ஒருவருடைய தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு சுய ஜாதகத்தில் மூன்று விஷயங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
முதன்மையாக வீரிய ஸ்தானம், அதாவது தேக பலத்தை(உடல்) சுட்டிக் காட்டக்கூடிய மூன்றாம் இடம், மூன்றாம் வீட்டு அதிபதி எந்த நிலையில் இருக்கின்றார் என்பதை பார்க்க வேண்டும்.
அடுத்ததாக ஜாதகருக்கு தாம்பத்யத்தில் இருக்கக்கூடிய ஈடுபாடு, செயல்படக்கூடிய நிலை விருப்பம் போன்றவற்றை சுட்டிக் காட்டக்கூடிய ஏழாமிடம் , ஏழாம் வீட்டு அதிபதி, இவற்றோடு சுக்கிரனுடைய நிலையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
அடுத்ததாக அவருடைய அயன சயன போக ஸ்தானம், அதாவது படுக்கை அறையில் கிடைக்கக்கூடிய இன்பம் அவருடைய தூக்கம் போன்றவற்றை சுட்டிக் காட்டக்கூடிய 12ஆம் இடம், 12ஆம் வீட்டு அதிபதி போன்றவற்றின் நிலையை ஆராய வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகன் மற்றும் இன்பங்களுக்கு காரகம் வகிக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் இயல்பான நிலையில் அமைந்திருக்கும் போது, தாம்பத்ய வாழ்க்கையும் இயல்பானதாக இருக்கும்.
சுக்கிரனோடு தொடர்பு கொண்டுள்ள கிரகங்களின் நிலையை பொருத்து அவருடைய தாம்பத்ய விருப்பம் எப்படி இருக்கும் என்பதை அறிய இயலும்.
சுக்கிரன் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் வலுப்பெற்று இருக்கும் விருப்பங்கள் மற்றவர்களை விட கூடுதலாக இருக்கும்.
சுக்கிரன், நீச செவ்வாய், நீச சனி போன்ற கிரகங்களுடன் இணைந்து இருக்கும் பொழுது, ஜாதகருடைய தாம்பத்ய விருப்பங்கள் எதிர்மறையாக இருக்க கூடும்.
இது போன்ற நிலைகளில் சுபர் தொடர்பு இருப்பது நல்லதாகும்.
தாம்பத்யம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினைகள் சரியாக ஶ்ரீரங்கநாதரை வெள்ளிதோறும் காலை சுக்கிர ஓரையில் வழிபட்டு வருவது நல்லது.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
S u right
பதிலளிநீக்கு