மீன லக்னத்திற்கு சூரிய தசா எதுபோன்ற நிலைகளில் நன்மையைச் செய்யும்?
மீன லக்னத்திற்கு சூரியன் கடன், நோய்,அடிமை வேலை, எதிரி, வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக் காட்டக்கூடிய ஆறாம் வீட்டு அதிபதியாக வரக்கூடியவர் ஆவார்.
பெரும்பாலான இலக்னங்களுக்கு ஆறாம் வீட்டு அதிபதி, லக்னாதிபதிக்கு பகை தன்மை கொண்ட கிரகமாக வரும்பொழுது மீன லக்கினத்திற்கு ஆறாம் வீட்டு அதிபதி சூரியன், லக்னாதிபதிக்கு நட்புக் கிரகமாக வருவார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அந்த வகையில் 6-க்குடையவர் என்றாலும் மீன லக்கினத்திற்கு சூரிய தசா பெரிய அளவில் கெடுதல் செய்யாது. Iniyavan Karthikeyan
இருப்பினும் லக்னாதிபதிக்கு நட்பு கிரகமே ஆறாம் வீட்டு அதிபதியாக வரக்கூடிய காரணத்தினால் நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடியகூடிய சூழ்நிலை மீன லக்கின அன்பர்களுக்கு பெருமளவில் பொருந்தும்.
மீன லக்னத்திற்கு ஆறுக்குடைய சூரியன் லக்னத்தில் இருப்பதை பொறுத்தவரையில் ஆறாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் மறைகிறார் என்ற வகையில் ஆறாமிட கெடுபலன்கள் பெரிய அளவில் இருக்காது. #Iniyavan
மீனம் சுபர் வீடு என்பதால் ஆளுமைத் திறனுக்கு காரகத்துவம் பெற்ற சூரியன் லக்னத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு ஆளுமைத் திறனையும் கொடுப்பார்.
அதே நேரத்தில் சூரியன் 6-க்குடையவராக இருப்பதால் முன்கோபம், முன்னெச்சரிக்கை இன்றி பேசி விடுதல், தன் மீது தவறில்லாத போது எவரையும் எதிர்க்கக் கூடிய தன்மை,அதீதமான தன்னம்பிக்கை திறன் போன்ற பலன்களையும் சேர்த்தே தருவார்.
அரை பாபர் என்ற வகையில் லக்னத்தில் இருக்கக்கூடிய சூரியன் ஜாதகருக்கு அவ்வப்போது தலை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவார்.
லக்னத்தில் இருக்க கூடிய சூரியன் சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது ஜாதகருக்கு நல்ல ஆளுமைத் திறன், சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை, நல்ல வேலை, வேலையில் திறமை போன்ற பலன்களைத் தருவார்.
ஆறாம் அதிபதி 6-க்கு 8-ல் மறைந்து சுபரின் வீட்டில் இருப்பதால் கடன்,நோய்,வறுமை, எதிரி சார்ந்த பிரச்சனைகளை ஜாதகருக்கு பெரிய அளவில் தரமாட்டார். #Iniyavan
அடுத்ததாக இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதை பொறுத்தவரை சூரியன் அங்கே உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். ஆறாம் வீட்டு அதிபதி தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல.
ஜாதகருடைய பேச்சே பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். இரண்டாமிடம் குறிக்கக் கூடிய விஷயங்களான தனம், குடும்பம் ,வாக்கு, பணவரவு போன்றவற்றில் அவ்வப்போது ஜாதகருக்கு பிரச்சனைகள் வரலாம்.
பெரும்பாலும் சூரியன் இங்கே உச்சம் பெற்றவர்களுக்கு கண் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காரக வழியில் நல்ல சுறு சுறுப்பு, நல்ல ஆளுமைத் திறன், அதிகார குணமுடைய தந்தை போன்ற பலன்களையும் இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் ஜாதகருக்கு தருவார்.#Iniyavan
மூன்றாம் இடமான ரிஷபத்தில் சூரியன் இருப்பதை பொறுத்தவரை அது சுபருடைய வீடு என்பதாலும் தன்னுடைய வீட்டிற்கு பத்தாம் வீட்டில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் ஓரளவு நல்ல பலன்களை செய்வார்.
மேற்கண்ட சூரியன் சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது நல்ல தன்னம்பிக்கை, நல்ல தைரியம், சுறுசுறுப்பாக செயல்பட கூடிய தன்மை புகழ் பெறக்கூடிய தன்மை போன்றவற்றை உருவாக்குவார்.
சனி ராகு போன்ற பாவகிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது இளைய சகோதர வகையில் அவ்வப்போது ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்.
நான்காம் வீட்டில் சூரியன் இருப்பதை பொருத்தவரை பாபகிரகங்கள் கேந்திரங்களில் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஓரளவு நல்ல பலன்களையே செய்வார்.
நான்காம் வீட்டில் இருக்கக் கூடிய சூரியன் பத்தாம் வீட்டை பார்ப்பார் என்ற அடிப்படையில் சூரியனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தந்தையுடைய தொழில் போன்றவை அமைவதற்கு வாய்ப்புண்டு.
ஆறாம் வீட்டு அதிபதியான சூரியன் தன்னுடைய வீட்டிற்கு லாபஸ்தானத்தில் புத்திக்காரன் புதனுடைய வீட்டில் இருப்பதால் ஜாதகர் வேலையில் அதிக ஈடுபாடு காட்டக் கூடியவராக, நல்ல திறமை உடையவராக இருப்பார்.
பாவ கிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது நான்காமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நிலம்,பூமி, வீடு,மனை,வாகனம், தாயார் போன்றவற்றில் பிரச்சனையை தருவார். ஆறாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருப்பதால் கடன் வாங்கி வீடு கட்டக்கூடிய சூழ்நிலைகளை உண்டாக்குவார்.#Iniyavan
ஐந்தாம் வீட்டில் சூரியன் இருப்பது பொதுவாக நல்லதல்ல.
ஏனெனில் பாபகிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.
இங்கே ஆறாம் வீட்டு அதிபதியாகி சூரியன் புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டில் இருப்பதால் சூரிய தசாவில் குழந்தைகள் வழியில் ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார். தன்னுடைய குறுக்கு புத்தி தவறான சிந்தனை, செயல்பாடு,எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் அவ்வப்போது பிரச்சனைகளை உண்டாக்குவார்.
உடல்நலத்திலும் அவ்வப்போது வயிறு சார்ந்த பாதிப்புகளை செய்வார்.
வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது பாதிப்புகள் இருக்காது.
ஆறாம் வீட்டு அதிபதி தன்னுடைய வீட்டிற்கு 12ல் மறைகிறார் என்ற அடிப்படையில் ஆறாமிடம் குறிக்கக் கூடிய வேலை அமைவதில் ஜாதகருக்கு தாமதம் இருக்கும்.#Iniyavan
ஆறாம் வீட்டில் சூரியன் இருப்பதை பொருத்த வரை அங்கேயே சூரியன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பார்.அந்த வகையில் சூரியன், ஜாதகரை கடுமையான உழைப்பாளியாகவும், வேலையில் அதிக தீவிரம் காட்ட கூடியவராகவும் உண்டாக்குவார்.
பாபக் கிரகமான சனி மற்றும் ராகு தொடர்பினை பெறும்போது வம்பு வழக்கு மற்றும் நோய் சார்ந்த பாதிப்புகளை தருவார்.
பொதுவாக ஆறாம் வீட்டதிபதி ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும்போது வேலையில் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அதிகம் எனக் உழைக்கக்கூடிய சூழ்நிலையும் அதிகமான முன்னேற்றத் தடைகளையும் உண்டாக்கும்.
ஆறாம் வீட்டில் நின்ற சூரியன், குரு சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்களின் தொடர்பினை பெரும் பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வேலையில் தனக்கான அங்கீகாரம்,கெளரவம்
போன்றவற்றை கிடைக்கச் செய்வார்.
சூரியனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை, அரசு வேலை, தந்தை வழித் தொழில் போன்றவை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.#Iniyavan
அடுத்ததாக ஏழாம் இடமான கன்னியில் சூரியன் இருப்பதை பொருத்தவரை அது நட்பு வீடு என்றாலும் பாபகிரகம் ஏழில் இருப்பது நல்லதல்ல என்ற அடிப்படையில் கெடுபலன்கள் இருக்கும்.
தாமதத் திருமணம், முரண்பாடான குணம் கொண்ட கண்டிப்பான வாழ்க்கைத்துனை, திருப்தியில்லாத மண வாழ்க்கை, உதவும் குணமற்ற நண்பர்கள் போன்ற கெடுபலன்கள் இருக்கும்.
இருப்பினும் லக்னாதிபதிக்கு நண்பர் என்ற அடிப்படையில் பெரிய அளவில் கெடுதல் இருக்காது. சூரிய தசா வரவில்லை என்றால் பெரிய பாதிப்பில்லை.
ஏழில் இருக்கக்கூடிய சூரியன் சுபக்கிரக தொடர்பில் இருக்கும் போது முற்றிலுமாகவே கெடுதல் இருக்காது.
எட்டாம் இடமான துலாத்தில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல. சூரியன் நீசமாகும் போது ஒருவருடைய தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத்திறன் தகப்பன் ஆதரவு போன்றவை குறைவதற்கான வாய்ப்பு உண்டு.
ஒளிக் கிரகமான சூரியன் எட்டில் மறைந்து நீசம் பெற்ற நிலையில் இருக்கும்போது சூரியனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு அதிக பாதிப்புகள் இருக்கும்.
வேலை பார்க்கக் கூடிய இடம், மேலதிகாரிகள், அரசு வழியில் வகையில் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் இடையூறுகள், தொல்லைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பாபக் கிரகமான சனி ராகு தொடர்பினை இங்கே இருக்கக்கூடிய சூரியன் பெறும் பொழுது வம்பு,வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கி ஜாதகரை தண்டனைக்கு உள்ளாக்குவார்.
சூரிய தசா நடைமுறைக்கு வரக்கூடிய பட்சத்தில் மட்டுமே பாதிப்புகள் இருக்கும் என்பதால் சூரிய தசா வராத பொழுது ஜாதகர் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. சுபர்களின் தொடர்பில் சூரியன் இருக்கும் போதும் பாதிப்புகள் பெரியளவில் இருக்காது.#Iniyavan
ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை பாபகிரகங்கள் திரிகோணத்தில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பொதுவாக இது நல்ல அமைப்பு கிடையாது. இங்கே அவருக்கு நட்பு வீடு என்றாலும் ஆறாம் அதிபதியாகி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பாக்கியங்களை கெடுக்கக்கூடிய அமைப்பிலே இருப்பார்.
பொதுவாக சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில் மேற்கொண்டு அவர் சனி, ராகு போன்ற பாபர் தொடர்பினை பெரும்பொழுது சூரியதசாவினில் ஜாதகருடைய தந்தையைப் பாதிப்பார்.
இதை கவனிப்பதற்கு முன்பு வீடு கொடுத்த செவ்வாய் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
ஒன்பதிலே இருக்கக்கூடிய சூரியன் சுபக்கிரக தொடர்பினை பெரும் பொழுது கண்டிப்பாக அவர் காரகோ பாவ நாஸ்தி அமைப்பை செய்யமாட்டார்.
ஆறாம் வீட்டு அதிபதியாகி சூரியன், ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தையை விரோதமாக நினைக்கக் கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கும் .ஜாதகனை கடவுள் நம்பிக்கை அற்றவராக, ஆன்மீக நாட்டம் குறைவானவராக மாற்றும்.
அதிக அலைச்சல், வெளியூர்களில் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு போன்றவற்றை உண்டாக்கும்.#Iniyavan
அடுத்ததாக பத்தாமிடமான தனுசில் சூரியன் இருப்பதை பொருத்தவரை அது சுபர் வீடு என்பதாலும், சூரியன் பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவார் என்ற அடிப்படையில் மிக நல்ல பலன்களையே தன்னுடைய தசா காலங்களில் செய்வார்.
வீடு கொடுத்த குருவும் வலுப்பெறும் போது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல தலைமைப் பதவி, நீடித்த நிலையான வருமானம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.
11 ஆம் வீடான மகரத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைவார் என்ற அடிப்படையில் ஆறாமிட கெடுபலன்களை செய்ய மாட்டார். பாப கிரகமான சனி ராகு தொடர்பினை பெரும் பொழுது மூத்த சகோதர வகையில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், பிரிவு, வருமானம் வருவதில் பிரச்சனைகள், தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் குறுக்கு புத்தி, வெற்றிக்கு அதிகம் முயற்சிக்க வைப்பது போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.
ஆறாம் வீட்டில் இருக்கக் கூடிய சூரியன் சுபர்களின் தொடர்பினை பெரும்பொழுது நல்ல பலன்களைச் செய்வார்.#Iniyavan
.
அடுத்ததாக 12ஆம் இடமான கும்பத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை ஒளிக் கிரகங்கள் பன்னிரண்டில் மறைய கூடாது என்ற அடிப்படையில் நல்லதல்ல. தன்னுடைய 6-ஆம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவார் என்ற அடிப்படையில் மேற்கொண்டு பாபர் தொடர்பினை பெறும் போது ஆறாமிட கெடுபலன்களான கடன், நோய், எதிரி, வறுமை,வம்பு, வழக்கு சார்ந்த பிரச்சினைகளையும், சுபர் தொடர்பினை பெறும் போது நல்ல பலன்களையும் செய்வார்.
அடிமை உத்யோகத்தினை சுட்டிக் காட்டக்கூடிய ஆறாம் வீட்டு அதிபதி தொலைதூர இடங்களை சுட்டிக் காட்டக்கூடிய 12ஆம் வீட்டில் இருக்கிறார் என்ற அடிப்படையில் ஜாதகரை வெளியிடங்களில் பணி புரிய வைப்பார்.#Iniyavan
இவை அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். சூரியனுடன் இணைந்துள்ள பார்த்துள்ள கிரகங்களை பொருத்தும் வீடு கொடுத்தவரின் நிலையினைப் பொருத்தும் பெற்றுள்ள சாரம், சாரநாதன் நிற்கின்ற இடத்தினைப் பொறுத்தும் பலன்கள் மாறுபட வாய்ப்புண்டு.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக