எந்த உறவால் எப்போதும் மன வேதனையை ஜாதகர் சந்தித்து கொண்டிருப்பார்?
மனித உறவுகளை சுட்டிக்காட்டும் பாவகங்களான 3, 4, 5,7, 9 மற்றும் 11 போன்ற பாவகங்களில் பாபகிரகங்கள் நின்று அல்லது பாப கிரகங்கள் பார்த்து, அந்த வீட்டு அதிபதியும், அந்த வீட்டிற்கு மறைவு ஸ்தானத்தில் நின்றாலும், இலக்னத்திற்கு மறைவு ஸ்தானத்தில் நின்று, பலவீனமான நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த கிரக காரகத்துவ உறவின் வாயிலாக ஜாதகர் நிம்மதியை அறவே எதிர்பார்க்க இயலாது.
உதாரணத்திற்கு சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் உறவுகளை சுட்டிக்காட்டும்ஸ பாவகத்தில் இருந்து அந்த பாவக அதிபதி அந்த பாவத்திற்கு மறைவாக இருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அந்த உறவிடம் ஜாதகர் எந்த நன்மையும் பெற இயலாது. #Iniyavan
போதுமானவரை இது போன்ற அமைப்பில் பட்டும் படாமல் நடந்து கொள்வதே நல்லது. எடுத்துக்காட்டாக இலக்னத்திற்கு 9ம் இடமான தந்தையை குறிப்பிடும் ஸ்தானத்தில் சனி, செவ்வாய் நின்று, ஒன்பதாம் அதிபதியும் அந்த பாவத்திற்கு மறைந்திருந்தாலும் பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகரால் தந்தையிடம் எந்த ஒரு நன்மையும் எதிர்பார்க்க இயலாது.
சுபகிரக பார்வை இந்த அமைப்பிற்கு இருக்கும்பொழுது பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.
ஆனால் அவ்வப்போது புகைந்து கொண்டுதான் இருக்கும்.
அடுத்ததாக உறவுகளைக் குறிப்பிடும் பாவகங்களில் நிழல் கிரகமான ராகு கேது நின்று, அந்த வீட்டு அதிபதி மறைவு ஸ்தானங்கள் நின்றாலும், பகை, நீசம் என பாதிப்படைந்து இருந்தாலும் அந்த உறவாலும் பெருமளவு நன்மையில்லை.
இலக்னாதிபதிக்கு பகை தன்மை கொண்ட கிரகங்கள்
உறவுகளைக் குறிக்கும் ஆதிபத்தியங்களுக்கு அதிபதியாகி அந்த வீட்டிற்கு மறைவு ஸ்தானங்களில் இருக்கும் போது அந்த உறவால் நன்மையை எதிர்பார்க்க இயலாது.
உதாரணத்தி ற்கு மீன லக்னத்திற்கு மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவார்.
இலக்னாதிபதி குருவிற்கு முற்றிலும் பகை தன்மை கொண்ட கிரகம் சுக்கிரன்..
அந்த சுக்கிரன் மூன்றாம் வீட்டிற்க்கு மறைவு ஸ்தானத்தில் இருக்கும் பொழுது,
மூன்றாமிடம் சுட்டிக்காட்டும் இளைய சகோதர உறவால் ஜாதகருக்கு பிரயோஜனம் இருக்காது.
உறவுகளை குறிப்பிடும் கிரகங்கள் லக்னத்துக்கு மறைவு ஸ்தானங்களில் பலவீனமாக இருந்தாலும் அந்த உறவால் நன்மை இல்லை.
காரகத்துவ ரீதியாக உறவுகளைக் குறிப்பிடும் கிரகங்களான சந்திரன்- தாய் சூரியன்-தந்தை சுக்கிரன்- மனைவி செவ்வாய் - சகோதரன் புதன் - நண்பர்கள் போன்ற கிரகங்கள் நீசமாகி பாப கிரகங்களான சனி செவ்வாய் ராகு போன்றவற்றின் பார்வையில் இருக்கும் போது அந்த உறவாலும் ஜாதகருக்கு மன கஷ்டம் இருக்கும்.
உதாரணத்திற்கு புதன் நீசமாகி சனி ராகு செவ்வாய் போன்ற பாப கிரகங்களால் பார்க்கப்படும் பொழுது நண்பர்கள் வகையில் பிரச்சனைகள், அவமானங்கள் மனவேதனைகள் போன்றவற்றை ஜாதகர் சந்திப்பார்.
#Iniyavan
இதுபோன்ற சிக்கலான அமைப்புகள் காரணமின்றி ஏற்படுவதில்லை. எதையும் இறைவன் காரணமின்றி நிகழ்த்துவதில்லை. முன் ஜென்மத்தில் மேற்கண்ட உறவிடம் நாம் நடந்து கொண்டதை இப்போது அறுவடை செய்கின்றோம். இதற்காக அவர்களை நொந்து கொள்ளாமல் நம்மைப் தேற்றிக் கொண்டு, அதைப் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு கவலைப்படாமல் கடந்து செல்வதே உத்தமம்.
தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை...
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்கள், பலன் சொல்ல பயனளிக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஜோதிட குழுவினில் இணையவும்..
https://www.facebook.com/groups/317382673369511/?ref=share
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக