ஜாதக பலனறிதல்
கலப்பு திருமணம் ஜாதக அமைப்பு :-
ஒருவருடைய ஜாதகத்தில் இலக்ன, இராசிக்கு ஏழாமிடம், ஏழாம் வீட்டு அதிபதியுடன், வலுப்பெற்ற சனி அல்லது செவ்வாய் தொடர்பு பெறும் பொழுது அவர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். நடைமுறையில் சனி அல்லது செவ்வாய் தொடர்புடைய தசா புத்திகளும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம்..
மீன லக்னம், தனுசு ராசியில் பிறந்த இவருக்கு லக்ன, ராசிக்கு 7-ஆம் வீட்டு அதிபதியாக புதன் விளங்குகின்றார்.
இலக்னத்திற்கு ஏழில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய புதன், வர்கோத்தமம் மற்றும் திக்பல நிலையில் இருக்கக்கூடிய வலுப்பெற்ற சனியுடன் இணைந்து உள்ளார்.
இங்கே குறிப்பாக சனி வர்கோத்தமம் அடைந்த பாதம் செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் ஆகும்.
அந்த வகையில் 7-ஆம் வீடு மற்றும் ஏழாம் அதிபதிக்கு சனி மற்றும் செவ்வாய் தொடர்பு இருப்பது என்பது தெளிவாகின்றது.
நடைமுறையிலுள்ள தசா புத்திகளுடன் செவ்வாய், சனி தொடர்பு பெறுவதால் ஜாதகர் கலப்புத் திருமணம் செய்தார் என்பது உறுதியாகிறது.
அந்த வகையில் இன்று ஜாதகம் பார்க்க வந்த, மேற்கண்ட ஜாதக நபரிடம் நீங்கள் கலப்பு திருமணம் செய்தவரா? என்று கேட்டவுடன் அவரும் ஆமாம் என்று ஒத்துக்கொண்டார்.
நிறைவாக இலக்ன ராசிக்கு 7-ஆம் இடம், 7-ஆம் வீட்டு அதிபதியுடன் வலுப்பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சனி மற்றும் செவ்வாய்
தொடர்பு பெற்று, தசா புத்திகளும் ஒத்துழைக்கக் கூடிய பட்சத்தில் ஜாதகர் கண்டிப்பாக கலப்புத் திருமணம் செய்வார் என்பது தெளிவாகிறது.
சனி மற்றும் செவ்வாய் லக்னத்துக்கு ஏழாமிடம், ஏழாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெறும்போது ஜாதகர் ஜாதி மாறியும், ராகு கேதுக்கள் ஏழாம் இடம் 7-ஆம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெறும் போது ஜாதகர் தன்னுடைய மதம் மாறியும் திருமணம் செய்வார்...
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக