ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

ஜாதகம் பார்ப்பது எவ்வாறு?

ஜாதகத்தில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

முதலில் ஜாதகருடைய லக்னம், லக்னாதிபதியின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

லக்னம் சுப கிரகங்கள் தொடர்பில் இருப்பது அதிர்ஷ்டகரமான அமைப்பு.. அதேபோல் லக்னாதிபதி வலுப்பெற்று இருப்பது நல்ல நிலை..
லக்னாதிபதி பாபராக இருக்கும்போது சுபர்களின் தொடர்பில் இருப்பதும் நல்ல விஷயம்.
லக்னம் மற்றும் லக்னாதிபதியின் நிலை, லக்னாதிபதியின் இயல்பான தன்மையை பொருத்தே ஜாதகர் எந்த ஒரு விஷயத்தையும் அணுகக் கூடியவராக இருப்பார்.

ஜாதகருடைய பிரச்சனையை சமாளிக்க கூடிய திறன் அவருடைய லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை பொருத்ததாகும்.

லக்னாதிபதியின் நிலை, ஆயுளை சுட்டிக் காட்டக்கூடிய எட்டாம் இடம், எட்டாம் வீட்டு அதிபதி மற்றும் ஆயுள்காரகன் சனி பகவானின் நிலையை கவனத்தில் கொண்ட பின்பு ஒவ்வொரு பாவகங்களின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்வது நல்லதாகும்.
ஒவ்வொரு பாவகத்தின் பலம் மற்றும் பலவீனத்தையும் சுய ஜாதகத்தில் கிரகங்கள் அடைந்திருக்க கூடிய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ளும் பொழுது ஜாதகருக்கு எந்த விஷயங்களில் பிரச்சனை இருக்கும் என்பதை தெளிவாக அறிந்திட இயலும். #Iniyavan 

அடுத்ததாக இதுவரை நடந்த தசாபுத்திகள் லக்ன ராசிக்கு யோகர்களுடைய தசா புத்திகள் நடைபெற்றதா அல்லது அவயோக கிரகங்களின் தசாபுத்திகள் நடந்துள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னர் நடந்த தசாபுத்தி விவரங்களை தெளிவாக பார்க்கும் பொழுது ஜாதகர் எந்த நிலையில் இருக்கின்றார் என்பதை ஓரளவு யூகித்துவிட இயலும்.

அடுத்ததாக தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள், அடுத்து வரக்கூடிய தசாபுத்திகள் தற்போதைய கோட்சார விஷயங்கள் மற்றும் அடுத்து வரக்கூடிய கோச்சாரம் போன்றவற்றைப் பார்க்கும் போது அவருடைய எதிர்கால விஷயங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க இயலும்.

கோட்சார நிலையைப் பொறுத்தவரை ஜாதகருடைய வாழ்க்கையில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சனிபகவானின்  தற்போதைய நிலை மற்றும் ராகு கேதுக்களின் நிலையினை அதிக கவனத்தில் கொண்டு பார்த்தாக வேண்டும்.
அடிப்படையான இந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும் பொழுது நாளடைவில் பலன்கள் துல்லியமாக வரத் துவங்கும்.

அவ யோக கிரகங்கள்  வலுப் பெற்ற நிலையில் அவ யோக ஸ்தானங்களுடன் தொடர்பு பெற்று தசா புக்தி நடத்தும் போது அவருடைய லக்னாதிபதியின் பலம் (லக்ன காரகன் சூரியன்) வலுவாக இருக்கக் கூடிய பட்சத்தில் ஜாதகர் பிரச்சினைகளை சமாளிக்க கூடியவராக இருப்பார். லக்னாதிபதி மற்றும் சூரியன் பலம் குறைந்த பட்சத்தில் இருக்கும்பொழுது லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் கவனத்தை செலுத்துவது நல்லது.#Iniyavan

லக்னாதிபதியின் பலம் குறைவாக இருக்கும் பொழுது லக்னத்திற்கு காரகம் வகிக்கக்கூடிய சூரிய பகவானை அனுதினமும் அதிகாலை வேளைதனில் உதயத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள் வழிபட்டு வருவதை வழக்கப்படுத்திக் கொள்வது சிறப்பு தரும்..
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக