வரன் வரும் திசை...
வரன் சொந்தமா அல்லது அந்நியமா?
ஜாதகம் பார்க்க வரும் பெற்றோர்கள் தங்களது மகன் அல்லது மகளுக்கு வரன் எந்த திசையில் அமையும் என்று கேட்பது வழக்கம்.நாலாபுறமும் வரன் தேடிக் கொண்டிருக்கும் இக்கால சூழ்நிலையில் எந்த திசையில் வரன் அமையும் என்பதை முன்கூட்டியே சொல்வதன் மூலம் அவர்களுக்கு நேர விரயம் என்பது ஓரளவேனும் தவிர்க்கப்படும். ஆண் அல்லது பெண் யாருடைய ஜாதகம் என்றாலும் லக்னம் அல்லது ராசிக்கு ஏழாமிடங்களில், இவற்றில் எது வலுப்பெற்று உள்ளதோ அதைக் கொண்டு திசையை தீர்மானிக்க இயலும்.
ஏழாமிடத்து அதிபதி, ஏழாம் இடத்தில் இருக்கும் கிரகம், இவற்றில் எது பலம் பெற்றுள்ளதோ அந்த கிரகத்தின் திசையில் வரன் அமையும். ஏழாம் இடத்தில் பல கிரகங்கள் இருக்குமாயின், நிற்கும் கிரகங்களில் எந்த கிரகம் அதிக வலுவுடன் இருக்கிறதோ அந்த கிரகத்தின் திசையில் வரன் அமையும்.
ஏழில் நின்ற கிரகத்தை விட ஏழாம் இடத்து அதிபதி கேந்திர திரிகோணங்களில் பலம் பெற்று நின்றால் ஏழாம் அதிபதியான கிரகத்தின் திசையினில் வரன் அமையும். ஏழாம் அதிபதியை விட, ஏழில் நின்ற கிரகங்களை விட சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் சுக்கிரனுக்குரிய திசையில் வரன் அமையும்.
கிரகங்களுக்குரிய திசையுடன் ராசிகளுக்குரிய திசையையும் இணைத்தே வரக்கூடிய வரனின் திசையை தீர்மானிக்க இயலும்.
*கிரகங்களின் திசைகள்:-*
சூரியன் - கிழக்கு,
சந்திரன் - வடமேற்கு ,
செவ்வாய்- தெற்கு ,
புதன் - வடக்கு,
குரு - வடகிழக்கு,
சுக்கிரன் - தென்கிழக்கு,
சனி - மேற்கு.
ராகு/கேது - தென்மேற்கு அல்லது அவை நிற்கும் வீட்டின் திசையாகும்.
*ராசிகளின் திசைகள்*
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு;
ரிஷபம், கன்னி, மகரம் - தெற்கு ;
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு;
கடகம், விருச்சிகம் , மீனம் - வடக்கு
ஏழாம் இடத்து அதிபதி
4 க்குரியவரின் சாரம் பெற்று இருந்தாலோ அல்லது நான்காம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், சந்திரன் சாரம் பெற்றிருந்தாலும்,சந்திரனுடன் இணைந்திருந்தாலும் தாய்வழிச் சொந்தங்கள் மூலமாகவும், 9ம் அதிபதி சாரம் பெற்றிருந்தாலும், 9ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், சூரியன் இணைந்திருந்தாலும் தந்தை வழி சொந்தங்களில் வரன் அமைய வாய்ப்புண்டு.
ஏழாம் இடத்து அதிபதி ராகு, கேதுவுடன் இணைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் 6, 8, 12 இடங்களில் மறைந்து இருந்தாலும் வரன் அந்நிய இடங்களில் அமைய வாய்ப்பு உண்டு..
ஏழாம் அதிபதி 3,4, 5,7, 9, 11 போன்ற இடங்களுடன் தொடர்பு பெறுமாயின் உறவிவின் வழிகளில் திருமணம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு...
நன்றி...
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138
Super sir
பதிலளிநீக்கு