நடப்பில் உள்ள தசாபுத்தியினைக் கொண்டு ஜாதகர் எந்த பிரச்சினையில் இருப்பார் என்பதை கண்டறிந்து பலன்களை எப்படி கணிப்பதென்று பார்ப்போம்.
தசாநாதன் எப்படி பலன் தருவார் என்பதை பொறுத்தளவில்
தசாநாதன் பெற்ற நட்சத்திரத்தின் அதிபதி எங்குள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.
சாரநாதன் இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகமா அல்லது ஒரு ஆதிபத்தியம் பெற்று உள்ள கிரகமா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தசாநாதன் பெற்றுள்ள சாரத்தின் அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் வழியாக தன்னுடைய ஆதிபத்திய பலன்களை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தசாநாதன் மற்றும் புத்தி நாதன் உடன் இணைந்து உள்ள கிரகங்கள், தசாநாதன் மற்றும் புத்தி நாதனை பார்க்கின்ற கிரகங்கள், தசாநாதன் மற்றும் புத்தி நாதன் பார்க்கின்ற மற்ற கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
ஏனெனில் இதை ஒட்டியே ஜாதகரின் எண்ண ஓட்டங்கள் அல்லது கேள்விகள் அமையக்கூடும்.
இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு அறிவோம்.
மீன லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து கொண்டிருக்கிறது. புத்திநாதன் கேது இலக்னாதிபதி மற்றும் பத்தாம் இடத்து அதிபதியான குரு உடன் இணைந்துள்ளார். கேதுவும் 10 ஆம் அதிபதியான குருவின் சாரத்தில் இருப்பதால் கேள்வி பெரும்பாலும் உத்தியோகம்,தொழில், வேலைவாய்ப்பு தொடர்புடையதாகவே இருக்கும்.
தசாநாதன் ராகுவும் ஆறாம் அதிபதியான சூரியனின் சாரம் பெற்று உள்ளார் என்பது வேலைக்கான கேள்வி என்பதை தெளிவுபடுத்தியது.
ராகு மற்றும் கேதுவின் தசா புக்தி பலன்களை கணிக்கும் பொழுது ராகு மற்றும் கேதுவின் சாரத்தில் நின்ற மற்ற கிரகங்களின் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்த வகையில் சுக்கிரன் இந்த ஜாதகத்தில் கேதுவின் சாரமான அஸ்வினியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே கேள்வி சுக்கிரனின் காரகத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். சுக்கிரன் இந்த ஜாதகத்தில் 2-ஆம் இடமான குடும்பஸ்தானத்தில் இருப்பதாலும் ஜாதகரும் திருண வயதினில் இருப்பதால் பெரும்பாலும் திருமணம் தொடர்பான கேள்வியாக இருக்கும் என்பதை யூகித்தோம்.
ஜாதகம் பார்க்க வந்தவரின் கேள்வியும் உத்தியோகம், திருமணம் தொடர்புடையதாகவும் தாயாரின் உடல்நிலை பற்றியதாகவும் இருந்தது.
பொதுவாக சர ராசிகளில் நின்ற ராகு கேதுக்களின் தசா புத்திகள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றத்தை உண்டாக்க வல்லது. அந்த மாற்றம் நல்லதா? (அ) கெட்டதா? என்பது அந்த ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் நல்ல கெட்ட நிலையைப் பொறுத்தது.
அவ்வகையில் புத்திநாதன் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்தில் இருப்பதுடன் இலக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குருவுடன் கேது இணைந்து கேளயோகத்தில் இருக்கின்றார். மேலும் வீடு கொடுத்த சந்திரன் மூலத்திரிகோண நிலையில் வலுவுடன் இருப்பதால் கேது புத்தி அவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தினை உண்டாக்கவல்லதால் கேது புத்தி அல்லது
அதனைத் தொடர்ந்து வரக்கூடிய கேதுவின் சாரம் பெற்ற சுக்கிர புத்தியில் உத்தியோக ரீதியாக நல்ல முடிவை பெறுவார்.
சுபக்கிரகங்கள் தனஸ்தானமான இரண்டாமிடத்தில் இருப்பது வருமானத்தை உயர்த்தும் என்ற வகையில் இரண்டினில் நின்ற சுக்கிர புக்தி அவருக்கு வருமானத்தினை உயர்த்தும் என்ற வகையில் நல்ல வேலை கிடைக்கவழி செய்யும்.
கேது புத்தி முடிவடைந்த பின்னர் வரும் சுக்கிர புத்தியில் திருமணம் நடக்கும்.
சுக்கிரன் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருப்பது குடும்பத்திற்கு புதிய நபரின் வருகை உறுதிப்படுத்துகிறது.
தாயாரின் உடல்நிலையை குறித்த கேள்வியை பொருத்தளவில கேதுவின் பதினொன்றாம் பார்வை, சந்திரனுக்கு இருப்பதாலும்,
சந்திரனுக்கு பிடிக்காதவரான கேது கடகத்தில் இருப்பதும் தாயாரின் உடல்நிலையில் சிறு பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது.
தாயாரைக் குறிக்கும் 4-ஆம் இடத்து அதிபதியான புதன்,திக்பல நிலையில் குருவின் பார்வையில் இருப்பதுடன் காரகத்துவ ரீதியாக சந்திரன் வலுப் பெற்றுள்ளதாலும் கோச்சார ரீதியாக குருவின் பார்வை பிறப்பு ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு இருப்பதால்
அன்னையின் உடல்நல
பிரச்சினைகள் மிக விரைவில் சரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக