கிரகங்களின் எதிர்மறை தாக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை பார்ப்போம்.
சற்று நீண்ட பதிவு...
பதிவை முழுமையாக படியுங்கள்..
வேத ஜோதிடத்தின் அடிப்படையில் வான்வெளியில் நகரக்கூடிய கிரகங்கள் மனித வாழ்க்கையின் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அது எப்படி எனப் பார்ப்போம்..#Iniyavan
மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக, மூல வித்தாக இருப்பவை எண்ணங்கள்தான். ஏனெனில் எண்ணங்கள்தான் செயல்களாகின்றன.
அத்தகைய எண்ணங்களை தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை கிரகங்கள் என்றால் மிகையல்ல. எளிமையாகச் சொல்வதென்றால் மனிதனுடைய உணர்வுகள் கூட கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டவை தான்.
Iniyavan Karthikeyan
தனிப்பட்ட மனிதனின் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுப்பெற்றுள்ளதோ, எந்த கிரகம் வலுப்பெற்ற நிலையில் லக்னம் லக்னாதிபதி, இராசி, ராசிநாதன் இவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதோ அந்த கிரகத்தின் குண இயல்புகளை அந்த மனிதன் பிரதிபலிப்பான். உதாரணத்திற்கு சூரியன் வலுப்பெற்ற நிலையில் லக்னம், லக்னாதிபதி ராசி இவற்றுடன் தொடர்பினை பெரும் பொழுது சூரியனின் காரகத்துவங்களான ஆளுமை,அதிகாரம்,முன்கோபம், இரக்கமின்மை, அகங்காரம் ஆகிய குணங்களை ஜாதகர் பெற்றிருப்பார்.#Iniyavan
ஒருவேளை வலுப்பெற்ற குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருவின் காரகத்துவங்களான பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நேர்மையாக செயல்படக்கூடிய குணம், பிறரை மதிக்க கூடிய குணம், எல்லோரையும் தன்னைப்போலவே நல்லவன் என்று எண்ணக்கூடிய எண்ணம் போன்ற உணர்வுகளை ஜாதகர் பெற்றிருப்பார்.
வலுப்பெற்ற செவ்வாய் தொடர்பு கொள்ளும்பொழுது கட்டுப்பாடற்ற கோபம், அதீத வேகம்,பழிவாங்கும் உணர்வு, முன்யோசனை இன்றி செயல்படுதல், உடல் பலத்தை பிரயோகித்து தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய குணம் போன்ற குணங்களை கொண்டிருப்பார்.
சுக்கிரன் தொடர்பு கொள்ளும்போது காதல், காமம், அன்பு, பாசம் பொழுதுபோக்கு விஷயங்கள், அழகுணர்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவராக ஜாதகர் இருப்பார்.
சந்திரன் தொடர்பு கொள்ளும்பொழுது மென்மையான செயல்பாடுகளை கொண்டவராக, தாய்மை உணர்வு, இரக்க மனப்பான்மை, பொது நலம், அன்பிற்கு முக்கியத்துவம் தருபவர்களாக ஜாதகர் செயல்படுவார்.
வலுப்பெற்ற சனி தொடர்பு கொள்ளும்பொழுது சுயநலமாக செயல்படுதல், வஞ்சக குணம், சோம்பல், மந்த குணம், அதீத நிதானம் போன்ற குணங்களை ஜாதகர் பெற்றிருப்பார்.
வலுப்பெற்ற புதன் தொடர்பு கொண்டால் ஜாதகர் புத்திசாலித்தனம் கொண்டவராக, சாமர்த்தியமான செயல்பாடுகளைக் கொண்டவராக, இடத்திற்கு தகுந்தார் போல் செயல்படும் தன்மை கொண்டவராக, காரண காரியத்தோடு பிறரை அனுசரித்து செல்லக்கூடிய குணம் படைத்தவராக, நகைச்சுவையாக பேசுபவராக ஜாதகர் இருப்பார்.
வலுப்பெற்ற ராகு தொடர்பு கொள்ளும் பொழுது பேராசை உணர்வு, தான் என்ற அகங்காரம், கர்வம்,எதிலும் திருப்தியற்ற தன்மை போன்ற குணங்களை கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
கேது தொடர்பு கொள்ளும்போது எதிலும் பற்றற்ற நிலை, சலிப்பு, ஞானம், கடவுள் பக்தி போன்ற குணங்கள் தென்படும்.
ராகு கேதுக்கள் பொறுத்தவரை இருக்கும் வீட்டின் அதிபதியின் நிலையையும் பிரதிபலிக்கக் கூடியவராக இருப்பார்கள்.
இவை பொதுவான விஷயங்கள் தான். ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதகத்திலும் அந்த கிரகம் வகிக்கக்கூடிய ஆதிபத்தியம்,நின்ற வீட்டின் அதிபதியின் இயல்பு, மற்ற கிரகங்களின் பார்வை மற்றும் இணைவு இவற்றினைப் பொறுத்து கலப்பு பலன்கள் ஏற்படும்.
அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும், உணர்வுகளும் மாறுபடுகின்றன. #Iniyavan
உதாரணமாக புத்திசாலித்தனத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் புதன் ஆவார்.
அந்தவகையில் ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வலுப்பெறும் பொழுது ஜாதகர் புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார்.
ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை ஜாதகர் எந்த வழியில் பயன்படுத்துவார் என்பது அந்த ஜாதகத்திற்கு புதன் பெற்றுள்ள ஆதிபத்தியம், புதன் நின்ற வீட்டின் அதிபத்யம், புதனைப் பார்த்த இணைந்துள்ள கிரகங்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும்.
அதைப் பொறுத்து அவர் புத்திசாலித்தனத்தை குறுக்கு வழிகளிலோ அல்லது நேர்மையாகவோ பயன்படுத்த வாய்ப்பு உண்டு. #Iniyavan
இவ்வாறு மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணமாக திகழ்கின்ற எண்ணங்களே கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருப்பதை கூர்ந்து கவனித்து ஆராய்ந்தாலே கிரகங்கள் மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்திட இயலும்.
ஒரு மனிதனுடைய எண்ணங்களை தீர்மானிக்கும் சக்தி படைத்த கிரகங்கள் அவனுடைய முன்ஜென்ம பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நேர்மறையான அல்லது எதிர்மறையான பலன்களை தங்களுடைய தசா புத்தி காலங்களில் வழங்குகின்றன.
குறிப்பிட்ட கிரகத்தின் தசா புக்தி நடக்கும் போது அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கு ஏற்பவே ஒரு மனிதனுடைய எண்ணங்கள் அமைந்திருக்கும். அந்த எண்ணங்களுக்கு ஏற்பவே அவன் செயல்படுவான்.
அந்த வகையில் ஒரு மனிதனுடைய எந்த ஒரு செயலுக்கும் மூலகாரணமாக இருப்பவை எண்ணங்கள்.
ஒரு மனிதனுடைய நற்செயலுக்கும் அவன் செய்கின்ற பாவ செயலுக்கும் காரணமாக இருப்பவையும் அவனுடைய மனதில் எண்ணக்கூடிய எண்ணங்கள்தான்.#Iniyavan
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மனதிற்கு காரகத்துவம் வகிக்க கூடிய கிரகம் சந்திரன். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்று அழைக்கின்றனர். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்கள் உதயமாவது மனதில்தான்.அதனால் தான் சந்திரனை மனோக்காரகன் என்றழைக்கின்றனர்
நுட்பமாக ஆராய்ந்தால் மனிதன் பிறக்கின்ற நேரத்தில் சந்திரன் பயணிக்கின்ற நட்சத்திரத்தை தான், பிறந்த நட்சத்திரம் என்கிறோம். பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் மனிதனுடைய தசாபுத்தி நிகழ்வுகள் நடக்கின்றன. #Iniyavan
தசாபுத்திகளின் அடிப்படையில் தான் மனிதன் செயல்படுகின்றான்.
ஒரு கிரகத்தின் தசா புக்தி நடக்கும்போது அந்த கிரகம் வகிக்கக்கூடிய ஆதிபத்தியம் மற்றும் அந்த கிரகத்தின் காரகத்துவம் ஆகியவற்றிற்கு ஏற்பவே மனிதனுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்கும்.
இவ்வாறு தசாபுத்தி ரீதியாக மனோக்காரகன் சந்திரன் வழியாக மனிதனுடைய மனங்களை கிரகங்கள் ஆளுகை செய்கின்றன. #Iniyavan
ஒரு மனிதன் இயல்பிலேயே நல்ல குணங்களை கொண்டவராக பிறப்பு எடுப்பதற்கும், ஒரு மனிதன் இயல்பிலேயே மோசமான குணங்களை கொண்டவராக பிறந்திருப்பதற்கும் அவருடைய முன்ஜென்ம பாவ புண்ணிய கர்மாக்கள் காரணமாகின்றன.
தெளிவாகச் சொல்வதென்றால் ஒரு மனிதனுக்கு இயல்பிலேயே மோசமான குணங்கள் இருக்கின்றன என்றால், அந்த மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்கள் அதிகம் இருக்கின்றன என்று பொருள்.
அந்த மோசமான எண்ணங்கள்
மனிதனை தவறான செயலை செய்ய வைக்கும். அந்த தவறான செயல் அதற்கான தண்டனையை பெற்றுத் தரும். இவ்வாறு இறைவன் அந்த மனிதனுடைய முன்ஜென்ம தீய கர்மாக்களின் பலனை அனுபவிக்க வைக்கின்றார்.
இதே போல் ஒரு மனிதன் இயல்பிலேயே நல்ல குணங்களை பெற்று இருக்கிறான் என்றால் அவன் நல்ல செயல்களைச் செய்வான். #Iniyavan
ஆகவே ஒரு மனிதனுடைய எல்லா பிறவிகளுக்கும்,எல்லா செயல்களுக்கும் காரணமாக இருப்பவை எண்ணங்கள் மட்டுமே என்றால் மிகையல்ல.
அதனடிப்படையில் எண்ணங்களை சீர்படுத்திக் கொள்ளும் பொழுது நாளடைவில் எல்லாமே சரியாக நடக்கத் துவங்கும். எண்ணங்களின் மகத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் "எண்ணம்போல் வாழ்க்கை" என்று சொல்லியுள்ளனர்.
சுவாமி விவேகானந்தரும் "நீ எதுவாக எண்ணுகிறாயோ அதுவாகவே மாறுகிறாய்"என்று கூறியுள்ளார்.#Iniyavan
ஆகவே நாம் எந்தெந்த விஷயத்தில் தவறாக இருக்கின்றோம். தவறுதலாக செயல்படுகின்றோம் என்பதை உண்மையாக அறிந்து கொண்டு அதிலிருந்து விடுபடுவதற்காக தன்னளவிற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்து அதை பின்பற்றுவதன் மூலம் தீய கர்மாக்கள் செய்வது குறைந்து போகும். நாளடைவில் நல்ல கர்மாக்களை நோக்கி பயணிக்கத்துவங்குவோம்.நல்ல எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, நல்ல செயல்களை நோக்கி பயனிக்கத் துவங்கிவிட்டாலே நாளடைவில் பிரச்சினைகளும் குறையத் துவங்கும். #Iniyavan
எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கக்கூடிய எண்ணங்களை முதலில் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணங்களை சரி செய்வதற்காகவே நம்முடைய முன்னோர்கள் இறைவழிபாடு, மந்திர ஜெபம், தியானம் போன்றவற்றை தொடர்ச்சியாக பின்பற்றச் சொல்லியுள்ளனர்.
அதோடு இறை வழிபாடுகளை கடைபிடிக்கும் பொழுது, உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் அவசியம் என்பதை எடுத்துரைத்தனர்.#Iniyavan
ஆகையால்தான் ஜோதிடர்கள் ஒரு மனிதனுக்கு தசாபுத்திகள் மற்றும் கோட்சாரம் சரியில்லாத நிலைகளில் ஆலயங்களுக்கு செல்லுமாறும், வழிபாடுகளையும்,வாழ்வியல் பரிகாரங்களையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி ஆலயத்திற்கு தொடர்ச்சியாகச் சென்று இறைவனைத் தரிசிக்கும் பொழுது நாளடைவில் அலைபாயும் மனமானது அமைதியடையத் துவங்கும்.
மனோபலம் அதிகரித்து,
மனம் தூய்மை அடையும்.
மனமானது அமைதி அடையும்.
மனம் அமைதி அடையும் பொழுது பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் பிறக்கத் துவங்கும்.#Iniyavan
ஆகவே மனிதனுடைய எல்லா செயல்களுக்கும் காரணமாக இருக்கின்ற எண்ணங்கள் தூய்மை அடையும் பட்சத்தில் நாம் நேர்மையாக சிந்திக்கத் துவங்குவோம்.
நேர்மையாக சிந்திக்கத் துவங்கி விட்டாலே தீமை தரும் செயல்களை தவிர்க்க துவங்குவோம். தீமை தரும் விஷயங்களை தவிர்த்து விட்டால் நாளடைவில் தீய கர்மாக்களும் குறையத் துவங்கும்.#Iniyavan
அவ்வகையில் பாதிப்பினை தரக்கூடிய வகையில் எந்த கிரகத்தின் தசா புக்தி நடைபெற்றாலும், எப்படிப்பட்ட மோசமான தசா புக்தி நடைபெற்றாலும்
அதை எதிர் கொள்வதற்கான சிறந்த வழி...
முதலில் சரி செய்ய வேண்டிய முதன்மையான பரிகாரம்...
நம்முடைய எண்ணங்களை சரி செய்வது கொள்வதுதான்...
தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை...
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
உன்னதமான பதிவு சார்..
பதிலளிநீக்குExcellent
பதிலளிநீக்கு