மாமனார் மாமியார் ஆதரவு உண்டா?
வரக்கூடிய வாழ்க்கைத்துணை மாமனார் மாமியாரை அனுசரித்துச் செல்வாரா?
ஒருவருடைய சுய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கை துணையை சுட்டிக்காட்டும்.
ஏழாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமான லக்னத்திற்கு மூன்றாமிடம் மாமனாரை சுட்டிக்காட்டக் கூடிய இடமாகும். அதேபோல் ஏழாம் இடத்திற்கு நான்காம் இடமான லக்னத்திற்கு பத்தாம் இடம் மாமியாரை சுட்டிக்காட்டக்கூடிய இடமாகும். #Iniyavan
மூன்றாம் இடம் மற்றும் மூன்றாம் வீட்டு அதிபதி சுபக் கிரகங்களின் தொடர்பில் இருக்கும்பொழுது மாமனார் வகையில் நல்ல ஆதரவு இருக்கும்.
அதே போல் பத்தாமிடம், பத்தாம் வீட்டு அதிபதி சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது மாமியார் வகையில் நல்ல ஆதரவு இருக்கும்.
கூடுதலாக சூரியன் மற்றும் சந்திரன் உடைய நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.#Iniyavan
மூன்றாம் இடம், மூன்றாம் வீட்டு அதிபதி, பத்தாம் இடம், பத்தாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களால் பாதிப்பு அடைந்து இருக்கும் பொழுது மாமனார், மாமியார் வகையில் ஆதரவு குறைவாக இருக்கும்.
மூன்றாம் இடம் மற்றும் பத்தாம் இடத்துடன் தொடர்பு பெற்ற கிரகங்களின் தசா புத்தி காலங்களில் மட்டுமே பாதிப்பை உணர முடியும் என்பதால் மற்ற நிலைகளில் அது குறித்து கவலை வேண்டியதில்லை..
மாமனார் மாமியார் ஆதரவிற்கு சம்பந்தப்பட்ட மூன்றாம் இடம் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதியின் அதிதேவதை வழிபாடுகளை கடைபிடிப்பது நல்லதாகும்.#Iniyavan
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக