சனி, 6 ஆகஸ்ட், 2022

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற வழிபாடுகள் பலன் தரும் பரிகாரங்கள்:

அனைத்து நவக்கிரகங்களையும் விட வலிமை பெற்ற கிரகமான கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி..
நட்சத்திரத்திங்களில் முதல் நட்சத்திரத்தை போலவே இவர்களும் எந்த ஒரு விஷயத்திலும் முதன்மையாக இருக்க வேண்டுமென எண்ணக்கூடியவர்கள்.

அஸ்வினி கேதுவின் நட்சத்திரம் என்பதால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் எல்லா விஷயங்களிலும் தீர்க்கமான ஆழமான அறிவையும் பெறக்கூடியவர்களாக  இருப்பார்கள்.
ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

சோம்பல் தன்மை இவர்களிடத்தில் சற்று அதிகம் காணப்பட்டாலும் தான் சார்ந்த வேலைகளில் மற்றவர்களை விட ஆழமாக சிந்தித்து,செயல்பட்டு வெற்றி காணக் கூடியவர்கள்.
சில தருணங்களில் இவர்களுடைய கடின உழைப்பு மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.

அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள்.
மனதில் பட்டதை வெளிப்படையாக,  பேசக்கூடியவர்.

உள்ளத்தளவில் நல்லவர்களாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு சிடுசிடுவென்று பேசுவதால் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்கக்கூடியவர்கள்.
இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை முதலில் இவர்களுடைய இயல்பான  சிடுசிடு மனப்பான்மையை புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.
அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் அடங்குவதால் மற்றவர்களை விட இவர்களுக்கு உணர்ச்சிவசப்படும் தன்மை அதிகமிருக்கும். 
இதை இவர்கள் குறைத்துக்கொள்வது நல்லது.

தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை காட்டிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்,  நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உறுதுணையாக செயல்படக் கூடியவர்கள்.
மற்றவர்களின் கவலைகளையும் வலிகளையும் உணர்ந்து கொண்டு உறுதுணையாக நிற்கும் சுமை தாங்கிகள்..

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அன்னை  சரஸ்வதி தேவியாகும்.
அந்த வகையில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை முதன்முதலாக சரஸ்வதிதேவி ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வது சிறப்பு தரும்.

பிறந்த தினம், புது வருடத் துவக்கம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் இவர்கள் வருடம் ஒரு முறையாவது  சரஸ்வதி அன்னையினை வழிபடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

அனுதினமும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வருவது இவர்களது  வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இவர்களுடைய நட்சத்திரத்திற்கு ஏற்ற எட்டி மரத்தை தங்களுடைய பிறந்தநாளன்று ஆறு, ஏரி,குளங்களில் வைத்து தொடர்ச்சியாக பராமரித்து வருவது நலம் தரும்.

அஸ்வினி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும்  மேஷத்தில் அடங்கும். மேஷத்திற்கு ஒன்பதாம் இடம் தனுசு ஆகும். ஒன்பதாமிடம் வீட்டின் அதிபதி குரு ஆவார்.
அந்த வகையில் இவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களுடைய வழிபாடுகளை பழக்கப்படுத்திக் கொள்வது,  தங்களுடைய பிறந்த தினம் வரக்கூடிய காலகட்டங்களில் தங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடத்தில் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை சிறப்பு தரும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை விட  நரம்பு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கழிவுப்பாதை, மலக்குடல், ஜீரண உறுப்புகள் தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என்பதால் இவர்கள் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான நேரத்தில் உறங்குவது, தினமும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது, 
அதிகம் கோபப்படுவதையும் உணர்ச்சிவசப்படுவதையும் குறைத்துக் கொள்வது நல்லதாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர தசா வரக்கூடிய காரணத்தால் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனச்சிதறல் ஏற்பட்டு கல்வி தடைபட 
வாய்ப்பு உண்டு.
சரஸ்வதி தேவி வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு போன்றவை இவர்களுடைய கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உதவும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தடை இருப்பின், அஸ்வினி நட்சத்திரம் அடங்கக்கூடிய மேஷ ராசிக்கு 7-ஆம் ராசியான  துலாத்தின் அதிபதியான சுக்கிர பகவானுக்குரிய  வெள்ளிக்கிழமையன்று அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களில் அருகம்புல் சாற்றி தொடர்ச்சியாக வழிபட்டு வருவது தடை நீங்கி திருமணம் நடைபெறுவதற்கான சிறந்த பரிகாரமாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களை சந்திப்பவர்கள் மகம் நட்சத்திரம் கூடிய நாட்களில் அனுமன் வழிபாட்டை கடைப்பிடித்து வருவது பலன் தரும்.
கடன், நோய் போன்ற கெடுபலன்கள் குறைவதற்கு புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு, குருவாயூரப்பன், உடுப்பி கிருஷ்ணர் வழிபாடு போன்றவை சிறப்பு தரும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சினையிருப்பின் இவர்கள் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு செய்து வருவது நல்லது. அதேபோல் திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.
சுயம்புவாக வீற்றிருக்கும் தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட்டு வரும் தொழில், வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இடர்பாடுகளை போக்கும்.
இவர்களுக்கு ஏற்ற மந்திரங்களை பொருத்தவரையில் விநாயகர் காயத்ரி மற்றும் சரஸ்வதி காயத்ரி போன்ற மந்திரங்களை தினமும் பய பக்தியுடன் ஜெபித்தல் அல்லது அதிகாலை வேளைதனில் கேட்டு வருவது 
இவர்களிடத்தில் நேர்மறை
எண்ணங்களை உருவாக்கும்.

அதிகம்  உணர்ச்சிவசப்பட்டு பேசக் கூடிய தன்மையையும், கோபப்படுவதையும் குறைத்துக் கொள்வது அஸ்வினியில் பிறந்தவர்களின் முன்னேற்றத்திற்கு நல்லது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக