சுப கிரகங்களான குரு மற்றும் புதன் லக்னத்தில் திக்பலம் பெறுகின்றனர் புதன் திக்பலமாக இருக்கும் போது ஜாதகருக்கு நல்ல புத்திசாலித்தனம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பார்.யாருடைய உதவியும் இன்றி எந்த ஒரு நிகழ்வையும் கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். ஜோதிடம், கணிதம், நுண்கலைகள், ஓவியங்கள் தகவல்தொடர்பு சம்பந்தபட்ட விஷயங்களில் ஜாதகர் திறமையானவராக இருக்கக்கூடும்.
ஜாகர் புத்திசாலித்தனமானவராக நகைச்சுவை உணர்வு மிக்கவராக, இருப்பதற்கு வாய்ப்புண்டு.
பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும்.யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாதவராக இருப்பார்.
எல்லா லக்னங்களுக்கும் புதன் திக் பலம் பெறுவது நன்மையைத் தருமா என்று கேட்டால் கிடையாது.
லக்ன ரீதியாக நல்ல ஆதிபத்தியத்தை பெற்று புதன் லக்னத்தில் இருக்கும் பொழுது நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும்.ஜாதகருடைய குணங்களும் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப்படக்கூடியதாக இருக்கும்.லக்னத்திற்கு தீய ஆதிபத்திய நிலைபெற்று புதன் லக்னத்தில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு குணக்கேடுகளை ஏற்படுத்துவார். ஜாதகரின் தீய குணங்களால் பிறரின் விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்துவார்.
தொடர்ச்சியாக பன்னிரண்டு இலக்ங்களுக்கும் புதன் லக்னத்தில் இருப்பது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் இன்று செவ்வாயின் வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்திற்கு புதன் லக்னத்தில் இருப்பது எது மாதிரியான பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.
செவ்வாயின் லக்னங்களான மேஷம் மற்றும் விருச்சிக லக்னத்திற்கு புதன் திக் பலம் பெறுவது தசாக்காலங்களில் பெரிய நன்மைகளை செய்து விடுவதில்லை.
மேஷ லக்னத்தை பொருத்தவரை புதன் 6-ம் வீட்டு அதிபதியாகி லக்னத்தில் திக் பலம் பெறுவதால் ஜாதகர் விதண்டாவாதம் செய்பவராக இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில விஷயங்களில் மிகுந்த பிடிவாதம் மிக்கவராக இருப்பார்.
ஆறாம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருப்பதால் எப்படியும் செயல்படலாம் என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இங்கே உள்ள புதன் ஏற்படுத்துவார்.மேஷ லக்னத்திற்கு புதன் ஆறாம் ஆதிபத்தியம் பெற்று இருப்பதால் ஜாதகர் தன்னுடைய தவறான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் இவற்றின் மூலமாகவே நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார்.
லக்னத்தில் புதன் இருக்கும்போது லக்னாதிபதியும் நல்ல நிலையில் இல்லாத பொழுது ஜாதகருக்கு நரம்பு, தோல், வலிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இங்கே உள்ள புதன் ஜாதகரை கண்மூடித்தனமாக செலவு செய்ய வைத்து அதனால் கடன் உபத்திரவங்களையும் தர கூடியவராக இருப்பார்.
நிலையான புத்தி மற்றும் செயல்பாடுகள் இன்றி அடிக்கடி தன்னுடைய எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையை இங்கே உள்ள புதன் ஏற்படுத்துவார்.
இங்கே உள்ள புதன், குருவின் பார்வையை பெற்று இருப்பது அல்லது சூரியனுடன் இணைந்து இருப்பது நல்லதாகும்.
செவ்வாயின் மற்றொரு லக்னமான விருச்சக லக்கினத்திற்கு புதன் எட்டாம் அதிபதியாக இருப்பதால் லக்னத்தில் திக் பலம் பெறுவது நன்மையை தராது.
புதன் அட்டமாதிபதியாகி லக்னத்தில் திக் பலம் பெறுவதால் ஜாதகருக்கு குணக் கேடுகளை ஏற்படுத்துவார்.
அட்டமாதிபதியாகி லக்கினத்தில் திக்பலம் பெறுவதால் ஜாதகர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.தெரியாத விஷயத்தைக் கூட தெரியக் கூடியதாக காட்டிக் கொள்வார். எதையும் தன்னால் செய்ய இயலும் என சொல்லக் கூடியவராக இருப்பார்.
முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடிய தன்மையும் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மையும் இங்கே உள்ள புதன் ஜாதகருக்கு தருவார்.விருச்சிக லக்னத்திற்கு புதன் பதினொன்றாம் இடம் என்ற லாப ஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால் பண விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.
குறுக்கு வழிகளில் ஈடுபட்டாவது தன்னுடைய பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்.
விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் அதிபதியான சூரியனுடன் புதன் இணைந்து இருக்கும் பொழுது சம்பாத்தியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தனித் திறமை உள்ளவராக ஜாதகர் இருப்பார்.
இங்குள்ள புதன் குருவின் பார்வையைப் பெறுவதும் நல்லதாகும்.
அடுத்த பதிவில் சுக்கிரனின் இலக்னங்களான ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு புதன் லக்னத்தில் திக்பலம் பெறும்போது எது மாதிரியான எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் பலன்களை ஜாதகருக்கு தருவார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குஎனக்கு இந்த அமைப்பு தான் உள்ளது.
நீங்கள் கூறியது முழுவதும் சரியானது.
எனக்கு மேஷ லக்கினத்தில் புதன் தனித்து திக் பலம் பெற்று உள்ளது.
லக்கின அதிபதியான செவ்வாய் 11ஆம் இடமான கும்பத்தில் சந்திரனுடன் சேர்ந்து உள்ளார்.
குரு 3ஆம் இடமான மிதுனத்தில் இருந்து 9ஆம் பார்வையாக 11ஆம் இடமான லானதிபதியை பார்க்கிறார் ஐயா.