புதன், 14 செப்டம்பர், 2022

நீசபங்கம் பெற்ற கிரகத்தின் வீடுகளில் இருந்து ஒரு கிரகம் தசா நடத்துவது நல்லதா?


ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஒரு கிரகத்தின் தசா நன்மை தருவதற்கு வீடு கொடுத்த கிரகம் வலுப்பெற்ற நிலையில் இருப்பது நல்லதாகும். #Iniyavan
ஒரு கிரகத்தின் தசாவிற்கான பலனை கணிப்பதை பொருத்தவரை அந்த கிரகம் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெற்று இருக்கிறது? லக்னத்திற்கு எந்த வீட்டில் இருக்கின்றது?
லக்னாதிபதிக்கு தசா நடத்தக் கூடிய கிரகம் எப்படிப்பட்டது? நண்பரா அல்லது பாபரா? தசா நடத்தக் கூடிய கிரகம் ராசிக்கு எப்படிப்பட்டது என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.
இதோடு தசா நடத்தக் கூடிய கிரகத்திற்கு இருக்கின்ற இடம், எப்படிப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.
பகை அல்லது நீச வீடுகளில் இருக்கக் கூடிய கிரகங்கள் சுபர் தொடர்பு பெறாத நிலையில் நல்ல பலனைத் தருவதில்லை.
இத்தகைய விதிகளோடு கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான விதி என்னவெனில் வீடு கொடுத்தவரின் நிலை எப்படிப்பட்டது என்பதாகும்.
வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருக்கும்பொழுது தசை நன்மையைத் தரக் கூடியதாகவே இருக்கும்.#Iniyavan
ஆகையால்தான்  உச்சனுடைய வீட்டில் இருக்கக் கூடிய கிரகங்கள் தங்களுடைய தசா புத்தி காலங்களில் நல்ல பலனைத் தரும் என்பது பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.


தசா நாதனுக்கு வீடு கொடுத்தவன் பலவீனமாக இருக்கும்போது தசா நாதனால் சுதந்திரமாக செயல்பட இயலாது என்பதால்தான் நீசம் பெற்ற கிரகத்தின் வீடுகளில் இருக்கக்கூடிய தசா காலங்கள் நன்மையை தராது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு கிரகம் நீசம் பெற்று இருக்கும் பொழுது நீசம் பெற்ற கிரகத்தின் காரகத்துவ, ஆதிபத்ய விஷயங்களில் ஜாதகருக்கு குறைபாடுகள் இருக்கும். நீச்சம் பெற்ற கிரகம் பல்வேறு வகைகளில் நீசபங்கம் பெற்றிருக்கும் போது அதனுடைய காரகத்துவ விசயங்கள்  ஜாதகருக்கு தடையின்றி கிடைக்கக்கூடும்.#Iniyavan

நீசம் பெற்ற ஒரு கிரகம், நீசபங்கத்தை எந்த அளவிற்கு பெற்று இருக்கிறதோ, அதற்கேற்ப நீசம் பெற்ற கிரகத்தின் காரகத்துவ விஷயங்கள் ஜாதகருக்கு கூடுதலாக கிடைக்கும்.
உதாரணத்திற்கு புதன் நட்பு வீடுகளில் இருப்பதற்கும், நீசம் பெற்று பல்வேறு வகைகளில் நீசபங்கம் அடைந்து இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
சுய ஜாதகத்தில் புதன் நட்பு நிலையில் இருப்பவர்கள் இயல்பாகவே புத்திசாலித்தனமாக இருப்பார்கள். அந்த லக்னத்திற்கு புதன் என்ன ஆதிபத்தியமோ அந்த ஆதிபத்ய பலனை தருவதற்கு கடமை பட்டவராக இருப்பார்.
ஆனால் புதன் நீசம் பெற்று, பல்வேறு வகைகளில் நீசபங்கம் அடைந்த ஒருவருக்கு, புதன் நட்பு நிலையில் இருப்பதை விட கூடுதல் வலிமை பெற்றவராக இருப்பார். இந்நிலையில் புதனுடைய காரகத்துவ விஷயங்கள் ஜாதகரிடம் மேலோங்கி இருக்கும்.
புதன் நட்பு நிலையில் இருப்பவர்களை விட, புதன் நீசமடைந்து பல்வேறு வகையில் நீசபங்கம் பெற்றவர் பல மடங்கு புத்திசாலித்தனமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.#Iniyavan

நீசமடைந்த ஒரு கிரகம், நீச பங்கம் பெற்றிருந்தாலும் அதனுடைய ஆதிபத்திய விஷயங்கள் ஜாதகருக்கு பெரியளவில் சிறப்பு தருவதில்லை.
வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை கடந்த பின்பே ஆதிபத்திய விசேஷங்கள் பலனளிக்க தொடங்கும்.ஆனால் காரகத்துவ விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என்பதை கவனிக்க  வேண்டும்.
நீசம் பெற்ற கிரகங்கள் நீசம் பங்கத்தை அடைந்திருந்தாலும் அதனுடையஆதிபத்தியங்கள் சிறப்பு பெறுவது இல்லை என்பதால் நீசமடைந்த கிரகத்தின் வீடுகளில் இருக்கக்கூடிய கிரகங்களின் தசாபுத்தி காலகட்டங்களும் நல்ல பலனைத் தருவதில்லை.#Iniyavan

நீசமடைந்த கிரகம் பல்வேறு வகையில் நீச பங்கத்தை பெற்றிருந்தாலும் அது நீசமடைந்த கிரகத்தின் காரகத்துவ விசயங்களுக்கு மட்டுமே அதிகப்படியான பலனைத் தரும். ஆதிபத்யங்களுக்கு அல்ல என்பதால் அதன் வீடுகளில் இருக்கக் கூடிய கிரகங்கள் நல்ல பலனை தராது என்பதே இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
அந்த வகையில் நீசபங்கம் பெற்ற கிரகத்தின் வீடுகள் இருக்கக்கூடிய  கிரகங்களின் தசா புத்தி காலங்கள் ஜாதகருக்கு பலன்தராது என்பதுதான் நிதர்சனம்.
ஒருவேளை நீசனின் வீட்டில் இருக்கக் கூடிய கிரகங்கள், வலுப்பெற்ற சுபர்களின் தொடர்பினை பெறும்போது அந்த தசா காலங்கள் நல்ல பலனைத் தரும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக