புதன் நீசம் | சனி இராகு தொடர்பு..| புதனின் பலவீனம் போக பின்பற்றவேண்டிய வாழ்வியல் பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்...
நல்ல புத்திசாலித்தனம், சமயோசித புத்தி, எந்த ஒரு சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் போன்ற குணங்கள் சுய ஜாதகத்தில் புதன் வலுப்பெற்றவர்களிடம் காண இயலும்.
இது மட்டுமின்றி எந்த ஒரு கலையையும் பிறருடைய உதவி இன்றி, ஆசான் இன்றி தானாகவே கற்றுக்கொள்ளும் திறன்,எவரிடமும் நாசூக்காக பேசும் விதம், பேசியே தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல், மற்றவர்களை விட எந்த ஒரு விஷயத்தையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் திறன், விரைவாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றல், கணிதம், ஜோதிடம், ஓவியம், நல்ல எழுத்தாற்றல், சிறப்பான தகவல்தொடர்பு திறமை, தன்னுடைய புத்திசாலித்தனத்தை பணமாக மாற்றும் திறன் போன்றவற்றை வலுப்பெற்ற புதன் ஜாதகருக்கு தருவார்.
எதிரியை நேரடியாக பழிவாங்காமல் தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி (உறவாடி கெடுப்பது) வீழ்த்தும் திறனையும் புதன் வலுப்பெற்றவர்களிடம் காண இயலும். புதன் நீசமாக இருக்கும் போது (நீச பங்கம் அடையாத நிலையில்) மேற்கண்ட விஷயங்களில் ஜாதகருக்கு குறைபாடுகள் இருக்கும்.
பல வழிகளில் அவர் நீசம் அடைந்தால் மட்டுமே மேற்கண்ட காரகத்துவங்களில் பாதிப்பை உணர இயலாது. குறைவான வழிகளில் நீசபங்கம் அடைந்திருக்கும் போது தன்னுடைய காரகத்துவங்களில் ஏதேனும் ஒரு தருணத்தில் பாதிப்பினை உணர்த்தவே செய்கின்றார்.
நீசபங்கம் பெறாத நிலை, குறைவான வழிகளில் நீசபங்கம் பெறுவது, சனி, ராகு போன்ற பாவிகளின் பார்வை மற்றும் இணைவைப் பெறும்போது புதனின் காரகத்துவங்களில் ஜாதகருக்கு குறைபாடுகள் இருப்பதை உணர இயலும்.
யாரிடம் எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் பேசுவது, தாய் மாமன், வழியில் கசப்பான உறவு முறை, நகைச் சுவையாகப் பேசப்போய் வம்பாகுதல், எவரிடமும் சகஜமாக பழக இயலாத நிலை, கல்வி மற்றும் கணிதத்தில் ஈடுபாடின்மை,
வியாபாரத்தினில் தவறான முடிவுகள் எடுத்து நஷ்டத்திற்கு உள்ளாகுவது,
புத்தியின்றி ஒரு விஷயத்தை செய்துவிட்டு பின்பு வருந்துவது,உடல் ரீதியாக நரம்பு சம்பந்தப்பட்ட, வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வலிப்பு நோய், தோல் உபாதைகள் போன்றவற்றையும் தருவதற்கு வாய்ப்பு உண்டு.
உறவினர்கள், நண்பர்கள் வகையில் நம்பிக்கை துரோகம், ஏமாற்றங்களை சந்திப்பது.. புதன் நீசம் அடைந்தவர்கள் தன்னுடைய நண்பர்களை பெரிதாக உயர்வாக எண்ணுவார்கள், ஆனால் நண்பர்கள் இவரை அற்பாகமாகவே நினைப்பார்கள்.
இதுபோன்று புதன் குறிக்கக் கூடிய பல்வேறு விஷயங்களில் குறைபாடுகள், ஏமாற்றங்கள் இருப்பதை அவரால் உணர இயலும்.
இத்தகைய பாதிப்புகளை உணரக்கூடியவர்கள் பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளை ஆத்மார்த்தமாக செய்யும்போது குறைபாடுகள் படிப்படியாக நீங்கி நலம் பெருகும். வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களைப் பொருத்தவரை நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள புதன் ஸ்தலமான திருவெண்காட்டிற்குச் சென்று பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் புதனை வழிபடுவது சிறப்பு. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், அம்பாளை மனமுருகி வேண்டி, பின்னர் புத பகவானுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
பழமை வாய்ந்த பெருமாள் ஆலயங்களை புணரமைக்க, பொருளாதார ரீதியாக உதவி செய்வது, அங்கு சென்று வழிபட்டு வருவது, புதன்கிழமை அன்று திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்க நாதரை வழிபட்டு வருவது புதனால் ஏற்படக்கூடிய குற்றங்கள், குறைகளைப் போக்க வல்லதாகும்.
மதுரையில் பச்சை வண்ணத்தில் வீற்றிருக்கும், பச்சைக் கிளியை கையில் எந்திய அன்னை மீனாட்சியை வழிபட்டு வருவது நல்லது. திருஉருவப் படத்தினை வீட்டில் வைத்து வழிபடுதல் நல்லதாகும்.
புதனுக்குரிய நிறமான பச்சை வண்ணத்தை தங்களுடைய அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்திக் கொள்வது (புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிவது) புதனுக்குரிய தானியங்கள் மற்றும் தாவர வகைகளான பச்சைநிற காய்கறிகள், பச்சை பயிறு, கற்றாழை, வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது புதனின் வலுவைக் கூட்ட உதவும்.
புதனுக்குரிய தாவர வகைகளான நாயுருவி, ஆலமரம், வெண்காந்தள், பல்வேறு துளசி வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை வளர்த்து பெருமாளுக்கு தானமாக நல்குதல், மேற்கண்ட தாவரங்களுக்கு நீர் விடுவது இன்றியமையாததாகும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய, கல்வி பயிலாத குழந்தைகளின் கல்வி கட்டணச் செலவை ஏற்றுக் கொள்வது, அவர்களுக்கு பேனா, நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது புதனின் பலவீனத்தை போக்கும்.
புதனின் வாகனமான குதிரைக்கு, புதன்கிழமை அன்று புதன் ஓரையில் குதிரைக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுப்பதும் நல்லதாகும்.
மேற்கண்ட பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளை புதன் அவயோகராக இருப்பவர்கள் செய்ய வேண்டியதில்லை.
மேற்கண்ட வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களைக் தொடர்ச்சியாக தன்னால் இயன்றவரை ஆத்மார்த்தமாக செய்வதன் மூலம் புதனின் காரகத்துவங்களில் குறைபாடுகள் நீங்குவதை உணர இயலும்...
நன்றி...
Astrologer
P.இனியவன் கார்த்திகேயன்MA.B.ED
Cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/Hv1tvebRHj71HOa8kVLY5K
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக