுக்கான விலை அதிகம் இல்லை. ஆனால் பின்பற்றுவதுதான் கடினமானது.
அவயோக கிரகங்களின் தசா புக்தி நடக்கும் போது நம்முடைய வேண்டுதலின் பொருட்டு சொல்லப்படக்கூடிய மந்திரங்கள் பலிதமாவதற்கு காலம் எடுக்கலாம். அல்லது பலிதமாகலும் போகலாம்.
மந்திரங்கள் பலிதம் ஆகாமல் போவதற்கு காரணம் நம்முடைய முன் ஜென்ம கர்மாக்களின் அளவு அதிகம் இருப்பதே ஆகும்.#Iniyavan
ஜாதகத்தில் நல்ல தசா புத்திகள் நடக்கும் பொழுது நாம் செய்யக் கூடிய வழிபாடுகள், நாம் உச்சரிக்கக் கூடிய மந்திரங்கள் இரட்டிப்பு பலனைத் தரும்.
எனவே நல்ல தசாபுத்திகள் நடக்கும் பொழுது மந்திரங்களை ஆத்மார்த்தமாக உச்சரித்து வருவது நல்லது.
நல்ல தசா புத்திகள் நடக்கும் பொழுது நாம் மந்திரங்களை உச்சரிக்க கூடிய மனநிலையிலேயே இருக்க மாட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அதற்கான தேவை என்பது இருக்காது அல்லது எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.
பிரச்சனை ஏற்படும் போதுதானே நாம் இறைவனை நாடுகின்றோம்.
மற்ற நேரங்களில் நம்மை படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்து விடுகின்றோம்.
பிரச்சினை என்பது உருவாகும் போதுதான் ஆலய வழிபாடுகளுக்கும் பரிகாரங்களுக்கும் மந்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்?
மந்திரங்களை நம்முடைய வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றிக் கொள்ளும் போது மட்டும் தான் நம்மால் நீடித்த நிரந்தரமான பலன்களைப் பெற இயலும்.
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/Jbup09JXYReCCX6zfYjzvV