போக ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி-செவ்வாய் இணைவு:
ஜோதிட சாஸ்திரத்தில் 12-ஆம் இடம் அயன -சயன- போக- விரய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒருவரின் தூக்கம், உறக்கத்தினை
குறிப்பிடுவதுடன் (விரையஸ்தானம்) ஏற்படக்கூடிய செலவுகளை குறிப்பிடும் இடமாகும். அதோடு ஒருவருக்கு தாம்பத்தியத்தில் கிடைக்கக்கூடிய சுகத்தினைக் குறிப்பிடும் இடமாக இருக்கின்றது.(போகம் -காமம்)
12ஆம் இடமான விரய ஸ்தானம் வலுவில்லாமல் மிதமான நிலையில் இருப்பதே நல்லதாகும். ஏனெனில் 12ம் இடம் வலுவடையும் பொழுது ஜாதகர் நிறைய விரையச் செலவுகளை அதிகம் மேற்கொள்பவராக இருக்க கூடும்.
மறைவு ஸ்தானமான 12-ஆம் இடம் வலுப்பெறும் பட்சத்தில் ஜாதகர் தவறான முறையற்ற நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபடக் கூடும்.
போக ஸ்தானமாகிய 12-ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது அதீத காம உணர்வினை ஏற்படுத்தும்.
ஏனெனில் காலபுருஷ லக்கினத்திற்கு 12ம் இடமான மீனத்தில்தான் சுக்கிரன் உச்ச நிலையை அடைகின்றார்.
போக ஸ்தானமான 12-ஆம் இடத்திற்கு சுப கிரகங்களின் தொடர்பிருப்பது போதுமான மற்றும் மிதமான காம உணர்வைத் தரும்.
படுக்கை ஸ்தனமான பன்னிரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பது தாம்பத்யத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக சனி செவ்வாய் 12ஆம் இடத்தில் இருப்பது நல்லதல்ல. பன்னிரண்டில் சனி மற்றும் செவ்வாய் நின்ற நிலையில் சுப கிரகங்களின் பார்வை நிச்சயம் இருக்க வேண்டும்.
ஏனெனில் சனியும் செவ்வாயும் முற்றிலும் ஒன்றிற்கு ஒன்று எதிர் தன்மை கொண்ட கிரகங்கள்.
சனி முற்றிலுமாகவே மந்த கிரகம், முறையற்ற செயல்பாடுகள், கெட்ட சிந்தனைகள், கெட்ட சகவாசங்கள், கள்ளத்தனம், வஞ்சகம், சுயநலத்துடன் செயல்படுதல், முறையற்ற மற்றும் ஒவ்வாத செயல்களுக்கு காரகத்துவம் வகிக்க கூடிய ஒரு கிரகம். சனி பகவானுக்கு சுபர் தொடர்பு இருப்பின் தீய பலன்கள் குறைவுபடும்.
அடுத்ததாக செவ்வாய் முற்றிலும் வேகம் மற்றும் அவசர செயல்பாடுகளுக்கு காரணமான ஒரு கிரகம், உடல் ரீதியான பராக்கிரமங்கள், பேராசை, அதிக காம இச்சைகள், துர்நடத்தைகள், பிடிவாத குணமுள்ள முட்டாள்தனமான செயல்பாடுகள்,
தனக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் கண்மூடித்தனமான பலாத்காரம் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.
சுபர் தொடர்பு, இணைப்பு இல்லாத நிலைகளில் பல்வேறு பாபத் தன்மை பெற்ற இந்த இரண்டு கிரகங்கள், 12 ஆம் இடத்தில் இருப்பது நல்லது அல்ல.
இது போன்ற அமைப்பு மேற்கண்ட காரகத்துவ விஷயங்களின் வாயிலாக முறையற்ற காம செயல்பாடுகளில் ஆர்வத்தினை ஜாதகருக்கோ அல்லது வரக்கூடிய துணைக்கோ ஏற்படுத்தி அதனால் தாம்பத்திய வாழ்க்கை கெடுவதற்கான சூழ்நிலைகளை உண்டாக்க கூடும்.
குடும்பம் மற்றும் மணவாழ்க்கை பாதிப்பு ஏற்படும்.
ஏனெனில் பன்னிரண்டில் நின்ற சனி 3-ஆம் பார்வையாக தன ஸ்தானமும், குடும்ப ஸ்தானமுமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பார்.
செவ்வாயின் 8-ஆம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் வீட்டினைப் பார்ப்பார்.
சுபர் தொடர்பு இணைவு இல்லாத பட்சத்தில், திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூடும்.
இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பதினோராம் பாவகம் வலுப்பெறும் பட்சத்தில் இரண்டாவது திருமணத்திற்கு வழிவகுக்கக் கூடும்.
ஆகவே இந்த அமைப்பினை உடையவர்கள் போதுமானவரை தாமத திருமணம் செய்துகொள்வது நல்லது.
பரிகாரங்களை பொருத்தமட்டில் செவ்வாயின் அதிதேவதையான முருகப்பெருமானை விசாகம் நட்சத்திரம் வரக்கூடிய நாட்களிலும், சனி பகவானின் இடர்ப்பாடுகளை போக்கும் ஹனுமானை மூலம் நட்சத்திரம் வரக் கூடிய நாட்களில் தொடர்ந்து தவறாது வழிபட்டு வருவது நல்லதாகும்.
தொடர்ச்சியான, ஆத்மார்த்தமான, மனத் தூய்மையான பிரார்த்தனைகளால் தீமைகள் அனைத்தும் குறையத் துவங்கும்...
நன்றிகளுடன்...
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம், வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்த தகவல்கள் பெற இணைந்திருங்கள்...
https://chat.whatsapp.com/Jbup09JXYReCCX6zfYjzvV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக