செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஜோதிட ரீதியாக அவமானத்தினை சந்திக்க காரணங்கள்:- அவமானத்தினை எதிர்கொள்வது எவ்வாறு?

 ஒருவர் தன்னுடைய நடைமுறை வாழ்வில் அவமானத்தை அதிகளவு சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நடைமுறை ரீதியாக அவருக்கு எட்டுக்குரியவரின் திசாபுத்தி  அல்லது எட்டில் நின்ற , எட்டுக்குரியவருடன் தொடர்பில் உள்ள கிரகங்களின் திசா புத்தி நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.ஏனெனில்  ஒருவர் தன்னுடைய வாழ்வில் சந்திக்கும் அவமானங்கள் மற்றும் மன அழுத்தங்கள், மற்றவர்களின் ஏளனம்,இகழ்ச்சிக்கு உள்ளாகுதல் என அனைத்திற்கும்  எட்டாம் இடமே காரணம் ஆகின்றது..

சுபர் தொடர்பு இல்லாத நிலை, அதிக பாபத்துவம் அடையும் பட்சத்தில் தான் சந்திக்கும் அவமானங்களின் காரணமாகவே தன்னுடைய வாழ்வை தானே முடித்துக்கொள்ளும் அபாய நிலையும் ஏற்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
எட்டாம் இடத்துடன் தொடர்புகொள்ளும் கிரகத்தைப் பொறுத்தும், அந்த காரகத்துவ ரீதியான பிரச்சனைகள், அந்த காரத்துவ ரீதியான உறவுகள் வாயிலாகவும் அவமானங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.எட்டாம் இடத்தில் சூரியன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அரசு வகையில் அவமானம், தகப்பனால், தந்தைவழி உறவுகளால் அவமானம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவுகள் அவற்றின் மூலமாக அவமானத்தை சந்திக்க வாய்ப்புகள்.

எட்டாம் இடத்துடன் சந்திரன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தாய் மற்றும் தாய்வழி உறவுகள்,ஜாதகரின் நிலையற்ற புத்தியால், மாமியாரால், வயதில் மூத்த பெண்களால் பிரச்சினைகள், அவமானங்கள் ஏற்பட வாய்ப்பு.

எட்டாமிடத்தோடு செவ்வாய் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் முன்கோபத்தால்,  பொதுவான இடங்களில் முறையற்ற வேகத்தில் வாகனங்களை இயக்குவதால், அவசர புத்தியால்,தன்னுடைய நில புலன்களை நிர்வகிப்பதில் பிரச்சனை சகோதர வர்க்கத்தால், பங்களிகளால் இவற்றின் மூலமாக அவமானங்கள்.

எட்டாமிடத்தில் புதன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தன்னுடைய புத்தியை தவறாக உபயோகிப்பது, வியாபாரம் மற்றும் வங்கி வரவு செலவுக் கணக்குகளில் முறையீடு செய்தல், நண்பர்களால், காதலன், காதலிகளால், சமூக வலைதளங்களால், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் ஆகியவற்றின் மூலமாக அவமானங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு.

எட்டாம் இடத்து குரு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள், சமுதாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் செய்யும் முறையற்ற செயல்கள்,ஆலயங்கள், ஆன்மீகம் சார்ந்த அறங்காவலர்  போன்ற பணிகளில் இருப்பவர்களின் முறையற்ற செயல்கள் ஆசிரியர்களாலும், குழந்தைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

சனி தொடர்பு கொள்ளும் பட்சத்தில் வேலையாட்கள், தங்களைவிட தகுதி குறைவான மக்களால் அவமானங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் தொடர்பு கொள்ளும்போது முறையற்ற பாலியல் தொடர்புகள், இளம் பெண்கள், தன்னுடைய கணவன்/ மனைவி ஆகியோர்களால் காதல் சார்ந்த விவகாரங்களில் சிக்குதல்,அந்தரங்க விஷயங்கள் ஆடை அணிகலன்கள் ஆகிவற்றால் அவமானங்களை  சந்திப்பதற்கான வாய்ப்பு உண்டு.

எட்டாம் இடத்து ராகு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதிக பேரராசையால், முறையற்ற வேட்கைகள், அன்னியர்களால்,அரசுக்கு புறம்பான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கேது தொடர்பு கொள்ளும்பொழுது போதை பழக்கங்களால் முன்பின் தெரியாதவர்கள் மூலம் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ராகு மற்றும் கேது உடன் தொடர்பு கொண்ட கிரகங்களின் காரகத்துவம் ரீதியாவும் பிரச்சனைகள் சந்திப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாதகர் இதுபோன்ற திசாபுத்தி காலகட்டங்களில் தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டு, கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம், தன்னை பலவீனப்படுத்தும் செயல்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருப்பது மட்டுமே புத்திசாலித்தனம்...

நிறைவாக ஹிட்லர் கூறிய ஒன்றை மட்டும் கூறிக் கொண்டு இந்த உரையை முடிக்கின்றேன்...
புகழை மறந்தாலும் நீங்கள் சந்தித்த அவமானங்களை மட்டும் என்றுமே மறந்து விடாதீர்கள்...ஏனெனில் அது இன்னொரு முறை நீங்கள் அவமானம் அடையாமல் காப்பாற்றும்...

நன்றியுடன்...
ப.இனியவன் கார்த்திகேயன்.MA.B.ED
CELL 9659653138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக