ஞாயிறு, 16 ஜனவரி, 2022

மண வாழ்க்கையும் ஜோதிடமும்

திருமண வாழ்க்கையை தீர்மானிப்பதில் கவனிக்கப்பட வேண்டிய ஜோதிட விதிகள்: -

ஒருவரின் திருமண வாழ்க்கை சுட்டிக் காட்டக்கூடிய லக்ன ராசிக்கு 7-ஆம் இடங்கள் பாபகிரகங்கள் தொடர்பின்றி இருக்கும்பொழுது கண்டிப்பாக அவரின் திருமண வாழ்க்கை நல்லபடியாகவே இருக்கும்.
Iniyavan Karthikeyan 
இலக்ன ராசிக்கு ஏழாம் இடத்துடன் பாப கிரகங்களின் தொடர்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு திருமண வாழ்க்கையில் நெருடல்கள் இருக்கலாம்.
இந்நிலை சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் ஜாதகர் உணரக்கூடிய வகையில் வெளிப்படும்.

இலக்னம் மற்றும் ராசிக்கு ஏழாமிடத்துடன் தொடர்பு கொண்ட பாப கிரகங்கள், பலம் பெற்ற சுபர்களின் தொடர்பில் இருக்கும் போது பெரிய பாதிப்புகளை தராது.

தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்தவரை ஆணின் ஜாதகத்தில் மூன்றாம் இடமான விரீய ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

திருமண வாழ்க்கையில் வரக்கூடிய வாழ்க்கைத் துணையின் குணநலன்களைப் பற்றி அறிவதற்கும் திருமண வாழ்க்கையில் ஜாதகர் பெறக்கூடிய மகிழ்ச்சியினை பற்றி அறிவதற்கும் களத்திரக்காரகனான சுக்கிரனுடைய நிலைமையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

களத்திர காரகனான சுக்கிரன்,
சனி, செவ்வாய், ராகு அமாவாசை சந்திரன் போன்ற பாபக் கிரகங்களின் இணைவினை பெறாத வகையில் மிகப்பெரிய அளவில் அளவில் பிரச்சனை இல்லை.

களத்திரக்காரகனான சுக்கிரன் ராகுவுடன் இணைந்து இருக்கும் பொழுது டிகிரி அளவில் அவர் பாதிக்கப்பட்டுள்ளளாரா என்பதையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் போது சுக்கிரனுடைய தசா வருகின்றதா என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

ராகுவுடன் மிக நெருங்கிய பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தும் சுக்கிரனுடைய தசா வராதபோது  பாதிப்புகள் இல்லை.
அதேபோல் மேற்கண்ட அமைப்பிற்கு சுபர்களின் தொடர்பு இருக்கும் பொழுதும் பாதிப்புகள் இருக்காது.

வாழ்க்கை துணையை சுட்டிக்காட்டக் கூடிய சுக்கிரன் வக்ரம் பெறுவதும் நல்லதல்ல. அவர் வக்கிரமான நிலையில் இருக்கும் பொழுது சுபர்களின் தொடர்பில் இருக்க வேண்டும் நட்பு வீடுகளில் வக்ரமாக இருப்பது கூட பெரிய பாதிப்புகளை தராது. Iniyavan Karthikeyan 

பகை வீடுகளில் வக்ரமாக நின்று சனி, செவ்வாய்,ராகு அமமாவாசை சந்திரன் போன்ற பாவிகளின் தொடர்பு பெறுவது முற்றிலுமாக நல்லதல்ல.

மறைவு ஸ்தானங்களில் சுக்கிரன் இருப்பதை பொருத்தவரை அவர் 6-ஆம் வீட்டிலோ 12ஆம் வீட்டில் இருப்பதை மறைவு என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் தன்னுடைய ஆட்சி வீடான துலாம் ராசிக்கு ஆறாம் வீட்டில் தான் சுக்கிரன் உச்சம் பெறுவார்.
அதேபோல் கால புருஷ லக்கினத்திற்கு 12ம் இடமான மீனத்தில் தான் அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார்.
#Iniyavan 

சுக்கிரனுக்கு 3 மற்றும் எட்டாம் இடங்கள் மட்டுமே முழு மறைவு ஸ்தானங்களாக செயல்படும்.
அதே நேரத்தில் 3 மற்றும் எட்டாம் இடங்களில் சுக்கிரன் ஸ்தான பலத்தை பெற்றிருக்கும்போது பாதிப்பை தரமாட்டார்.

சுக்கிரன் நீசமான நிலையில் இருப்பதை பொருத்தவரை அவர் தனித்த நிலையில் நீசம் பெறுவது பெரிய அளவில் பாதிப்பை தராது.
அதே நேரத்தில் நீசமான சுக்கிரன், சனி செவ்வாய், ராகு, அமாவாசை சந்திரன் போன்ற பாபர்களின் இணைவினை பெறும்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பார்.

சுக்கிரனுடைய காரகத்துவங்கள் ஜாதகருக்கு கிடைப்பதில் அதீத தடை தாமதங்கள், ஏமாற்றங்கள் ஜாதகருக்கு  இருக்கும்.
இது போன்ற நிலையில் இருக்கக் கூடியவர்கள் சுக்கிரனை வலுப்படுத்தக்கூடிய வழிபாடு மற்றும் வாழ்வியல் பரிகார முறைகளை கடைப்பிடிப்பது நல்லதாகும். #Iniyavan

இலக்ன ராசிகளுக்கு ஏழாமிடம் எந்த அளவிற்கு சுபர்களின் தொடர்பை பெற்றுள்ளதோ அந்த அளவிற்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
ஆனால் மேற்கண்ட விதியினைப் பொருத்தவரை  உபய லக்னங்களுக்கு  ஏழாம் வீட்டதிபதி ஆட்சி பெற்றிருக்கக்கூடிய பட்சத்தில் மேற்கொண்டு அவர் சுபர்களின் தொடர்பு பெறுவது நல்லதல்ல.
இதுபோன்ற நிலைகளில் இருக்கும் போதுதான் அவர் பாதகாதிபதி வேலையை செய்யக் கூடும். ஏனெனில் உபய லக்னங்களை  பொறுத்தவரை ஏழாம் வீட்டதிபதியே ஒரே நேரத்தில் கேந்திராதிபதியாகவும் பாதகாதிபதியாகவும், மாரகாதிபதியாகவும் வருவார் என்பதால் அவர் மேற்கொண்டு  சுபர்களின் தொடர்பினை பெற்றுவலுவடையும் போது தன்னுடைய தசாவினில்  வாழ்க்கைத்துணை குறித்த விஷயங்களில் பாதிப்பினை தருவார்.
குறிப்பிட்ட அந்த கிரகத்தின் தசா வராத பொழுது அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. #Iniyavan 

உபய லக்னங்களுக்கு ஏழாம் வீட்டு அதிபதி 7 ல் ஆட்சி பெற்று ஏதாவது ஒரு பாபரின் பார்வை அல்லது இணைவினை பெரும் பொழுது கண்டிப்பாக பாதிப்புகளை செய்ய மாட்டார் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாகும்..

இலக்ன ராசிக்கு 7-ஆம் வீட்டுடன் வலுப்பெற்ற  பாபர்களின் தொடர்பு இருக்கும் போது மேற்கண்ட கிரகங்களின் தசா காலங்கள் ஜாதகருக்கு வராத பொழுது பெரியளவில் பாதிப்பு இருக்காது.#Iniyavan

முக்கிய விதியாக ஒருபாவகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது அந்த பாவகத்தோடு தொடர்புடைய பாப கிரகங்களின் தசா காலங்கள் வரும்போது மட்டுமே ஜாதகரால் பாதிப்பை உணர இயலும் என்பதால் தசா காலங்கள் வராத பொழுது ஜாதகர் அது குறித்து கவலைப்பட வேண்டியதே இல்லை.#Iniyavan

மேற்கண்ட விதிகளை நுட்பமாக ஆராய்ந்து  தசா புத்திகளையும் கவனிக்கும் பொழுது ஜாதகருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்க இயலும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138

ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக