பொதுவாக வாழ்க்கையில் நல்ல வீடு, மனை, வாகனம், நல்ல அழகான வாழ்க்கைத்துனை போன்ற அமைப்புகளோடு வாழ்பவர்களை பார்த்து அவனுக்கு என்ன சுக்கிரதசை நடக்கிறது என்று சொல்லுவோம்.
மனித வாழ்க்கைக்கு சந்தோஷம், இன்பம் தருகின்ற நிகழ்வுகள் அனைத்தும் இவருடைய காரகத்திற்கு உட்பட்டது என்றால் மிகையல்ல.
இப்படிப்பட்ட சுக்கிரதசை எல்லா லக்னங்களுக்கும் நன்மையைச் செய்யுமா என்று கேட்டால் கிடையாது.
தனுசு மற்றும் மீன லக்னத்திற்கு சுக்கிரன் அவயோகியாக வரக்கூடிய ஒரு கிரகம். அவயோகிய வரக்கூடிய சுக்கிரன் துர்ஸ்தானங்களுடன் தொடர்புபெற்று தசா புக்தி நடத்தும் போது பாதிப்புகளை தந்து முன்னேற்றத் தடைகளைத் தருவார். #Iniyavan
அவயோகியாக இருக்கக்கூடிய சுக்கிரன் குறிப்பிட்ட சில நிலைகளில் இருப்பதை தவிர மற்ற இடங்களில் இருக்கும் பொழுது பெரிய அளவில் முன்னேற்றத்தையும் செய்யமாட்டார்.
அந்தவகையில் குருவின் இலக்கனமான மீனத்திற்கு சுக்கிரன் எந்தெந்த இடங்களில் இருக்கும்போது தசாக்காலங்களில் நன்மையே செய்வார். எந்தெந்த இடங்களில் இருக்கும் போது தசா காலங்களில் ஜாதகர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக பார்ப்போம். Iniyavan Karthikeyan
மீன லக்னத்திற்கு சுக்கிரன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். அவர் எட்டாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து உச்சம் பெறுவதால் எட்டாம் வீட்டின் கெடுபலன்களை ஒரளவு குறைத்தே செய்வார்.
இருப்பினும் இதே சுக்கிரன், சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் இணைவினை இவ்விடத்தில் பெறும்பொழுது கடுமையான பாதிப்புகளையும் செய்வார் என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும். #Iniyavan
பாப கிரங்களின் தொடர்பின்றி தனித்த நிலையில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் பொழுது ஜாதகர் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கக் கூடியவராக இருப்பார். காதலுக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு ஜாதகர் நல்லவராக இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை மீது அதிக பாசம் உடையவராகவும், வரக்கூடிய வாழ்க்கைத் துணைக்கு ஜாதகர் உண்மையாக செயல்படவேண்டும் என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பார்.
சுக்கிரனுடைய காரகத்துவங்களான வீடு, மனை, வாகன யோகம், தாம்பத்யம் போன்றவற்றினை தன்னுடைய தசா காலங்களில் தருவார். இருப்பினும் சுக்கிர திசை ஜாதகருக்கு பெரிய அளவில் யோகம் செய்யாது. காரணம் அவர் எட்டாம் வீட்டுக்குரியவராகவும் இலக்னாதிபதிக்கு முற்றிலும் பகை தன்மையுடைய கிரகமாக இருப்பதாலும் ஆகும்.
8-க்குடையவர் உச்சம் பெறுகிறார் என்ற வகையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தையும் தருவார். #Iniyavan
பொதுவாக இங்கே குருவின் சாரத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். ரேவதி நான்காம் பாதத்தில் இருக்கும் போது உச்ச வர்கோத்தமம் பெறுவார்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில் பெரிய நன்மைகளை செய்ய மாட்டார்.
சனி மற்றும் புதன் சாரத்தில் இருக்கும் பொழுது சாரநாதன் அமர்ந்து நிலையை பொருத்து பலன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பார் என்ற வகையில் எட்டாம் வீட்டின் பலன்களையே அதிகம் செய்வார்.
ஜாதகரை பூர்வீக இடத்தில் இருந்து தூர இடங்களுக்கு நகர்த்தி வாழ வைப்பார்.
இருப்பினும் சுபகிரகம் இரண்டில் இருக்கின்றது என்ற வகையில் ஓரளவு ஜாதகருக்கு நல்ல குடும்பத்தையும் மிதமானபணவரவையும் தர கடமைப்பட்டவர் ஆவார். #Iniyavan
அவ்வப்போது ஜாதகருடைய பேச்சால் ஜாதகருக்கு முன்னேற்ற தடைகளையும் வீண் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுபகிரகம் எட்டினைப் பார்க்கிறது என்ற வகையில் ஆயுள் பலத்தை தந்தாலும் பெரியளவில் ஜாதகரை தன்னுடைய தசாவில் முன்னேற விடமாட்டார்.
கேதுவின் சாரத்தில் இருக்கும்பொழுது கேது நின்ற வீட்டிற்கு ஏற்ப, நம் பலனை கவனித்துக்கொள்ள வேண்டும். ஆறாம் அதிபதி சூரியன் சாரம் பெறுவது அல்லது தன்னுடைய சுய சாரமான பரணி சாரத்தில் இருப்பதோ பெரிய அளவில் ஜாதகருக்கு நன்மை செய்யாது.
மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய எட்டாம் வீட்டிற்கு எட்டில் மறைவதால் மூன்றாமிடம் பலன்களையே செய்வார். எட்டாமிட பலன்களை செய்ய மாட்டார்.
ஜாதகருக்கு தன்னுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாட்டை தருவார்.
மூன்றாமிடம் வெற்றி, கீர்த்தி, புகழ் போன்ற விஷயங்களை சுட்டிக் காட்டுவதால் அவருடைய தசா காலங்களில் ஜாதகரை ஏதேனும் ஒரு வகையில் புகழ் பெறச் செய்வார். #Iniyavan
நான்காம் வீட்டில் இருப்பதைப் பொறுத்தவரை நட்பு வீட்டில் திக்பலம் பெற்ற அமைப்பில் இருப்பார்.
அந்த வகையில் 4-ஆம் வீட்டில் இருக்கும்போது நான்காமிட நல்ல பலன்களைச் செய்வார். தாயார் வகையில் மேன்மையான பலன்களை கொடுக்கக் கூடியவராக இருப்பார்.
நல்ல தாய் மற்றும் நான்காமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நிலம், பூமி, வீடு, மனை போன்றவற்றை லக்னாதிபதியின் வலுவிற்கு ஏற்ப தரக்கூடியவராக இருப்பார்.
நான்கில் திக்பலம் பெற்ற நிலையில் வலுவுடன் இருக்கும் பொழுது அவர் பத்தாம் வீட்டை பார்ப்பார் என்ற வகையில் சுக்கிரனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானத்தை தர வாய்ப்புண்டு.
அட்டமாதிபதி திக்பலம் பெறுகிறார் என்ற அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தை தருவார்.
ஐந்தில் சுக்கிரன் இருப்பதை பொறுத்தவரை அது அவருக்கு பகை வீடு இருந்தாலும் இயற்கைச் சுபக்கிரகங்கள் 5ல் இருக்கும்பொழுது நன்மையைச் செய்யும் என்ற வகையில் நல்ல பலன்களே நடக்கும்.
அட்டமாதிபதி ஐந்தில் இருக்கின்றார் என்ற வகையில் ஆண் வாரிசை தராமல் பெண் வாரிசுகளைத் தருவார்.
புத்திரகாரகன் குரு வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது ஆண் வாரிசை எதிர்பார்க்கலாம். #Iniyavan
வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் ஒளி தன்மையுடன் இருக்கும் பொழுது பூர்வபுண்ணியம், அதிர்ஷ்டம், நல்ல குழந்தைகள் போன்ற வகையில் நல்லபலனைச் செய்வார்.
கடன் நோய் எதிரி வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் சுட்டிக் காட்டக்கூடிய ஆறாமிடத்தில் 8-க்குடையவர் இருப்பது நல்லதல்ல. இங்கே சுக்கிரன் பகை தன்மையுடன் இருப்பார்.
ஆறாம் வீட்டில் நின்று சுபகிரகங்கள் தொடர்பை பெறாத நிலையில் கடன் சார்ந்த பிரச்சினைகளையும் நோய் சார்ந்த பிரச்சினைகளும் ஜாதகருக்கு தரக்கூடிய அமைப்பிலேயே இருப்பார். குரு பகவானுடைய தொடர்பு அல்லது புதனுடன் இணைந்து இருக்கும் போது கடன்களால் பிழைக்கக் கூடிய சூழ்நிலையை ஜாதகருக்கு உண்டாக்குவார்.
சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் இணைவினை பெரும் பொழுது வழக்கு வம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்க வைத்து அதன் மூலம் தண்டனையை தரக்கூடிய அமைப்பையும் உண்டாக்குவார். #Iniyavan
அடுத்ததாக ஏழாம் இடத்தை பொறுத்தவரை ஏழாமிடத்தில் இங்கே சுக்கிரன் நீசம் பெற்ற நிலையில் இருப்பார்.
தனித்த நிலையில் பாபக் கிரகங்களின் இணைவினை பெறாத நிலையில் நீசம் பெற்று இருக்கும் பொழுது பெரிய பாதிப்புகளை செய்யமாட்டார்.
புதனுடன் இணைந்து நீசபங்கம் பெற்று இருப்பது அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது போன்றவை சிறப்பான அமைப்பு.
ஏழாமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல நண்பர்கள், கூட்டு தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு நன்மைகளைத் தருவார்.
சனி, ராகு, அமாவாசை சந்திரன், செவ்வாய் போன்ற பாவிகளின் இணைவினை நீசம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன் பெறக்கூடாது. பெறும்பொழுது அதற்கு ஏற்ப தாம்பத்யம்,மண வாழ்க்கையில் சில குறைபாடுகளையும் தரக்கூடிய நிலையில் இருப்பார்.
8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது வரை அட்டமாதிபதி ஆட்சி பெறுகிறார் என்ற வகையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தை தருவார். ஆனால் எட்டாம் இடத்தில் இருப்பதால் தூர இடங்களுக்கு நகர்த்தி ஜாதகரை பிழைக்க வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களின் வாயிலாக ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும்.
இருப்பினும் ஆதிபத்திய சிறப்பில்லாத கிரகம் என்பதால் பெரிய அளவில் முன்னேற்றங்களை தரமாட்டார்.
அவ்வப்போது வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகளையும் உண்டாக்குவார். வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானத்தினை தருவார்.
பாபத்துவம் அடையாத நிலையில் எட்டாம் இடத்தில் இருக்கும்போது சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்கள் மூலம் நல்ல பலன்கள் நடக்கும். சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெரும்பொழுது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை அவமானப்பட வைப்பார். #Iniyavan
ஒன்பதாம் இடத்தில் பொறுத்தவரை விருச்சிகம் அவருக்கு பகை வீடு என்றாலும் இயற்கை சுபர் ஒன்பதில் இருக்கலாம் என்ற அடிப்படையில் 9 ஆம் இடத்தில் நல்ல பலன்களைச் செய்வார்.
வீடு கொடுத்த செவ்வாய் வலுப்பெற்று நிலையில் இருக்கும் பொழுது நல்ல தந்தை நல்ல பூர்வீகம் முன்னோர் வகையில்
சொத்துகள் கிடைக்கும் அமைப்பு போன்ற பலன்களையும் உண்டாக்குவார்.
அடுத்ததாக பத்தாம் வீட்டில் சுக்கிரன் விருப்பத்தைப் பொறுத்த வரை தன்னுடைய மூன்றாம் வீட்டிற்கு எட்டில் மறைவதால் மூன்றாமிடம் குறிக்கக்கூடிய விஷயமான தைரியம்,வீர்யம் இளைய சகோதர ஆதரவு போன்ற வகையில் நல்ல பலன்களைச் செய்ய மாட்டார்.
அதே நேரத்தில் அட்டமாதிபதி சுபராகி பத்தாம் வீட்டில் இருப்பதால் எளிமையான வழிகளில் பணம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, மற்றவருடைய அறியாமையை பயன்படுத்தி பொருள் ஈட்டக்கூடிய தன்மைகளை உண்டாக்குவார். ஆதிபத்திய ரீதியாக சிறப்பு இல்லாத நிலையில் இருப்பதால் பெரிய யோகங்களையும் செய்துவிட மாட்டார்.
அட்டமாதிபதியான சுக்கிரன்,தொழில் ஸ்தானத்தில் இருப்பதைப் பொருத்தளவில் சனி ராகு போன்ற பாவ கிரக தொடர்பினை இங்கே பெரும்பொழுது, தசாக்காலங்களில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகர் பெரிய அளவில் முதலீடுகளை செய்யக்கூடாது.
11 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பது சிறப்பான அமைப்பு. இங்கே அவர் நட்பு நிலையில் இருப்பார். அவயோக கிரகங்கள் 3 6 10 11 ஆம் வீடுகளில் நட்பு நிலையில் இருக்கும்போது நல்ல பலன்களைச் செய்யுமென்று அடிப்படையில் நல்ல பலன்களைத் தருவார்.
தன்னுடைய மூன்றாம் வீட்டிற்க்கு திரிகோண அமைப்பில் இருப்பதாலும் எட்டாம் வீட்டிற்கு கேந்திர அமைப்பில் இருப்பதாலும் ஆதிபத்திய மற்றும் காரகத்துவ பலன்களை நல்ல முறையிலேயே செய்வார்.
இந்த இடத்தில் புதனுடன் இணைவது சிறப்பான பலனைத் தரும். சனி செவ்வாய் ராகு போன்ற பாவர்களின் இணைவினை பெறக்கூடாது.
ஆறாம் அதிபதி சூரியனுடைய சாரத்தில் இருக்கும் பொழுது சூரியன் நின்ற நிலையைப் பொருத்து பலன் மாறுபடும். #Iniyavan
பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதை பொறுத்தவரை அதை மறைவாக எடுத்து.க் கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் காலபுருஷ லக்னத்திற்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
12-ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கும் பொழுது ஜாதகர் பெருந்தன்மை உணர்வுடன் பொருளாதார ரீதியாக மற்றவர்களுக்கு உதவும் குணம் கொடை வள்ளலாக இருக்க வைப்பார்.
அதற்கேற்ற வகையில் ஜாதகருக்கு நல்ல பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்குவார்.
தன்னுடைய தசா காலங்களில் ஜாதகரை பூர்வீக இடத்தில் இருந்து தொலை தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிய வைப்பார்.
இவை அனைத்தும் பொதுவான பலன்களே..
இணைந்துள்ள மற்றும் பார்த்துள்ள கிரகங்களை பொருத்தும், பெற்ற சாரத்தின் அடிப்படையில் சாரநாதன் நிற்கின்ற வீட்டின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபாடும்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக