வெள்ளி, 16 செப்டம்பர், 2022

பாதிப்பை தரக்கூடிய கிரக இணைவுகள் | பரிகாரங்கள்

சனி, செவ்வாய் இணைவு

எந்த ஒரு ஜாதகத்திலும் பாப கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் இணைந்திருப்பது நல்லதல்ல.
இணைந்திருக்கும் பாவகம் லக்னத்திற்கு எத்தனையாவது பாவகமோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களிலும் சனி மற்றும் செவ்வாய் இணைந்திருந்து பார்க்கக்கூடிய இடங்களிலும் பாதிப்புகள் இருக்கும். #Iniyavan
உதாரணத்திற்கு சனி மற்றும் செவ்வாய் இணைந்திருந்து ஏழாம்  பார்வையால் ஐந்தாம் வீட்டை பார்க்கும்போது புத்திரபாக்கியம் சம்மந்தப்பட்ட விஷயங்கள், குழந்தைகள் வகையில் ஜாதகர் எதிர்மாறான பலன்களை பெறுவார்.

ஐந்தாம் பாவகத்திற்கு  வேறு எவ்விதமான சுபர் தொடர்பும் இன்றி, 5 ஆம் அதிபதியும் பலவீனமாக இருக்கும் பொழுது குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பெரிய தடை உண்டு.
புத்திர காரகன் குருவும் பலவீனமாக இருக்கும்போது புத்திர பாக்கியமே கேள்விக்குறியாக இருக்கும்.
சனி மற்றும் செவ்வாய் இணைந்திருப்பதில் இருவரும் இணைந்து பார்க்கக்கூடிய ஏழாம்  பார்வை படக்கூடிய பாவகம் மற்றும் கிரகம் அதிகப்படியான பாதிப்பை பெறும்.#Iniyavan
இதுமட்டுமின்றி சனியின் பிற பார்வையான 3 மற்றும் 10ஆம் பார்வை விழும் இடங்கள், செவ்வாயின் 4 மற்றும் 8-ஆம் பார்வைபடும் இடங்களும் பாதிப்பை தரும்.

சனி, செவ்வாய் இணைவின் பாதிப்பை குறைப்பதற்கு சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரக்கூடிய பிரதோச வழிபாடுகள் தொடர்ந்து கலந்து கொள்வது நலம் தரும்.
தொடர்ச்சியாக ஆஞ்சநேயர் மற்றும் முருகனுக்குரிய காயத்ரி மந்திரங்களை அதிகாலை வேளைதனில் கூறி வருவதும் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும்.#Iniyavan

மூல நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டு வருவது, ஸ்ரீராமஜெயம் எழுதி மாலை கோர்த்து அனுமனுக்கு சமர்ப்பித்தல் நல்லது.
செவ்வாய் சனி இணைவுள்ளவர்கள்  பொதுவாக அதிகப்படியாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள். தங்களுடைய வீண் பிடிவாதத்தையும் அர்த்தமற்ற கோபங்களையும் குறைத்துக் கொள்வது வாழ்விற்கு நலம் தரும்..#Iniyavan

சனி மற்றும் ராகு இணைவு:-

சனி மற்றும் ராகு இணைந்திருப்பதும் கிரக இணைவுகளில் நல்லதல்ல. இணைந்திருக்கும் பாவகத்தின் உயிர் காரகத்துவ உறவுகளால் ஜாதகருக்கு நன்மைகள் குறைவாகவே இருக்கும்.
இணைந்திருக்கும் பாவகம் லக்னத்திற்கு எத்தனையாவது பாவகமோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கும்.
உதாரணமாக லக்னத்திற்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் இந்த இணைவிருக்கும் போது ஜாதகருக்கு பேச்சால் பிரச்சினை,குடும்பம் அமைவதில் தடை தாமதங்கள், குடும்பத்தில் ஜாதகரால் பிரச்சனை, தனம் தொடர்புடைய இடையூறுகளை சந்திப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.
சனி மற்றும் ராகு இணைந்திருக்கும் போது சனியின் பார்வைபடக்கூடிய பாவகங்கள் மற்றும் கிரகங்கள் குறிக்கும் விஷயங்கள் போன்றவற்றிலும் ஜாதகருக்கு தொல்லைகள் இருக்கும்.


சனி மற்றும் ராகு இணைவின் பாதிப்பை குறைப்பதற்கு சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் கால பைரவர் வழிபாட்டை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. நெய் தீபம் ஏற்றி காலபைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வருவதும் பாதிப்பின் வீரியத்தைப் படிப்படியாக குறைக்கும்.
சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வதும் நலம் தரும்.#Iniyavan
சனி கர்மகாரகன் என்பதால் இந்த இணைவு பெரும்பாலும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆகையால் ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும் உண்மையாகவும் இருப்பது நலம் தரும்.
உடல் உழைப்பை நம்பி மட்டுமே பிழைப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து வருவது இந்த இணைவின் பாதிப்பை போக்க வல்லதாகும்.

செவ்வாய், ராகு சேர்க்கை

சனி ராகு இணைவினைப் போலவே செவ்வாய் ராகுவின் இணைவும் இருக்கக்கூடிய பாவகம் மற்றும் செவ்வாய் பார்வை படும் இடங்களிலும் பாதிப்பினை தரும்.
செவ்வாய் மற்றும் ராகு இணைவு பொருத்தவரை ராகு காலத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வருவது நல்லதாகும்.
செவ்வாய் தோறும் வரக்கூடிய பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு பாதிப்பின் வீரியத்தைப் குறைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டி வருவதும் நலம்தரும்.#Iniyavan


சூரியன், சனி இணைவு

பாதிப்பை தரக்கூடிய கிரக இணைவுகளில் சூரியன் மற்றும் சனி இணைவு நல்லதல்ல.
சூரியன் மற்றும் சனி இணைவில் இருவரின் ஏழாம் பார்வை படக்கூடிய பாவகம் கடுமையான பாதிப்பினை தரும் அதோடு சனியின் மற்ற பார்வை(3,10) படக்கூடிய விஷயங்களிலும் ஜாதகருக்கு பிரச்சினை இருக்கும். இந்த இணைவு தந்தை மகன் இடையே உறவு சார்ந்த சிக்கல்களை கடுமையாக தரும்.
அதோடு தொழில் சார்ந்த விஷயங்களிலும் பாதிப்பினை தரும்.
வேலை பார்க்கக்கூடிய இடத்தில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம்.


அனுதினமும் சூரிய உதயத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் சூரிய பகவானை நமஸ்காரம் செய்துவருவது,
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும்.
சனிக்கிழமை சனி ஓரையில் சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லதாகும்.
முக்கியமாக இந்த இணைவுள்ளவர்கள் தந்தையிடம் எரிச்சலான மனோபாவத்தை முற்றிலுமாக குறைத்துக் கொள்வது மட்டுமே மிகச்சிறந்த வாழ்வில் பரிகாரமாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக