1.நட்பு வீடுகளில் சூரியனால் அஸ்தங்கம் செய்யப்பட்டு இருக்கக் கூடிய கிரகங்கள் ஓரளவு தன்னுடைய காரகத்துவ பலன்களை வழங்க கூடிய தகுதியில் இருக்கும்.
2.ஒரு கிரகம் தன்னுடைய பகை வீட்டில் அஸ்தங்கம் அடைந்து இருந்தால் அதனுடைய காரகத்துவத்தை தராத நிலையில் இருக்கும். #Iniyavan
3.நீசமான கிரகங்கள் அஸ்தங்கம் அடைவதும் நல்ல நிலை அல்ல.
உதாரணத்திற்கு சுக்கிரன் நீசமான நிலையில் அஸ்தங்கம் பெற்று இருந்தால் சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு பெரியளவில் குறைபாடுகள் இருக்கும்.
4.உச்சம் பெற்ற நிலையில் ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்து இருக்கும் பொழுது போதுமான அளவு தன்னுடைய காரகத்துவ பலன்களை செய்யக்கூடிய நிலையிலேயே இருக்கும். உதாரணத்திற்கு சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்ற நிலையிலிருந்து சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகியிருந்தாலும் சுக்கிரன் தனது காரகத்துவ பலன்களை செய்யக்கூடிய அளவிலே இருக்கும்.#Iniyavan
5.அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் மேற்கொண்டு பாபர்களின் தொடர்பை பெறுவது நல்லதல்ல.
தீய பலன்களைத் தரும்.
அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் சுபர்களின் தொடர்பை பெறும்பொழுது அஸ்தமன தோஷம் விலகும்.
அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது நல்லது.
6.சுபர்களை சூரியன் அஸ்தங்கம் செய்திருப்பது அரசுவேலை, அதிகாரம், ஆளுமைத்திறன், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றிற்கு நல்ல அமைப்பாகும்.
7.சுப கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்திருப்பதில் சூரியனுடன் இணைந்துள்ள டிகிரி அடிப்படையில் தங்களுடைய காரகத்துவ பலன்களை கூடுதல், குறைவாக வழங்குவார்கள்.
8. சனி சூரியனால் அஸ்தங்கம் செய்யப்படுவது ஆயுள் விஷயகளுக்கு நல்ல அமைப்பல்ல,
இது போன்ற நிலைகளில் எட்டாம் இடம், எட்டாம் அதிபதி நிலை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எட்டாம் அதிபதி வலுப்பெறுவது, எட்டாம் இடம், எட்டாம் அதிபதிக்கு சுபர்கள் தொடர்பிருப்பது நல்லது.#Iniyavan
9.ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் அஸ்தங்கமாக இருப்பது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களை ஏற்படுத்தும்.
10.அஸ்தங்கம் அடைந்த கிரகங்களின் பலனை சூரியனே எடுத்து செய்வார் என்பதால் அனுதினமும் ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்ரி சொல்லி சூரிய பகவானை வழிபட்டு வருவது நன்மை தரக்கூடிய அமைப்பாகும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக