புதன், 23 டிசம்பர், 2020

மிதுன இலக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

பன்னிரு இலக்கனங்களில் மூன்றாவது இலக்கனமான மிதுனத்தின் தனித்தன்மைகளை பற்றி  அறிந்து கொள்வோம்..

காலபுருஷ லக்கனத்திற்கு மூன்றாவது வீடு. ஆக இயல்பாகவே அவர்கள் தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவார்கள்.தன்னுடைய செயல்பாடுகளில் சுயநலம் மிகுந்து காணப்படுபவர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் சாமர்த்திய சாலிகள் .
எவரையும் நேரடியாக எதிர்க்காமல் அவரின் போக்கிலேயே நடந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.எழுத்தாற்றல் அறிவாற்றல் புத்தி சாலித்தனம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை வீழ்த்துபவர்கள். தகவல்களை பரப்புவது, சண்டை மூட்டுவதில் வல்லவர்.

இவர்களின் இரண்டாவது வீடாக வருவது கடகம்.தன்னுடைய சிந்தனைகளை பணமாக மாற்றுபவர்கள். நிலையில்லாத தனவரவு பெற்றவர்கள்.இனிமையாகப் பேசுவார்கள் அதே நேரத்தில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றிப் பேசுவார்கள்.இவரின் மூன்றாவது அதிபதியாக சூரியன் வருவதால் அரசு உதவியும் ஆதரவும் அவர்களுக்கு பக்கபலமாக அமையும். அரசுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக செயல்படும் ஆற்றல் உடையவர்கள்.இவர்களின் நான்காவது அதிபதியாக லக்னாதிபதியான புதன் வருவது சிறப்பு கல்வி கேள்விகளில் சிறந்த ஆர்வமுடையவர்கள். தொடர்ந்து எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்.வேலைகளில் ஈடுபடும் பொழுது வேறு எந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தாதவர்.ஐந்தாம் அதிபதி  சுக்கிரன் இருப்பதால் பயணங்களில் அதிக விருப்பம் உடையவர்.அழகான நிதானமான பொறுப்புணர்வுள்ள குழந்தைகளை உடையவர்.இவர்களின் ஆறாவது அதிபதியாக செவ்வாய் வருவதால் எப்பொழுதும் எதற்காவது கடன் வாங்கும் சூழ்நிலைகள் உருவாகும்.தன்னுடைய எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இயல்பாக பெற்றிருப்பவர்.
ஏழாம் இடம் குருவின் இடமாக வருவதால் தன்னைவிட அறிவில் சிறந்த சற்று கர்வம் உடைய தன்மானம் மிக்க துணை அமைவதற்கு வாய்ப்புகள். திருமணத்திற்கு பின்பே உத்தியோகத்தில் முன்னேற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏழாம் அதிபதியான குருவே அவர்களுக்கு பத்தாம் அதிபதியாகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டாம் அதிபதியாக சனி வருவதால் பொதுஜன பிரச்சினைகள், வம்பு, வழக்கு ,விபத்துகள், கண்டம் போன்ற பிரச்சனைகள்.இவர்களின் ஒன்பதாவது அதிபதியாகவும் சனி பகவானே வருவதால் தந்தை மூலம் புண்ணியத்தையும் தர்மத்தையும் பெற்றவராக இருப்பார்.பூர்வீக சொத்துக்கள் தான தரும ஈடுபாடு,  இரக்க மனப்பான்மை, நேர்மை ஆகிய குணங்களை பெற்றவராகவும் இருப்பார்.

 பத்தாம் அதிபதியாகவும் குரு பகவானே வருவதால் கௌரவமான மதிப்புமிக்க தொழில் அமைவதற்கான வாய்ப்புகள். மற்றவர்களுக்கு சேவை செய்யும் தொழில்கள்,கல்வி நிறுவனங்கள், சுய தொழில்கள் போன்றவை அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 இவரின் பதினொன்றாவது அதிபதியாக செவ்வாய் வருவதால் பிரச்சனைகள் ,கலகங்கள், வம்பு, வழக்குகள் போன்றவற்றால் பயன் பெறுபவராக இருப்பார்.மிதுன லக்கினத்திற்கு 12ம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் கலை,கேளிக்கை , ஆடம்பரம் சார்ந்த விஷயங்கள் ,அழகு சாதன பொருட்கள் போன்றவற்றில் அதிக செலவு செய்பவராக இருப்பார்.
 
 மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சனியின் திசை நன்மை நல்கும் சந்திர தசையும் ஓரளவு பரவாயில்லை.புதன் கேந்திரத்தில் இல்லாமல் இருப்பின் அவருடைய திசை நன்மைகளை நல்கும்.குரு, செவ்வாய், சூரியன் போன்றவர்களின் திசைகள் மிகப்பெரிய அளவில் நன்மைகள் செய்வதில்லை. ராகு கேதுக்கள் லக்ன சுபரின் தொடர்பு பெற்றால் நன்மைகள் நல்கும்.
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும்.சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.
நன்றி 
ஜோதிட ஆர்வலர்  
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138


1 கருத்து: