புதன், 23 டிசம்பர், 2020

நம்முடைய எண்ணங்கள் வடிவமைக்கப்படும் விதம்...ஜோதிட ரீதியாக ஒரு பார்வை

நம்முடைய எண்ணங்கள் வடிவமைக்கப்படும் விதம்?

சிலர் பிறப்பிலேயே நல்ல எண்ணங்கள் கொண்டவராக, வன்மம் என்பது துளியளவும் இல்லாதவராக, இரக்க உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். சிலர் இயல்பிலேயே அதிக வன்மங்கள் கொண்டவராக,குரூர மனம் படைத்தவராக, வக்கிர எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கான காரணம் என்ன? எதைக் கொண்டு நாம் எண்ணம் இப்பிறவியினில் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது.
இறைவனின் படைப்பினில் பாரபட்சம் என்பது இல்லையென்றால், இது பாரபட்சம் இல்லையா?
இதனை ஜோதிட ரீதியாக பார்ப்போமேயானால் ஐந்தாம் இடத்தை சுட்டிக் காட்டும். 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த பிறவியினில் ஒருவர் எந்த அளவிற்கு நல்லவராக இருந்தார் என்பதையும் இந்த ஸ்தானம் சுட்டிக்காட்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் யோகம் என்பது துளியளவும் இல்லையெனினும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடம், 5-ஆம் இடத்து அதிபதி வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் யாரோ ஒருவரின் உதவியால், செல்வத்தினால் வாழ்க்கை சுமுகமாக செல்லும். அந்த யாரோ ஒருவரின் உதவியோ,செல்வமோ உங்களுக்கு கிடைக்க காரணம் பூர்வ ஜென்ம புண்ணியம்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் (Give and take policy) நீங்கள் கடந்து ஜென்மங்களில் விதைத்த நல்லனவற்றை இப்பிறவியில் அறுவடை செய்கிறீர்கள்.

ஐந்தாமிடம் வலுப்பெற்றவர்கள் ஓரளவேனும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாக,இறை பக்தியுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கும் அவரின் எண்ண ஓட்டங்களுக்கும் அதீத தொடர்பு உண்டு. ஆகையால்தான் ஐந்தாம் இடத்தை ஆழ்மன சிந்தனைகளை குறிப்பிடும் இடமாக முன்னோர்கள்  குறிப்பிடுகிறார்கள்.

நல்லெண்ணங்கள் என்பது இயல்பிலேயே, பிறப்பிலேயே இருந்துவிட்டால்  துயர் என்பது இம்மையிலும்  இல்லை. மறுமையிலும் இல்லை.
ஒருவரின் எண்ண ஓட்டங்கள், சிந்தனைகள் நல்லனவாக இருப்பதற்கும்,தீயனவாக இருப்பதற்கும் உங்களுடைய இப்பிறவி கர்மாவுக்கும் தொடர்பு உண்டு.

எப்படி என்றால் நீங்கள் கடந்த பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே உங்களின் எண்ணம் நல்ல எண்ணமாகவோ அல்லது தீய எண்ணமாகவோ இப்பிறவியில் தீர்மானிக்கப்படும். கடந்த பிறவியில் தீவினைகள் அதிகம் செய்திருந்தால் இப்பிறவியில் அவற்றின் கர்மாவை அனுபவிக்க வேண்டும் அல்லவா? இங்கே உங்களின் எண்ணம் நன்றாக இருந்தால் கர்மாவின் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள் அல்லவா? 
ஆகையால்தான் இந்தப் பிறவியில் உங்களின் எண்ணத்தை தீய எண்ணமாக வடிவமைத்து, அதன் காரணமாக  தீய செயல்களை நோக்கி பயணிக்கச் செய்து, அதன் மூலம் உங்களுக்கான தீய  கர்மாவினையும் அனுபவிக்கச் செய்கின்றான் இறைவன்.

ஆகையால்தான் கடந்த பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய விஷயங்களுக்கு ஏற்பவே  இப்பிறவியில் ஒருவரின் எண்ணம் இறைவானால் தீர்மானிக்கப்படுகிறது.

நீங்கள் இந்தப் பிறவியில் இயல்பிலேயே நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அதை நோக்கியே பயணம் செய்யுங்கள். இறைவனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் உங்களைத் தீய எண்ணம் கொண்டவராக கருதினால் அதனை இன்றே மாற்றிக்கொள்ளுங்கள். இறைவனால் நீங்கள் எச்சரிக்கைக்கு உட்படுத்தபட்டு உள்ளீர்கள்.
இதனை நமது முன்னோர்கள் என்றோ உணர்ந்த காரணத்தின் காரணமாகவே "எண்ணம்போல் வாழ்க்கை" என்று சொல்லிவிட்டார்கள்.

எது எப்படியோ இனியாவது நாம் எண்ணும் விஷயங்கள் நல்லனவாக அமையட்டும்..
நல்ல எண்ணங்களை நோக்கி பயணிக்கத் தொடங்குவாம்.. அதனை நாளும் தொடர்வோம்.

நன்றிகளுடன்

Astrologer

ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED

CELL 9659653138

1 கருத்து: