புதன், 23 டிசம்பர், 2020

மேஷ இலக்னத்தின் குணங்கள்

12 லக்னங்களின் முதல் இலக்கணமான மேஷ லக்கினத்தின் பொதுவான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் இனி வரும் பதிவுகளில் அடுத்தடுத்த இலக்னங்களுக்கான குணங்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்..

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட வர்கள்  அவ்வகையில் செவ்வாய்க்குரிய அந்த முரட்டுக் குணம், தைரியம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்றவர்கள்.
மேஷத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் தலைமைத்துவப் பண்பு இவரிடம் நிரம்பி காணப்படும்.
மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்து லக்னத்திலேயே செவ்வாய் ஆட்சி பெற்றவர்கள் அல்லது மகரத்தில் உச்சம் பெற்றுள்ளவர் இயல்பிலேயே பிடிவாதக்காரர்களாகவும் முரட்டு தைரியம்,துணிவு மிக்கவர்களாகவும்  கோபம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
குருவின் பார்வை இங்கே கிடைக்கும் பட்சத்தில் சற்று நிதான போக்கும் காணப்படும்.எதிலும் முதன்மை எல்லாவற்றிலும் தலைமை என்பது இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள் விட்டுக்கொடுக்க தெரியாதவர்கள்.நிதான மனப்பான்மை என்பது இவரிடத்தில் துளியளவும் காணப்படாது. எடுத்தெறிந்து பேசும் மனப்பான்மை அதே நேரத்தில் நகைச்சுவையும் பேசக்கூடியவர்கள் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள்.

பிடிவாதம் மனப்பான்மை என்பது இவர்களிடம் இயல்பாகவே உள்ளதால் எதையும் போராடிப் பெறும் குணமும் இயல்பாகவே அமைந்திருக்கும்.
இவர்களுக்கு இரண்டாம் வீடு சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் அவ்வகையில் அழகான குடும்பம், சிறப்பான பேச்சாற்றல் நிறைந்தவர்கள்.

இவர்களின் மூன்றாமிடம் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் புதன் இளமைக்கு உரிய கிரகம்.

மேலும் மூன்றாம் இடம் என்பது முயற்சி ஸ்தானம்.. இளமையானவர்கள் முயற்சி செய்யத் தயங்குவதில்லை என்பதற்கு ஏற்ப இவர்களும் முயற்சி செய்ய தயங்காதவர்கள்.
இவர்களது நான்காம் வீடு சந்திரனை அதிபதியாக கொண்ட கடகம். அவ்வகையில் தாய் மீது அன்பும் அளப்பறியா பாசமும் கொண்டவர்கள்.
இவர்களின் ஐந்தாம் வீடு சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மம்.
மேலும் புத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுவதும் 5-ஆம் இடமே.அவ்வகையில் குழந்தைகளிடத்தில் அதிக பாசம் கொண்டவர்கள். குழந்தையை போட்டி மனப்பான்மையுடனும் ஆளுமைத் திறனுடனும் வளர்ப்பவர்கள் ஆக இருப்பவர்கள் மேஷ லக்னக்காரர்கள்.

இவர்களின் ஆறாவது வீடு கன்னி. முயற்சி செய்து வெற்றி எதிர் நோக்கும் தன்மை உடையவராக இருப்பார்கள். ஏழாவது வீடு சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம்.
சுக்கிரன் என்றாலே அழகு அவ்வகையில் அழகான துணையை பெற்றவர்கள் மேஷ லக்னக்காரர்கள்.

இவர்களின் எட்டாவது வீடு விருச்சிகம். விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் இங்கே லக்னாதிபதி ஆகவும் இருப்பதால் இங்கே அட்டமாதிபத்திய தோஷம் இவர்களுக்கு கிடையாது. அதனால் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல ஆயுளும் உண்டு.

இவர்களுக்கு ஒன்பதாம் வீடு குருவை அதிபதியாக கொண்ட தனுசு. தந்தை மீது அன்பும் அளப்பரிய பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.இவர்களது பத்தாம் வீடு சனி அதிபதியாக கொண்ட மகரம். உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

இவர்களது பதினொன்றாம் வீட்டிற்கும் சனி பகவானே அதிபதியாக வருவதால் இவருடைய அபிலாசைகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாகும். 

இவர்களது பன்னிரண்டாம் வீடாகிய விரய ஸ்தானத்திற்கும்  குரு பகவானேஅதிபதியாக வருவதால் மோட்சம், முக்தி பற்றிய அறிவு இயல்பாகவே நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள். விரய ஸ்தானாதிபதியாக குருபகவான் இருந்தாலும் அவர் 9-ஆம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால் பெரியளவில் தீமைகள் செய்வதில்லை..
மாவீரன் அலெக்சாண்டர் முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜகான் ஆகியோர் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும். சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138


2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி அய்யா. தோடர்ந்து படித்து ஜோதிட அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.நன்றியுடன் மா.இராசேந்திரன்.

    பதிலளிநீக்கு