செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

அரசியலில் மேன்மை பெறும் ஜாதக அமைப்பு, அதிகாரமிக்க பதவிகள் கிடைப்பதற்கான ஜாதக விதிகள்:



முதன்மை அமைப்பாக லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம் பெற்று இருத்தல் அவசியமாகும்.
முதன்மை கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் வலுத்திருக்க வேண்டும். பத்தாம் இடம் மற்றும் சிம்மம், சிம்மத்தின் அதிபதியான சூரியன் பலம் பெறுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
 மேஷம் மற்றும் விருச்சிகம் சுபர்களால் வலுப் பெற்று இருக்க வேண்டும. ஆளுமை மற்றும் அதிகாரத்திற்குரிய கிரகமான சூரியன் சுக்கிரனை அஸ்தங்கம் செய்து அவரை வலுப்பெற்ற குரு பார்க்கும் பொழுது தலைவர்கள் உருவாகுவார்கள். #Iniyavan 
இராசி  இலக்னத்திற்கு 10ம் இடத்தில் சூரியன் தொடர்பு பெறுவது தலைமைத்துவத்தை தரும். மக்களின் ஏகோபித்த ஆதரவினை, மக்களின் செல்வாக்கை தருவது ஏழாமிடத்துடன் தொடர்பு பெற்ற சனி பகவான் ஆவார். இங்கே அவர் சுபர்களின் பார்வையோ இணைவோ பெற்று இருப்பது  மிக அவசியமாகும்.
அதிகாரம், செல்வாக்கு, தலைமத்துவம், புகழ் இவற்றைத்  தரக்கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய், குரு பகவான் இவர்களின் வலுவிற்கேற்ப ஒருவருக்கு அதிகாரமிக்க பதவிகள் கிட்டும்.
சூரியனும் சந்திரனும் தங்களுக்குள் கேந்திரமாகவும் மற்றும் இலக்ன கேந்திரமாகவும் இருப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். #Iniyavan
எல்லாவற்றிற்கும் மேலாக இவற்றுடன் தொடர்புடைய திசாபுத்திகள் ஆரம்பத்திலிருந்து இருப்பது தலைவர்களாக உருவெடுப்பதற்கான   அடித்தளத்தை அமைத்து தரும்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக