பொதுவாகவே ஒருவர் பேசும் விதத்தை பொறுத்ததே சமூகம் அவரைப் பார்க்கின்றது. தன்னுடைய கருத்துக்களை, தனக்கான அங்கீகாரத்தை, தன்னுடைய விருப்பங்களை தனது பேச்சின் வாயிலாக எல்லோரும் வெளிப்படுத்துகின்றோம்.
அந்த வகையில் ஒருவர் பேசும் விதத்தை பொறுத்தே சமூகம் அவரை எடை போடத் துவங்கும்.ஜோதிட ரீதியாக இலக்ன ராசிக்கு 2-ஆம் இடம் வாக்கு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இதில் லக்னத்திற்கு இரண்டாம் இடமே முதன்மை பெறும்.
இலக்ன ராசிகளுக்கு இரண்டாமிடம், 2 ஆம் அதிபதியுடன் தொடர்பு கொண்ட, அதாவது இணைந்த, பார்த்த கிரகங்களை பொருத்து ஒருவரின் பேசும் திறனை அளவிட இயலும். அந்த வகையில் சுய ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் நின்ற கிரகங்களைப் பொருத்து அவரின் பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஒவ்வொரு கிரகங்கள் வாரியாக பார்ப்போம்.
முதன்மை கிரகமான சூரியன், இரண்டாம் வீட்டில் இருக்கும் பொழுது அவரின் பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை முதலில் பார்ப்போம். சூரியன் அதிகாரம்,ஆளுமை, ஆதிக்க மனோபாவத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம்.
அப்படிப்பட்ட சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கும்போது அவருடைய பேச்சில் இயல்பாகவே அதிகாரத்தொனி வெளிப்படும்.
ஒரு உயர் அதிகாரி தன்னுடைய வேலையாட்களிடம் எப்படி பேசுவாரோ அதைப் போலவே கட்டளையிடும் ரகத்தில் அவர்களுடைய பேச்சு இருக்கும்.
இவர்களிடத்திலிருந்து வெளிப்படக்கூடிய வார்த்தைகளில் கோபம் கலந்திருக்கும். அவருடைய பேச்சில் கம்பீரம், கௌரவம் வெளிப்படும். தற்பெருமை பேசக் கூடியவராக இருப்பார்.
எதிராளிகள் எவ்வளவு திறமை உடையவர்களாக இருப்பினும் இவர்களிடத்தில் பேசி வெற்றி கொள்ள முடியாது.
இவர்களின் பேச்சு பிறரை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையதாக இருக்கும். இவர்களின் கண்டிப்பான பேச்சு இவரின் மீது சில சமயங்களில் வெறுப்புணர்வை உண்டாகலாம். தவறு செய்தவர் எவராயினும் கண்டிக்க தயங்காதவர்களாக இருப்பார்கள்.தன்னுடைய கண்டிப்பான கோபமான, பேச்சால் நிறைய பேரை பகைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டாகலாம்.
குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் சில சமயங்களில் இவருடைய பேச்சசே குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டாகக்கூடிய வாய்ப்பு உண்டு.
இவர்களிடத்தில் எவரேனும் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் வெற்றி இவர்களுக்கே கிடைக்கும்.
இவர்களுடைய கண்டிப்பான பேச்சாற்றல் பல சமயங்களில் இவருக்கு பகை உணர்வை வளர்ப்பதால் தன்னுடைய பேச்சின் இயல்பை மாற்றிக் கொண்டு எல்லோரிடமும் அனுசரணையாக பேசுவது நல்லதாகும்.
இரண்டாம் வீட்டில் நின்ற சூரியனுக்கு வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு இருந்தால் பேச்சின் கடினத்தன்மை குறையும்.
இரண்டாம் வீட்டில் நின்ற சூரியன் சில சமயங்களில் கண் தொடர்புடைய பாதிப்புகளையும் சுக்கிரனுடன் இணையும் பொழுது செய்கின்றார்.
இவை அனைத்தும் பொதுப் பலன்களே.. இரண்டாம் வீட்டில் நின்ற சூரியனைப் பார்த்த, இணைந்த கிரகங்களை பொருத்து பலன்கள் மாறுபடலாம். அடுத்த பதிவில் இரண்டில் சுக்கிரன் இருந்தால்
பேசும் விதம் எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்.
இணைந்திருங்கள்..
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/HneoBkwpqLa9RISsoOos6J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக