ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

இலக்னாதிபதி நீசமா? கவலை வேண்டாம் அன்பர்களே...

இலக்னாதிபதி நீசம் அடைந்தால்?
                               
எந்த ஒரு ஜாதகத்திலும் இலக்னமே முதன்மையானது இலக்னம், இலக்னாதிபதி வலு இவற்றினை கொண்டே ஒரு ஜாதகரின் செயல்திறனை அளவிட இயலும்.
அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் இலக்னாதிபதி பலம் பெற்றால் ஜாதகர் எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவன் ஆகின்றான். ஒருவருக்கு நோயினை தரக்கூடிய ஆறாம் அதிபதி தசா, ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெற்றே நடப்பதாக கருதுவோம். அந்த காலகட்டங்களில் ஜாதகருக்கு நோய், கடன், வறுமை, பிரிவு, வேலை தொடர்புடைய பிரச்சினைகள் இவற்றில் ஏதாவது ஒன்று நடைபெற்று  கொண்டிருக்கும்.

ஜாதகருக்கு தற்போது இருப்பது நோயா? (அ) கடனா? என்பதை அறிய இலக்னத்தின் மற்ற பாவகங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவரின் ஜாதகத்தில் 2,11ம் பாவங்கள் வலுப் பெற்றிருக்கும் போது, ஆறாம் அதிபதி தசா நடந்தால் அங்கே ஜாதகர் கடன் பிரச்சினையில் இருக்க  வாய்ப்பில்லை தானே.

அதே ஜாதகத்தில் சுகாதிபதி என்னும் நான்காம் அதிபதி மற்றும் ஜாதகரின் உடலைக் குறிக்கும் சந்திரன், ராசி அதிபதி வலுக்  குறைந்த இருக்கும்போது ஜாதகருக்கு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.

உறவுகளை குறிக்கும் கிரகங்கள் ஆறாம் அதிபதியுடன் இணைந்து தசா நடத்தும் போது குறிப்பிட்ட அந்த உறவு ஜாதகருக்கு பகையாக கூடும். அல்லது பிரிய நேரிடும்.
2, 11ம் பாவங்கள் வலுக்குறைந்து 10 ஆம் அதிபதியும் பலம் குறைந்து இருக்கக் கூடிய நிலையில் ஜாதகர் வேலையின்றி பணமின்றி வறுமை நிலையில் ஜாதகர் இருப்பார்.

இவ்வாறு மற்ற பாவகங்களின் நிலையையும் பார்க்கும் போதுதான் ஜாதகருக்கு கடனா? நோயா? என்பதைத் தெளிவாகக் கண்டறிய இயலும்.
மீண்டும் இலக்னாதிபதி நீசத்திற்கு வருவோம். இலக்னாதிபதி  ஜாதகரை தாங்கும் தூண் போன்றவர் என்று ஏற்கனவே அறிந்து இருக்கின்றோம். அந்நிலையில் ஆறாம் அதிபதி பாதிப்பைத் தரக் கூடிய வகையில் இருந்து தசா நடத்தும் போது, இலக்னாதிபதி ஏதேனும் ஒரு வகையில் வலுப்பெற்று இருப்பது நல்லதாகும். அப்போதுதான் ஜாதகரால் பிரச்சனைகளை சமாளித்து எதிர்நீச்சல் போட இயலும். எதிர் நீச்சல் போடுவதற்கான வல்லமையை தரக்கூடிய இலக்னாதிபதி நீசமானல், ஜாதகரால் பிரச்சனைகளை சமாளிக்க இயலாமல் போகலாம்.
ஜாதகருக்கு சொந்த புத்தி வேலை செய்யாது. பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிய தோன்றும். இலக்னாதிபதி நீச்சம் அடைந்தாலும் நீசபங்கம் பெற்று விட்டால், ஜாதகர் பிரச்சனைகளை, நீச்ச பங்கத்தின் வலுவிற்கு ஏற்ப சமாளித்து விடுவார்.

ஆனால் இலக்னாதிபதி நீசபங்கமே அடையாத சூழ்நிலையில் ஜாதகர் எப்படி செயல்பட வேண்டும்? எப்படி செயலாற்றினால் இலக்னாதிபதி நீசம் அவரை பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாக்காது?

அவருடைய ஜாதகத்தில் எந்த உயிர் காரகத்துவ உறவு நல்லநிலையில் இருக்கின்றதோ, அந்த உறவின் அறிவுரைப்படி செயலாற்றுவது நல்லது.
 இந்த இடத்தில் வறட்டு கௌரவத்தை கடைபிடித்தால் வேலையாகாது.
நான் எவருடைய அறிவுரைக்கும் அடங்கி செயல்பட மாட்டேன் என்று திமிராக நின்றால், எதிர்காலத்தில் எல்லோரிடத்திலும் இறங்கிப் போக வேண்டியிருக்கும்.

அடுத்ததாக இலக்னாதிபதி நீசமடைந்தவர்கள், தங்களுடைய இளம் வயதிலிருந்தே நன்கு சம்பாதித்து பணம் சேர்த்து வைத்துக் கொள்ளல் வேண்டும். கையில் பணமிருந்தால் இலக்னாதிபதி நீசம் பெரிய அளவில் நடைமுறையில் பாதிப்பை தர இயலாது.
ஏனெனில் இக்கலிகாலத்தில் பணம் தானே எல்லா விஷயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.
பணத்தை கொண்டு பெரும்பாலான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள இயலும். தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலும். அடுத்ததாக இலக்னாதிபதியை பலம் கூட்டச் செய்யும் வழிபாடுகளை ஜாதகர் ஆயுள் முழுவதும் கடைபிடித்தாக வேண்டும். இலக்னாதிபதியின் அதிதேவதையின் தாள் பணிந்திட வேண்டும்.
அதோடு எல்லோருக்கும் பயனளிக்கும், ஆத்மபலத்தை அதிகப்படுத்தும் சாட்சாத் இறைவன் சூரிய பகவானை வழிபட்டு வரவேண்டும். ஏனெனில் இலக்னம் தானே ஜாதகரின் ஆத்மா..
சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருவதால் ஆத்ம பலம் கூடும்.
   #Iniyavan  
 நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக