ஜாதகருக்கு வேலை வாய்ப்பினை தரும் ஆறாமிடம்...
ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய், கடன், வறுமை,வம்பு வழக்கு, எதிரி போன்ற பிரச்சினைகளை குறிப்பிடுவதாக நாம் படித்திருப்போம். ஆனால் ஆறாம் இடத்தின் வாயிலாக ஒருவருக்கு நிரந்தரமாக அமையக்கூடிய வேலை என்ன என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
ஏனெனில் ஆறாம் பாவகம் என்பது அடிமை உத்யோகத்தினைக் குறிக்கும்..
ஆறாம் பாவத்தின் வாயிலாக ஜாதகருக்கு எந்த வகையில் வருமானம் வரும் என்பதை அறிந்து கொள்ள இயலும்.
ஏனெனில் ஆறாம் பாவகம் தனஸ்தானமான இரண்டாமிடத்திற்கு திரிகோண பாவகமாக விளங்கும். அதோடு தொழில் ஸ்தனாமான பத்தாம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானமாக வரும்.
சுய ஜாதகத்தில் ஆறாம் இடம், ஆறாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்டுள்ள வலுப் பெற்ற கிரகத்தின் காரகத்துவ தொழில்களை ஜாதகர் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு பத்தாம் இடம், பத்தாம் வீட்டு அதிபதியின் தொடர்பு கொண்ட வலுப்பெற்ற கிரகத்தின் தொழில் அமையும் என்பதை நாம் படித்திருப்போம்.
ஆனால் நான் பார்த்தவரை பத்தாம் பாவக தொடர்புகளை விட ஆறாம் பாவக தொடர்புகள் ஜாதகரின் வேலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆறாம் பாவத்தின் அடிப்படையில் தொழில் அமைந்த ஜாதகங்களை பார்ப்போம்.
மிதுன லக்னம் கன்னி ராசியில் பிறந்த இவருக்கு ஆறாம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானமான 2-ல் நீசம் பெற்ற நிலையில் இருக்கின்றார் அவருடன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய குரு இணைந்துள்ளார்.
ஆறாம் அதிபதியுடன் இணைந்து உள்ள குரு தன்னுடைய 5ம் பார்வையாக 6-ஆம் வீட்டைப் பார்க்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஜாதகர் குருவின் காரகத்துவ தொழிலான ஆசிரியர் பணி புரிந்தவர்.
அந்த வகையில் ஆறாமிடம்,ஆறாம் அதிபதியுடன் தொடர்புபெற்ற வலுப் பெற்ற கிரகத்தின் காரகத்துவ தொழில் அமையும் என்பது இந்த ஜாதகத்தின் மூலம் விளங்கும்.
மகர லக்னம் சிம்ம ராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு ஆறாமிடத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கின்றார்கள்.
ஆறாம் வீட்டு அதிபதியான புதன் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளதால் மீண்டும் ஆட்சி பெற்ற பலத்தை அடைகின்றார். அந்த வகையில் ஆறாம் வீட்டு அதிபதி வலுப்பெறுவதால்,
ஆறாம் அதிபதியான புதனின் காரகத்துவ தொழிலான கம்யூனிகேஷன் சார்ந்த BTech IT பணியில் ஜாதகர் இருக்கின்றார்.
அடுத்ததாக மீன லக்னம் ரிஷப ராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு ஆறாம் வீட்டு அதிபதியான சூரியன் லக்னத்தில், புதனுடன் இணைந்து இருக்கின்றார்.
ஆறாம் வீட்டு அதிபதியான சூரியன், உச்ச குருவின் பார்வையில் இருக்கின்றார். அந்த வகையில் குருவின் காரகத்துவ தொழிலான ஆசிரியர் பணியை இந்த ஜாதகர் பார்க்கின்றார். அதோடு ஆறாம் வீட்டு அதிபதி சூரியனுடன் இணைந்து உள்ள புதனின் காரகத்துவ தொழிலான ஜோதிடத்தையும் உபதொழிலாக பார்த்து வருகின்றார்.
அடுத்ததாக மிதுன லக்னம் துலாம் ராசியில் பிறந்த இந்த ஜாத,கருக்கு ஆறாம் வீட்டு அதிபதியான செவ்வாய்,
லக்னத்திற்கு 3ஆம் இடமான சிம்மத்தில் சுக்கிரனுடன் இணைந்திருக்கின்றார்.
ஆறாம் அதிபதியான செவ்வாய், தனது சொந்த வீடான ஆறாம் வீட்டினை தன்னுடைய நான்காம் பார்வையால் பார்க்கிறார்.
அந்த வகையில் செவ்வாயின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலான (யூனிபார்ம் சர்வீசஸ்) அரசு வேலையில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.
வண்டி வாகனங்களுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான சுக்கிரன், ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் இணைந்துள்ளதால் வாகனம் சம்பந்தப்பட்ட தொழிலான ஒட்டுநர் பணியில் ஜாதகர் உள்ளார்.
துலாம் லக்கினம், மீன இராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு ஆறாம் அதிபதியான குரு உச்சம் பெற்ற நிலையில், ஆறாம்வீட்டையே பார்க்கின்றார்.
இந்த ஜாதகரும் குருவின் காரகத்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தொழிலையும், குருவின் மற்றொரு காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலான பணம் வட்டிக்கு விடுதல் தொழிலையும் பார்த்து வருகின்றார்.
மேற்கண்ட ஜாதகங்களின் வாயிலாக ஆறாமிடம், ஆறாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்டுள்ள வலுப் பெற்ற கிரகத்தின் தொழில் ஒருவருக்கு வருமானம் தரக்கூடியதாக அமையும் என்பதை அறிய முடிகிறது.
உங்களுடைய ஜாதகத்தின் ஆறாம் இடம், ஆறாம் வீட்டு அதிபதியுடன் வலுப்பெற்ற எந்த கிரகம் தொடர்பு கொண்டுள்ளது? நீங்கள் எந்த பணியில் இருக்கிறார்கள் என்பதை தொடர்பு படுத்திப் பாருங்கள்..
பெரும்பாலும் ஆறாமிடம் ஆறாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்டுள்ள வலுப் பெற்ற கிரகத்தின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில் உங்களுக்கு அமைந்திருக்கும்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N
Thanks
பதிலளிநீக்குஉதாரண ஜாதகம் அனைத்தும் எளிமையான விளக்கங்கள் நன்றி ஐயா
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்,நன்றி.
பதிலளிநீக்கு1.1.94...2.10 am Tiruppur
பதிலளிநீக்குமிக அற்புதமானவிளக்கம். நன்றி ஐயா.
பதிலளிநீக்குமிகவும் சிறப்பான பதிவு அய்யா நன்றி வணக்கம் 🙏
பதிலளிநீக்குசரியான விளக்கம். நேரில் தங்களை சந்திக்க விருப்பம். Jathagam சம்பந்தம் மாக
பதிலளிநீக்கு