தசா புத்தி பலன் சொல்வது எவ்வாறு?
மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்துமே தசாபுத்தி உடன் தொடர்புடையதாகும்.
அந்த வகையில் நடக்கக்கூடிய தசாபுத்தி நன்மையைச் செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பது தெரிவதற்கு அந்த லக்னத்திற்கு நன்மையை செய்ய கடமைப்பட்டவர்கள் யார் தீமையை செய்ய கடமைப்பட்டவர்கள் யார்?
எந்த கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கும்போது எதுமாதிரியான பலன்களை கொடுக்கும் என்ற அடிப்படை விஷயங்கள் அனைத்துமே முன்கூட்டியே தெரிந்து இருக்க வேண்டும்.
ஒரு லக்னத்திற்கு வேண்டத்தாகவர்களாக கருதப்பட்ட 6 8 12ம் அதிபதிகள் போன்ற எந்த நிலையில் இருக்கும் போது நன்மையே செய்வார்கள் எந்த நிலையில் இருக்கும்போது ஜாதகருக்கு அதிகமான பாதிப்பை தருவார்கள் என்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.
அதே போல் லக்ன யோகர்கள் என்று அழைக்கப்படக்கூடிய கிரகங்கள் எதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகருக்கு நல்ல பலனை தர இயலாது போகும் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். #Iniyavan
12 லக்னங்களுக்கும் இது போன்ற அடிப்படையான விஷயங்களில் ஒருவருக்கு தெளிவு ஏற்படும் பொழுது ஒரு தசா புக்தியில் எதுமாதிரியான நற்பலன்கள் நடக்கும்? எது மாதிரியான விஷயங்களில் ஜாதகர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை ஓரளவு தெரிந்து உணர இயலும். #Iniyavan
ஜாதகத்தில் தசாபுத்தி ரீதியாக லக்ன யோகர்களின் தசா புத்திகள் நல்ல நிலையில் நடந்தாலும் கோட்சார ரீதியாக அஷ்டம மற்றும் ஏழரைச்சனி, குறிப்பாக ஜென்மச்சனி நடக்கும் காலகட்டங்களில் ஜாதகரால் பெரியளவில் நல்ல பலனை எதிர்பார்க்க இயலாது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் சொல்லக்கூடிய பலன்கள் பொய்த்துப் போக வாய்ப்புண்டு.
அதே நேரத்தில் சுய ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடப்பதால் கோட்சார ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஜாதகரை பெரிய அளவில் பாதிக்காது என்பதையும் தெரிந்துணர வேண்டும்.
கோட்சார ரீதியாக சனி பகவான் தரக் கூடிய பாதிப்புகளை பொருத்தவரை ஒருவரின் சுய ஜாதகத்தில் சனி நேரடியாக ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபர்களின் தொடர்பை பெறாத நிலையில் இருக்கும் போது
அஷ்டம மற்றும் ஏழரைச்சனி நடக்கும் போது ஜாதகருக்கு ஏதேனும் ஒரு வகையில் வயதிற்கு ஏற்ற வகையில் பாதிப்பை தரும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நல்ல தசாபுக்திகள் நடந்தாலும் குறிப்பிட்ட கோட்சாரதருணம் முடியும் வரை தொழில் நடவடிக்கைகளில் பெரிய அளவில் முதலீடு போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதுபோன்று அவயோக கிரகங்களின் தசாபுத்தி சார்ந்த காலகட்டங்களிலும்
வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட செய்யக்கூடிய விஷயங்களை மேற்கொள்ளும்போது முடிவுகளை மேற்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் செயலாற்றுவது நல்லதாகும்.
நன்றிகள்...
Astrologer..
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக