புதன், 23 டிசம்பர், 2020

கன்னி இலக்னத்தில் பிறந்தவரின் குணங்கள்

பன்னிரு இலக்னங்களில் ஆறாவது லக்னமான கன்னி லக்கினத்தின் தனித்தன்மைகள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம். கன்னி லக்கனம் புதனை அதிபதியாகக் கொண்ட லக்னம், ஆக இயல்பாகவே  நல்ல புத்திசாலித்தனத்தையும் சாதுரியத்தையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்தவராக இருப்பார்.

தன்னுடைய புத்திசாலித்தனத்தால் எவரிடமும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் திறன் அறிந்தவர். எதிரிகளை நேரடியாக எதிர்க்காது  தன்னுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எதிர்ப்பவர்கள்.
 
தான் செய்யக்கூடிய செயலில் ஆதாயம் இருந்தால் மட்டுமே அந்த செயலை தொடர்பவர்கள், வீண்செயல்கள் எதையுமே  செய்யாதவர்கள்.
மென்மையான சுபாவமும் எல்லோரிடத்திலும் அனுசரித்துச் செல்லும் குணமும் சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்திக் கொள்ளும் திறனையும் இயல்பாய் பெற்றவர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுக் கொள்ளும் தன்மையும், எந்த ஒரு விஷயத்திலும்  உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து உணரும் திறனும் பெற்றவர்கள்.

கல்வி சார்ந்த விஷயங்களில் அதீத திறன் மிக்கவர்.

 கன்னி லக்கின அன்பர்கள் பெரும்பாலும் தூய்மையை விரும்புபவர்களாகவும் தன்னைச்சார்ந்த, தன்னை சுற்றியுள்ள விஷயங்களில் தூய்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.ஏனெனில் காலபுருஷ லக்னத்திற்கு  ஆறாவது வீடாக வருவதால் ஆரோக்கியம் பற்றிய பயம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

இவர்களின் இரண்டாம் வீடான துலாம் வருவதால் தன்னுடைய இனிமையான பேச்சிலேயே தன்னுடைய காரியத்தை சாதிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் மூன்றாவது வீடாக விருச்சகம் வருவதால் பேச்சினில் ஒரு ரகசியம் எப்பொழுதும் இருக்கும். அவருடைய பேச்சு எப்பொழுது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். ஆகவே பேச்சில் கவனம் தேவை. மேலும் மூன்றாவது வீடாக செவ்வாய் இருப்பதால் இவர்கள் அதீத முயற்சி எடுப்பவராக,எந்த ஒரு செயலிலும் அதிக முயற்சி செய்து வெற்றி பெறுபவராக இருப்பார்கள்.

இவருடைய நான்காவது வீடாக தனுசு வருவதால் அவர்களுடைய தாயார் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கவராகவும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பொறுப்பு உடையவராக இருப்பார்.

ஐந்தாம் வீடாக சனி வருவதால்  அடிக்கடி குழந்தைகளால் சற்று மன வருத்தத்தை அடைபவராக இருப்பார்.

இவர்களின் ஆறாவது வீடாகவும் சனியே இருப்பதால் அதிக உழைப்பு ஆனால் குறைந்த வருவாய் உடையவர்களாகவும் அவ்வப்போது நோய், மற்றும் கடன்களால் பாதிப்பை அடைபவர்களாக இருப்பார்கள்.

 இவர்களின் ஏழாம் அதிபதியாக குரு வருவதால் நல்ல துணையை பெற்றவர்கள். 
இவர்களின் துணை இவரைவிட புத்திசாலியாக இருப்பதால் ஜாதகர் அவர்களிடம் இறங்கிப் போக வேண்டியிருக்கும்.

 இவருடைய நண்பர்களும் அதிகம் பண வசதி படைத்தவர்களாக இருப்பார்கள் .
பெரும்பாலும் இவர்களுக்கு பெண் நண்பர்கள் அதிகம். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதியாக வருவதாலும், ஏழில் புதன் லக்னாதிபதி நீசம் அடைவதாலும் இவர்களுக்கு கூட்டுத்தொழில் பெரும்பாலும் சரிவராது.
எட்டாம் அதிபதியாக செவ்வாய் வருவதால் போக்குவரத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில்,வண்டி வாகனங்களில் சற்று கவனம் தேவை, ஏனெனில்  விபத்துகளை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இவர்களின் ஒன்பதாம் அதிபதியாக சுக்கிரன் வருவதால் தந்தை சற்று பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அதிக செலவு செய்பவராகவும் தான தருமங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.

இவர்களின் பத்தாம் அதிபதியே லக்னாதிபதியே வருவதால் தொழிலில் சாதுர்யம் பெற்றவர்களாகவும் பெரும்பாலும் தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் பேச்சை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் 11ஆம் அதிபதியாக சந்திரன் வருவதால் நிலையற்ற தன வரவை பெற்றவர்களாகவும் அதிகமாக செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஆக வருமானத்தை சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
மேலும் பதினொன்றாம் அதிபதியாக சந்திரன் இருப்பதால் இவர்களின் அபிலாசைகள் இவர்களின் முயற்சி இன்றியே பூர்த்தி அடையும் வாய்ப்பு உண்டு.
12ம் அதிபதியாக சூரியன் வருவதால் அரசு வழியில் விரயச்செலவுகள் செய்பவராகவும் இருப்பார். மேலும் ஆழ்ந்த நித்திரையை பெறதவராக இருப்பார்.
லக்னம் தவிர்த்து மற்ற கேந்திரங்களில் நிற்காத புதன்,சுக்கிரன், சனி ஆகியோரின் திசாபுத்திகள், இவர்களின் சாரம் பெற்றுள்ள தசா புத்திகளும் இவர்களுக்கு மேன்மையைத் தரும்.

இவை அனைத்தும் பொதுப் பலன்கள் ஆகும்.

இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும். சுய ஜாதகத்தில் கிரகங்களின் நிலைமையைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.
 
நன்றி,
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக