ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன்..
பிறப்பு ஜாதகத்தில் சுக்ரன் வக்ரமாகி இருக்கக்கூடியவர்கள் மேற்கண்ட விஷயங்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுக்கிரன் வக்ரம் பெற்ற காலத்தில் பிறந்தவர்கள் காதல், உறவுகள், அன்பு, நட்பு இவற்றினில் ஆழ்ந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். நெருக்கமான உறவகளிடத்தில் நிறைய அன்பு, காதல், எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டுவது இவர்களுக்கு கடினமாக இருக்கும். அவற்றில் பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுக்கிரனது காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவுமுறைகளில் தங்களை மறைத்துக் கொள்வார்கள். உணர்வுகள் சார்ந்த விஷயங்களில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
ஒரு உறவினை நம்புவதற்கு அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கலாம்.#Iniyavan
சுக்கிரனது முக்கிய காரகத்துவ விஷயமான காமத்தில் இவர்களுக்கு இயல்புக்கு மாறான விருப்பங்கள் இருக்கக்கூடும்.
இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணைய அமையாது போகலாம். வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களது அதீத எதிர்பார்ப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுபர் பார்வையில் இருந்தால் பலன் மாறுபட வாய்ப்பு உண்டு.
தங்களுடைய உறவுகளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கக் கூடியவர்களாகவும், தான் சரியான நபருடன் உறவு முறையை கொண்டுள்ளோமா என்று எதிர் பாலின உறவின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க கூடியவர்களாக இருப்பார்கள். சிலவேளைகளில் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இது போன்று செயல்படுவதால் அது இவர்களின் திருமண வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
தங்களது ஆடம்பர வாழ்க்கை, வசதிகள் அதற்கான பண இழப்புகள் ஆகியவற்றிற்காக தொடர்ந்து கவலைப்படுகிறார்கள். உறவுமுறைகள், அன்பு,காதல் போன்ற சுக்கிரனின் காரகத்துவ விஷயங்களில் இவர்கள் பரிபூரணத்தை (உண்மையினை) எதிர்பார்ப்பதால் அவற்றை அவ்வப்போது சந்தேகிப்பது இவர்களின் இயல்பாகவும் அமைந்து விடுகிறது. #Iniyavan
ஜாதகத்தில் சுக்கிரன் எந்த பாவகத்தில் வக்ரமாக இருக்கிறாரோ, அந்த பாவகம் சார்ந்த விஷயங்களிலும், குறிப்பாக அந்த பாவகம் குறிக்கக் கூடிய உறவு முறையிலும் இவர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும்.
உதாரணத்திற்கு சுக்கிரன் ஏழாம் பாவகத்தில் வக்ரமாக இருக்கும்போது ஏழாம் பாவகம் குறிக்கக்கூடிய வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நண்பர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும். ஒருவேளை ஐந்தாம் பாவகத்தில் வக்கிரம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகபடியான எதிர்பார்ப்புகளும் சந்தேகங்களும் இருக்கும்.
வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு மேற்கண்ட பலன்களை மாற்றக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. #Iniyavan
சுக்ரனது வக்ரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இவர்கள் பிரிந்த உறவுகளை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பதால் பிரிந்த உறவுகள் மீண்டும் இவர்கள் வாழ்வில் இணைவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுக்கிரன் வக்ரம் பெற்றவர்கள் காதல், காமம், அன்பு, நட்பு போன்ற விஷயங்களில் உறவுகளிடத்தில் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் சந்தேகங்களையும் குறைத்துக்கொள்வது நல்லது. #Iniyavan
சுக்ரன் வக்ரம் பெற்றதால் பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஶ்ரீ ரங்கநாயகி தாயாரை வழிபடுவதை வழக்கப்படுத்திக் கொள்வதும் எதிர்பாலினரிடத்தில் கன்னியமாக நடந்து கொள்வதும் நல்லதாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக