பண்ணிரு லக்னங்களில் ஏழாம் இலக்னமான துலாம் இலக்ன அன்பர்கள் இயல்பிலே ஆடம்பரப் பிரியர்கள். உலகின் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.. அனுபவிப்பவர்களும் கூட.
அதே நேரத்தில் அமிர்தமே என்றாலும் அதற்கென்று ஒரு வரையறை வேண்டும் என்று வரையறை விதித்து கட்டுப்பாட்டுடன் நடப்பவர்..
பொழுதுபோக்கு,உல்லாசம் சார்ந்த விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவார். இருப்பினும் தன் காரியத்தில் கண்ணாக இருப்பவர்.
தெளிந்த தீர்க்கமான அறிவினைக் கொண்டு நிதானத்துடன் செயல்படக்கூடியவர்.
லக்னத்தோடு சூரியன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் எவரையும் மதிக்காத குணமும், எதையும் அலட்சியமாக அணுகும் இயல்பும் ஏற்படும்.தன்னுடைய அதிகாரத்திற்கு மற்றவர்கள் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற எண்ணம் இயல்பிலேயே இருக்கும்.
குரு தொடர்பு ஏற்படும் பட்சத்தில் தொழில் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புமிக்க பதவிகள் பெற்றவராக, தேவையற்ற கர்வம், தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் தற்பெருமை உடையவராக இருப்பார்.
சந்திரன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவ்வப்போது மனச் சலனம், சபல புத்தியும் அதே நேரத்தில் தனது காரியத்தில் அதீத சுயநலம் கொண்டவராக இருப்பார்கள்.
புதன் தொடர்பு கொள்ளும்பொழுது மேன்மைமிக்க ஈகை குணமும்,இரக்க சுபாவம், நகைச்சுவை உணர்வு, செயலில் மந்தமமும் உண்டாகும்.
லக்னத்தோடு சனி தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதீத மந்த உணர்வும் அதே நேரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக செயல்படுத்தி வெற்றி காண்பவராகவும் இருப்பார்.ராகு தொடர்பு கொள்ளும் பொழுது வேகமாக செயல்படுபவராகவும் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி உடையவர்களாகவும் சில ஒழுக்க சீர்கேடுகள் உடையவராகவும் இருப்பார்.கேது தொடர்பு கொள்ளும்போது தன்னைப்பற்றிய கீழான கருத்துக்களோடு தாழ்வு மனப்பான்மையோடு எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறை எண்ணங்களோடு வாழ்க்கையை அணுக முயல்வார்கள்.
லக்னத்தில் கர்மகாரகன், நீதிக்காரகன் என அழைக்கப்படும் சனி உச்சம் பெறுவதால்தான் இந்த லக்னத்திற்கு தராசு சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.
அதனால் நீதி நேர்மையுடன் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை எவருக்காகவும் எந்த ஒரு சூழ்நிலையை மாற்றி கொள்ளாமல், கடைசிவரை நீதிநெறி பிறழாமல் இருக்க முயல்வார்கள்.
லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் ஆடம்பர விஷயங்கள், கலை ,ஆடை அணிகலன்களில் அதீத விருப்பமும் நிறைந்திருக்கும்.லக்னத்திலேயே சூரியன் நீசம் பெறுவதால் அவ்வப்போது தன்னம்பிக்கையை இழந்து தவிப்பவர்களாக, தன்னைத்தானே நொந்து கொள்பவராக இருப்பார்கள்.
இவர் இரண்டாவது வீடான விருச்சிகத்திற்கு செவ்வாய் அதிபதியாக வருவதால் பேச்சில் சற்று கர்வம் நிறைந்திருக்கும்..
விருச்சிகத்தில் அவர்களின் பத்தாம் அதிபதி சந்திரன் நீசம் ஆவதால் தன்னுடைய தேவையற்ற பேச்சாலேயே தொழிலில் வருவாயை இழப்பவராக இருப்பார்கள்.
மூன்றாவது வீடாக தனுசு வருவதால் இவர்களின் சகோதர வர்க்கத்தினர் பொறுப்புணர்வுமிக்க நேர்மையாளர்களாக இருப்பார்கள்.
இவர்களின் முயற்சியானது நிதானத்துடன் கூடிய திட்டமிடப்பட்ட முயற்சியாக இயல்பிலேயே அமைந்திருக்கும்.
இவருடைய நான்காம் அதிபதியாக சனி வருவதால் இவர்களின் தாய் மிகவும் கட்டுப்பாடு உடையவராக இருப்பார். இவர்களுடைய பொழுது போக்கு சார்ந்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவதிலும் ஓர் வரையறையானது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
இவருடைய வளர்ச்சியில் இவரின் தாயார் அதீதமான பொறுப்பை ஏற்று இருப்பார்.
ஐந்தாம் அதிபதியாகவும் சனி வருவதால் ஆழ்மனத்தில் வெளிப்பட்ட கருத்துக்களை அப்படியே எந்த ஒரு சூழ்நிலை தடங்கலுமின்றி வெளிப்படுத்துபவராக இருப்பார். குழந்தைகள் பிறப்பிற்குப் பின்பு வாழ்வில் முன்னேற்றம், அதே நேரத்தில் குழந்தைகளால் அவ்வப்போது துன்பப்படுபவராகவும்,
குழந்தைகளை பொறுப்புணர்வோடு வளர்க்க நினைப்பவராகவும் இருப்பார்.
இவருடைய ஆறாம் அதிபதியாகவும் குரு வருவதால் இவருடைய எதிரிகள் இவரை விட இயல்பிலேயே பலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஏழாம் அதிபதியாக செவ்வாய் வருவதால் இவர்களின் துணை சற்று கர்வம் உடையவராக, ஆதிக்க மனப்பான்மை கொண்டவராக இருப்பார்.
இரண்டாம் அதிபதியே ஏழாம் அதிபதியாக இருப்பதால் திருமணத்திற்கு பின்பு, வாழ்வில் துணையின் வழியாக பொருளாதார முன்னேற்றம் பெறுபவராக இருப்பார்.
இவர்களுடைய லக்னாதிபதியே இவர்களுக்கு எட்டாம் அதிபதியாக வருவதால் ஜாதகர் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஜாதகரே காரணமாக இருப்பார்.
மேலும் 10-க்குடைய சந்திரன், எட்டாம் இடத்தில் உச்சம் ஆவதால் தொழில் அதிகப்படியான பிரச்சனைகளை சந்திப்பராக எனினும் அவற்றை வெற்றி காண்பவராகவும் இருப்பார்.
இவர்களுடைய ஒன்பதாம் அதிபதியாக புதன் வருவதால், தந்தை சற்று மென்மையான சுபாவம் உடையவராகவும், அதீத அறிவாற்றலும், புத்திசாலித்தனமும் நிறைந்தவராக இருப்பார்.
பெரும்பாலும் ஜாதகருக்கும் தந்தைக்கும் சுமுகமான உறவுகள் இருப்பது சற்று கடினமே..
ஏனெனில் சூரியன் அவர்களுக்கு இலக்கனத்தில் நீசம் பெறுகிறார்.
இவர்களுக்கு 10-க்குடையவர் சந்திரன் என்பதாலும் குரு அங்கே உச்சம் பெறுவதாலும் சந்திரன் மற்றும் குரு சம்பந்தப்பட்ட தொழில்களில் பெரும்பாலும் நீடித்து நிற்பார்கள்.
இவருடைய பதினொன்றாம் அதிபதியாக சூரியன் வருவதால் இவருடைய அபிலாசைகள் எளிதில் நிறைவேறும். அரசு வழியில் அனுகூலங்கள் பெற்றவராகவும் ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக அவற்றை இழப்பவராகவும் இருப்பார்.
இவருடைய 12ம் அதிபதியாக புதனின் கன்னி வருவதால் கல்வி மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களகல் அதிகத் தேடல் உடையவராகவும், அதற்காக பணத்தை செலவிடுவது, மேலும் லக்னாதிபதி அங்கே நீசம் பெறுவதால் சுகபோக விஷயங்களுக்காக, பெண்களின் நட்பிற்காக, அதிக பணத்தை செலவழிப்பவராக , தன்னையே இழப்பவராகவும் இருப்பார்.
மகாத்மா காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லர் ஆகியோர் துலாம் லக்னத்தில் ஜெனித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, புதன் ,சுக்கிரன் ஆகியோரின் திசா காலங்கள் இவர்களின் சாரம் பெற்ற திசா காலங்கள் துலா லக்னத்திற்கு மேன்மையைத் தரும். சந்திரனும் (தேய்பிறை சந்திரன் எனில் மேன்மை நன்மை செய்யக் கடமைப்பட்டவர்கள்.
சூரியன் இவர்களுக்கு பாதகாதிபதியாக வும்,செவ்வாய் இவர்களுக்கு மாரகாதிபதியாகவும் இருப்பதால்,
குரு லக்னாதிபதிக்கு பகைவர் என்பதாலும் இவர்களுடைய
திசா காலங்களில் ஜாதகர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நலம் நல்கும்...
இவை அனைத்தும் பொது பலன்களே ஆகும். சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலையைப் பொருத்து பலன்களில் மாறுபாடு உண்டு.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED..
Cell 9659653138
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக