பெற்றோர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
மதுரையைச் சேர்ந்த திரு ரவி என்பவரின் Whatsapp கேள்விக்கான பதில்
#Iniyavan
ஒருவருடைய ஜாதகத்தில் பெற்றோர்களின் நிலையைப் பற்றி அறிய முதன்மை கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனின் நிலையையும் 4 மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதி நிலையயையும் கொண்டு அறிந்தாக வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஸ்தானபலம் பெற்று, சுபர்களின் தொடர்பு, மற்றும் சுபர்களின் இணைவில் இருக்கும் போது தாய் தந்தையருக்கு அந்த அமைப்பு நன்மையை தரக்கூடியதாக இருக்கும்.
4 மற்றும் ஒன்பதாம் இடங்களுக்கு ,4 மற்றும் 9ம் அதிபதிகளுக்கு சுபர்களின் பார்வை தொடர்பு மற்றும் இணைவு இருப்பது நல்லதாகும்.
அதேபோல் சந்திரனின் ஆட்சி வீடான கடகம் மற்றும் சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு சுபர்களின் தொடர்பு இருப்பதும் பெற்றோர்களின் ஆரோக்கியம், ஆயுளுக்கு நல்ல அமைப்பாகும்.
4 மற்றும் 9 கூடியவர்கள் பாப கிரகங்களாகி அதே இடத்தில் ஆட்சி பெற்றிருக்கும்போது கண்டிப்பாக சுபர்களின் இணைவு அல்லது பார்வை இருந்தாக வேண்டும். இல்லையெனில் தொடர்புடைய தசா புத்திகளில் பெற்றோர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு..
கவனம் தேவை.
4 மற்றும் 9 ஆம் அதிபதிகளுக்கு அல்லது நான்கு, ஒன்பதாம் இடங்களுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவிகளின் பார்வை தொடர்பு இருக்கும் போது குறிப்பிட்ட தசா புத்திகளில் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது ஆகும்.
பெற்றோர்களை சுட்டிக்காட்டக் கூடிய இடங்களான 4 மற்றும் ஒன்பதாம் இடங்களில் ராகு கேதுக்கள் இருக்கும் நிலையில் தசா புத்திகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பெற்றோரின் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.
நான்காம் வீட்டு அதிபதி அல்லது நான்காம் இடத்திற்கு மற்றும் ஒன்பதாம் வீட்டு அதிபதி அல்லது ஒன்பதாம் அதிபதிக்கு சுபர்களின் தொடர்பு இருக்கும் போது பாதிப்பு இருப்பது இல்லை.
சுபர்களின் தொடர்பு மேற்கண்ட அமைப்பிற்கு இல்லாத நிலையில் தாய் தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லதாகும்.
எந்த ஒரு பாவகத்திற்கும்,எட்டாம் பாவகம் பாதிப்பினை தரும் என்ற வகையில் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவகங்களுக்கு எட்டாம் பாவகங்கள் பாபர் தொடர்பு பெற்று தசாபுத்தி நடக்கும் போது பெற்றோர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் வரலாம்.
அதாவது தாய் ஸ்தானத்தினைச் சுட்டிக்காட்டும் நான்கிற்கு எட்டாம் பாவகமான லக்னத்திற்கு பதினொன்றாம் பாவகத்தின் தசாபுத்திகள் பாபர் தொடர்பு இருப்பின் தாயாருக்கு உடல்நல பாதிப்பையும், அதேபோல் தந்தை ஸ்தானத்தினை சுட்டிக்காட்டும் ஒன்பதிற்கு எட்டாம் பாவகமான, லக்னத்திற்கு நான்காம் பாவகம் பாபர் தொடர்பு பெற்று தசாபுத்தி நடக்கும் போது தந்தைக்கு உடல் நல பாதிப்புகள் வரலாம்.
அதேபோல் தாயார் ஸ்தானமான 4-ஆம் இடத்திற்கு விரைய பாவகமான மூன்றாம் பாவக தசா புத்திகளும், தந்தையின் ஸ்தானமான ஒன்பதாம் பாவகத்திற்கு விரைய ஸ்தானமான எட்டாம் பாவகத்தின் தசா புத்திகளும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
சுய ஜாதகத்தில் கடகம் மற்றும் சிம்மம் பாபர்களின் தொடர்பை பெற்ற தசாபுத்திகள் தாய், தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்..
கோட்சாரத்தினைப் பொருத்தவரை அட்டமச் சனி மற்றும் ஏழரைச்சனி நடக்கக்கூடிய காலகட்டங்களில் தாய் தந்தையர் மட்டுமின்றி தன்னுடைய நெருங்கிய உயிர்காரகத்துவ உறவுகளின் ஆரோக்கியத்தில் ஜாதகர் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.
அதேபோல் கோட்சார ரீதியாக சனி பெயர்ச்சி ஆகும்போது ராசிக்கு 4 மற்றும் 9-ஆம் இடங்களுக்கு தொடர்பு இருக்கும் பொழுதும் தாய் தந்தையரின் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லதாகும்.
கோட்சார ரீதியாக ராகு மற்றும் கேது ராசிக்கு 4 அல்லது ஒன்பதாம் இடத்திற்கு வரும் பொழுதும் தாய் தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி கொள்வது நல்லதாகும்.
கோசட்சார ராகு கேதுக்கள் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சூரியன் மற்றும் சந்திரனை தொடும் போது அல்லது நான்கு ஒன்பதாம் அதிபதிகளை தொடும் போது , பெற்றோர்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தில் ஜாதகர் அதீத கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும்
ஒருவருடைய ஜாதகத்தில் 4 மற்றும் ஒன்பதாம் இடங்கள் மற்றும் அதிபதிகள், தாய், தந்தையரை சுட்டிக்காட்டக் கூடிய சூரியன் மற்றும் சந்திரன் இவற்றிற்கு எந்த அளவிற்குக் சுபர்களின் தொடர்பினை பெற்று வலுப்பெற்றுள்ளதோ அந்த அளவிற்கு ஜாதகர் தன்னுடைய பெற்றோரின் மீது பிரியமாக இருப்பார்.
பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு ஜாதகர், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடு களில் பக்தி உணர்வுடன் கலந்துகொள்வது மேலானதாகும்.
தொடர்ச்சியாக பெளர்ணமி தோறும் சக்தியின் வடிவமாக திகழக்கூடிய கூடிய அம்பாளின் வழிபாட்டையும்,
அனுதினமும் சூரிய பகவான் வழிபாட்டை கடைப்பிடித்து வருவதும் ஜாதகருக்கு மட்டுமின்றி ஜாதகருடைய பெற்றோருக்கும் மிகுந்த அளவில் நன்மை தரக் கூடியதாகும்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன்
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக