வியாழன், 21 ஜனவரி, 2021

உங்களின் வாழ்க்கை துணைவரின் சுபாவம் எப்படி இருக்கும்?

வரக்கூடிய வாழ்க்கைத் துணையின் சுபாவம் எப்படி இருக்கும்? #Iniyavan 

ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து 7ம் இடம் வரக்கூடிய வாழ்க்கை துணையை சுட்டிக்காட்டும் இடமாகும்.

பொதுவான களத்திரகாரகன் சுக்கிரன், சுய ஜாதகத்தில் அமைந்துள்ள நிலையைப் பொறுத்து வரக்கூடிய துனையின் குண நலனைத் தீர்மானிக்க இயலும்.      
 பெண்களின் ஜாதகத்தை பொருத்தவரை செவ்வாய் அமைந்துள்ள நிலையைப் பொருத்தும் வரக்கூடிய கணவரின் குணநலனை தீர்மானிக்க இயலும் என்று நாடி கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன. ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன், பெண்கள் என்னும் பட்சத்தில் செவ்வாய் இவர்களுடன் இணைந்துள்ள மற்றும் பார்த்த கிரகங்களைக் கொண்டு தீர்மானிக்க இயலும்.
எந்த கிரகம் வலுப்பெற்று ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரன் தொடர்பு கொண்டு உள்ளதோ அந்த கிரகத்தின் குண இயல்புகளை வரக்கூடிய துணைவர் பிரதிபலிக்க கூடியவராக இருப்பார்.
இவற்றுடன் ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் அமர்ந்த ராசியின் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் (நெருப்பு, நிலம், நீர், காற்று ராசிகள்) இவற்றையும் எடுத்துக்கொண்டு கொண்டு தீர்மானிக்க இயலும்.

இந்த அமைப்புகளோடு ஏழாம் அதிபதி  மற்றும் ஏழாம் வீட்டுடன்  இணைந்த மற்றும் பார்த்த கிரகங்களின் வலு மற்றும் வலுவின்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட கிரகத்தின் குண இயல்புகளை கூடுதலாகவோ, குறைவாகவோ ஜாதகரின் துணையிடம் காண இயலும்.

ஏழாம் அதிபதி அல்லது சுக்கிரன் நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு இவற்றில் வலுப்பெற்று அமரும் போது வரக்கூடிய துணை சற்று ஆதிக்க மனோபாவம் உடைய வராகவும், அதிகார மனோபாவம் கொண்டவராக, எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவராக இருப்பார்.

நில ராசிகளான ரிஷபம்,கன்னி, மகரம் இவற்றில் பலம் பெற்று அமரும் பொழுது வரக்கூடிய துணை நல்ல பொறுமைசாலியாக, எதிலும் நிதானமாக செயலாற்ற கூடியவராக, மனோபலம் பெற்றவராக இருக்க கூடும்.
நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவற்றில் பலம் பெற்று அமரும் பொழுது வரும் துணை சற்று இளகிய மனம் படைத்தவராக, அதிகம் உணர்ச்சிவசப்படுபவராக, அன்பிற்குரியவராக இருக்கக்கூடும்.

காற்று இராசிகளான மிதுனம், துலாம், கும்பம் போன்ற இராசிகளில் ஏழாம் அதிபதி அமரும் போது  அலைபாயும் மனநிலை, தற்பெருமை உணர்வு,  எதையும் ஆராய்ந்துணரும் திறன்,  நட்புணர்விற்கு அதிக முக்கியத்துவம் தருதல், எவரையும் எளிதினில் விமர்சிக்கும் திறன், வதந்தி பேசுதல்,(Gossips and rumours)
 எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுதல் போன்ற குணங்கள் தென்படலாம்.

ஏழாம் அதிபதியினை  வலுப்பெற்ற குரு தொடர்புகொண்டுள்ள நிலையில் வரக்கூடிய துணையிடம் நல்ல பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம், விட்டுக் கொடுத்துச் செல்லுதல், பணிவு, சுயமரியாதை உணர்வை கடைப்பிடித்தல்,நேர்மை, எதிலும் ஒரு ஒழுங்கினை கடைபிடித்தல்  போன்ற குணங்கள் தென்படும்.

புதன் வலுப்பெற்று தொடர்பு கொள்ளும் போது நல்ல புத்திசாலித்தனம், எதையும் தானாகவே கற்றுக்கொள்ளும் திறன், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், நகைச்சுவையான பேச்சு,  பிறரை காரண காரியத்தோடு அனுசரித்து செல்லுதல் போன்ற குணங்கள்
காணப்படும்.     

சுக்கிரன் வலுப் பெற்ற நிலையில் தொடர்பு கொள்ளும்போது அழகுகுணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம், சுகபோக விஷயங்களில் அதிக ஈடுபாடு உடையவராக, எதிலும் ஒரு உயர்ந்த தரத்தினை பின்பற்றுபவராக ஒருவராக இருக்கக்கூடும். சூரியன் தொடர்பு கொள்ளும் பொழுது வரக்கூடிய துணையிடம்  ஆளுமை திறன் அதிகமிருக்கும், கர்வம், தான் என்ற ஆணவம், முன்கோபம், அதிகாரமிருக்கும். செவ்வாய் வலுப்பெற்று தொடர்பு கொள்ளும்போது அதீத துணிச்சல், கோபம் அவசர புத்தி, பிடிவாதம், சுறுசுறுப்புடன் செயலாற்றுதல் போன்ற குணங்கள் தென்படும்.

சனி வலுப் பெற்ற நிலையில் தொடர்பு கொள்ளும்போது எதிலும் அதீத நிதானம், முடிவு எடுப்பதில் தயக்கம், மந்த உணர்வு, சோம்பேறித்தனம் அதே நேரத்தில் வேலையில் நேர்த்தி போன்ற குணங்கள் தென்படும்.
 சந்திரன் தொடர்பு கொள்ளும் நிலையில்
வளர்பிறை, தேய்பிறை என்ற ஒளி அளவுகளைப் பொருத்து நல்ல மற்றும் தீய குணங்கள் தென்படும்.
ராகு-கேதுக்கள் வலுப் பெற்று 7ம் அதிபதியுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் எந்த வீட்டில் ராகு கேதுக்கள் வலுப்பெற்ற நிலையில் இருக்கின்றாரோ அந்த வீட்டு அதிபதியின் குண  இயல்புகள் ஜாதகரின் துணைவியிடம் காணப்படும்.
பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் இலக்னாதிபதி நீசம் போன்ற வகைகளில் பலவீனம் அடைந்து, ஏழாம் அதிபதி  பலம் பெற்று இருக்ககூடிய பட்சத்தில் வரக்கூடிய துணை ஜாதகரிடத்தில் அதிகாரம் செலுத்தக்கூடியவராக இருப்பார். அதே நேரத்தில் இலக்னாதிபதி பலம் பெற்று 7ம் அதிபதி பலமின்றி  இருக்கும் பட்சத்தில் ஜாதகர் வரக்கூடிய துணையிடம்  அதிகாரம் செலுத்தும்  நிலையில் இருக்க கூடும். 💐 #Iniyavan

நன்றிகளுடன்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N

1 கருத்து:

  1. வணக்கங்க.தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் ஜோதிட ஆர்வளன் நன்றியுடன் மா.இராசேந்திரன்.நன்றி.

    பதிலளிநீக்கு