நம்முடைய வாடிக்கையாளர் (ஜோதிட ஆர்வலர்) ஒருவர் இன்று நம்மிடம் தனக்கு ஒரு ஜாமக்கோள் பிரசன்னம் பாக்குமாறு கூறினார். நான் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு எந்த வழிபாட்டை தேர்ந்தெடுப்பது எனக்கு நன்மை தரும் என்று கேட்டார்?
அவர் கேட்ட நேரத்தில் போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னத்தையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
ஜாமக்கோள் பிரசன்னத்தை பொருத்தவரை வாடிக்கையாளர் கேள்வியை கேட்டுவிட்ட பட்சத்தில் உதயமே பெரும்பாலும் அதற்கான பதிலைச் சொல்லிவிடும்.
மேற்கண்ட ஜாமக்கோள் பிரசன்னத்தை பொறுத்தவரை மீனம் உதயமாகவும் கன்னி ஆருடமாகவும் வந்துள்ளது.
உதயத்தில் ஜோதிடத்தை குறிக்கக்கூடிய புதன் அமைந்துள்ளார். உதயாதிபதி குருவும் ஜோதிடத்திற்கு காரகம் வகிக்கக்கூடிய புதனின் உச்ச வீடான கன்னியில் அமைந்துள்ளார்.
வாடிக்கையாளரின் கேள்வியைப் பொறுத்தளவில் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற, தான் எந்த வழிபாட்டை தேர்ந்தெடுப்பது நன்மை தரும் என்பதே.
உதயத்தில் நின்ற கிரகமே பதிலைச் சொல்லிவிடும் என்பதை பொறுத்த அளவில் உதயத்தில் உள்கட்டத்திலும் சரி, வெளிக்கட்டத்திலும் சரி, சந்திரனே இருக்கின்றார்.மேற்கண்ட சந்திரன் மீன உதயத்தை பொறுத்த அளவில் பூர்வ புண்ணியத்தை சுட்டிக்காட்டக்கூடிய ஐந்தாம் வீட்டு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரன் பெண் தெய்வங்களை சுட்டிக்காட்டக்கூடிய காரக கிரகமாகும். அவ்வகையில் இவர் பெண் தெய்வ வழிபாடுகளான (அம்பாள், பார்வதி,இலட்சுமி, சரஸ்வதி, லலிதாம்பிகை, துர்கை,ஆண்டாள்) போன்றவற்றிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது இவருக்கு நன்மை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் தெய்வ வழிபாடுகள் இவருக்கு மிகுந்த உயர்வைத் தரும். ஏனென்றால் உதயமும் ஆருடமும் இங்கே பெண் ராசியாக வந்துள்ளது. உதயாதிபதி குருவும் வெளிக்கட்டத்தில் பெண் ராசியில் அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(உதயாதிபதி என்பது கேள்வி கேட்பவரைக் குறிக்கும்)
அதுமட்டுமின்றி ஆருடாதிபதி புதனும்
உள்கட்டத்தில் பெண் ராசியான மீனத்திலும், வெளிக்கட்டத்திலும் பெண் ராசியான கடகத்திலும் அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் தான் பெண் தெய்வ வழிபாடுகள் அவருக்கு பூரண பலனை வழங்கும் என்ற பதில் தரப்பட்டது.
இந்த ஜாமக்கோளில் ஜோதிடத்திற்கு காரகம் வகிக்கக்கூடிய புதனும், உதயத்தில் நின்ற சந்திரனுடன் பரிவர்த்தனை(கடகத்தில் வெளிக்கட்ட புதன்) அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உதயாதிபதி குருவும் உள்கட்ட புதனுடன் பரிவர்த்தனை அடைந்துள்ளார்.
உதயாதிபதி குரு உள்கட்டத்தில் நீச சனியுடன் இணைந்து இருப்பதும்
ஜாதகரின் செயல் திறனை உணர்த்தக்கூடிய
உதயத்திற்கு பத்தாம் பாவகத்தில் கவிப்பு இருப்பதும் ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்ய மாட்டார் என்பதை உணர்த்துகிறது.
அதுமட்டுமின்றி வந்திருப்பது உபயராசியான மீனம், உபய ராசிக்காரர்கள் பொதுவாக நிலையற்ற அலைபாயும் மனநிலையை பெற்றிருப்பார்கள். ஆருடமான கன்னியும் உபய ராசி என்பது குறிப்பிடத்தக்கது.
மீன லக்ன, ராசிக்காரர்களும் பொதுவாக நிலையில்லாத தன்மையை பெற்றிருப்பார்கள். மீன ராசியை குறிக்கும் உருவம் மீன்களாகும்.மீன்கள் தண்ணீரில் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. அங்கும் இங்கும் உலாவிக் கொண்டே இருக்கும்.
ஆகவே பெரும்பாலும் மீன லக்ன அல்லது மீன ராசிக்காரர்கள் ஒரே விஷயத்தில் நிலையான கவனத்தை செலுத்தும் பொழுது கண்டிப்பாக அவர்களால் பெரியளவில் வெற்றி பெற முடியும். வந்திருந்த நண்பரும் உபய லக்னத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆகவே அவர் வழிபாட்டினை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடாமல் (அ) மாற்றிவிடாமல் தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது ஆச்சர்யத்தக்க நல்ல பலன்களை நிச்சயம் பெறுவார்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
https://t.me/Astrologytamiltricks
https://www.facebook.com/groups/3741
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக