சனி, 4 டிசம்பர், 2021

சிசேரியனுக்கு நாள் குறிப்பது எப்படி? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சிசேரியனுக்கு நாள்  குறிப்பது எவ்வாறு?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரின் விதியும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
#Iniyavan
பிறந்த நேரத்தினை மையமாகக் கொண்டே நட்சத்திரம், இராசி, என சகலமும் நிர்ணயிக்கப்பட்டு அதனைக் கொண்டே எப்போது என்ன நடக்கும் என்பதை அறிவதற்கு தசா புத்திகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அவ்வகையில் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே சரியான நேரத்தை குறித்துக்கொண்டு அதனை பெற்றெடுக்கும் போது குழந்தையின் எதிர்காலம்  சரியாக அமையுமா என்று கேட்டால் நிச்சயம் சரியாக அமையும்.
ஆனால் அந்த குழந்தையானது அந்தத் தருணத்தில் புவிதனில் பிறப்பெடுக்க இறைவன் அனுமதித்திருந்தால் அனைத்துமே நலமாய் நிகழும். அவ்வகையில்  சரியான தருணத்தில் சிசேரியன் மூலம் குழந்தையினை  ஈன்றெடுப்பதற்கு  நாள் குறிப்பிடுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை அறிவோம்.

#Iniyavan
எந்த ஒரு ஜாதகத்திலும் இலக்னமே தலையானது,அந்த வகையில் குழந்தை பிறக்கும் நேரத்தில் இலக்னம், இலக்னாதிபதி வலு குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது முக்கியமான விஷயம் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் நிலை ஜாதகத்தில் கவனிக்கப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் சூரியனோ சந்திரனோ  பாதிப்பின்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியன் மற்றும் சந்திரன் இராகு கேதுக்களால் கிரகணம் அடையாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
சூரியன் மற்றும் சந்திரன் இவர்களின் பலம் குறையும் பட்சத்தில் 4 மற்றும் 9ம் அதிபதிகள்  பாதிப்பில்லாதவாறு
பார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பாக சூரியனும் பாதிக்கப்பட்டு ஒன்பதாம் அதிபதியும் பாதிக்கப்படும்போது  குழந்தையின் தந்தையானவர் பாதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்னம் மற்றும் இலக்னாதிபதியை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்க்குமாறு அமைத்தல் நலம்.
இலக்னத்தின் ஆரம்ப மற்றும் முடிவடையும் இலக்ன சந்தி அமையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்னத்தின் நடுப்பகுதியை அனுசரித்து நேரம் குறிப்பது நலம்.

திரிகோண அதிபதிகளான  ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.
மேற்கண்ட அதிபதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் பாவகம் கெடக்கூடாது. பாவகம் கெடும் பட்சத்தில், அதிபதிகள் கெடக்கூடாதவாறு அனுசரித்து செயல்படுதல் அவசியம்.

சூரியன்,சனி இணைவு,
சூரியன் மற்றும் சனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாதவாறு அமைத்தல் நலம். ஏனெனில் சூரியன்,சனி  ஒருவரையொருவர் பார்க்கும் நிலையில்  ஜாதகருக்கும் ஜாதகரின் தந்தைக்கும்  கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
அல்லது தந்தையின் அன்பானது குழந்தைக்கு கிடைக்காமல் போகலாம்.
மேற்கண்ட சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் சுபகிரகங்களின் பார்வை அந்த அமைப்பிற்கு இருக்க வேண்டும்.

தசாபுக்தி ரீதியில் இலக்ன அவ யோக தசைகள் தொடர்ச்சியாக நடைமுறையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

திரிகோண அதிபதிகள் பாதிக்கப்பட்டாலும் தசாவானது  நடைமுறையில் இல்லாதிருப்பது நலம்.
திரிகோண அதிபதிகளில் (5,9) ஒருவராவது நன்றாக இருக்க வேண்டும் இருவருமே கெட்டிருக்கக் கூடாது. #Iniyavan

இராகு எந்த ஒரு கிரகமும் சேராமல் இராகுவால் எந்த ஒரு கிரகமும் பாதிப்பின்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.
இலக்னத்தை குறைந்தபட்சம் ஒரு சுபராவது பார்த்துக் கொண்டிருப்பது நன்மையாகும்.
மேற்கண்ட விதிகளை அனுசரித்து சிசேரியன் நாட்குறிப்பதில் நடைமுறை இடர்பாடுகள் அதிகம். அனைத்து முக்கிய அமைப்புகளும் பாதிக்காதவாறு ஒரளவேனும் அனுசரித்துக் குறிப்பது நல்லது.


நிறைவாக நாம் குறித்திருக்கும் தருணத்தில் குழந்தை பிறப்பதற்கு இறைவானவன் அனுமதித்திருக்க வேண்டும்.
அனுமதிக்கும் பட்சத்தில் அனைத்தும் சுபமே..
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக