திங்கள், 3 அக்டோபர், 2022

ஜாதக ரீதியாக என்னால் பணத்தை சேமிக்க இயலுமா?



✍️ சிலர் நான் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என சொல்வதை கேட்டிருப்போம். மனிதன் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் கூட , 400 ரூபாயாவது சேமிக்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
சேமிக்க கூடிய எண்ணம் ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கக்கூடிய பட்சத்தில் மட்டுமே எதிர்கால வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய சாதகமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு நிலைபெற்று நிற்க இயலும். #Iniyavan 

✍️ ஒரு மனிதன் எந்த வகையில் ஜீவனம் செய்து வருமானம் ஈட்டுவான் என்பதை அவருடைய ஜாதகத்தில் 6 மற்றும் 10 ஆம் பாவகங்கள் உணர்த்தும்.
ஆனால் அவன் சம்பாதிக்கக்கூடிய பணத்தை சேமித்து வைப்பரா அல்லது இல்லையா என்பதை அவருடைய 2, 9 மற்றும் 11ம் பாவகங்கள் உணர்த்தும்.

✏️ ஒரு மனிதனின் ஜாதகத்தில் 2,9 பதினொன்றாம் பாவகங்கள் மற்றும் அதன் அதிபதிகள் நல்ல நிலையில் இருக்கும் பொழுது நல்ல தசாபுத்திகள் நடைபெறக்கூடிய பட்சத்தில் தேவைக்கும் அதிகமான வகைகளில் பணம் கிடைக்க கூடும். தேவைக்கும் அதிகமான வருமானம் இருக்கும் போது ஒருவரால் தனத்தினை கண்டிப்பாக சேமிக்க இயலும்.#Iniyavan
✏️ 2,9 11 ஆம் பாவகஅதிபதிகள் நல்ல நிலையில் இருந்தாலும் லக்ன அவயோகர்களின் தசா புக்தி நடக்கும் போது பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை பெற இயலாது.
ஒருவேளை இலக்ன அவயோகர்கள் என்று அழைக்கப்படக்கூடிய 6, 8 ,12ஆம் அதிபதிகள் அந்த லக்னத்திற்கு நன்மையைச் செய்யக்கூடிய இடங்களில் நின்று, மேற்கொண்டு இயற்கை சுபர்களின் தொடர்பை பெற்று தசா புக்தி நடக்கும் போது பொருளாதார வளர்ச்சியை தருவார்கள்.
சுய ஜாதகத்தில் 2, 9, 11ஆம் பாவகங்கள் மற்றும் லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்து, லக்ன யோகர்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதியின் தசா காலங்கள் அல்லது லக்னாதிபதியின் தசா காலங்கள் வரும் பொழுது ஜாதகர் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை பெறுவார்.#Iniyavan

✏️ 2, 9, 11ம் பாவக அதிபதிகளுக்கு வீடு கொடுத்தவர்கள் நல்ல நிலையில் இருந்து மேற்கண்ட 2,9,11 ஆம் பாவக அதிபதியின் தசாகாலங்கள் வரும் போது பொருளாதார ரீதியாக உயர்வுகள் கிடைக்கும்.

✍️லக்ன அவயோகர்களான 6,8 மற்றும் 12 ஆம் அதிபதிகள் லக்னாதிபதியை விட வலுத்து தசா நடத்தும் போது அதிகப்படியான செலவுகள் மற்றும் விரயங்களை தந்து பொருளாதார ரீதியான இழப்புகளை தருவார்கள்.

✍️ ஜென்ம சனி மற்றும் அஷ்டமச்சனி காலகட்டங்கள் மனிதனுக்கு பொருளாதார இழப்புகளை தரும் என்பதால் குறிப்பிட்ட கால கட்டங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
அஷ்டமச்சனி கால கட்டங்களில்தான் பெரும்பாலும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அனைத்து பணத்தையும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்து, வருமானம் வரக்கூடிய விஷயங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்குவார்கள்.
✏️ குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏழரை மற்றும் அஷ்டமச்சனி காலகட்டங்கள் வரும்பொழுது முடியும்வரை மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை இருக்கும் என்பதால் மேற்கண்ட காலகட்டங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதையும் ஒரு முறைக்கு, இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும் 

✏️ ஆகவே இதுபோன்ற கோட்சாரம் சரியில்லாத காரணங்களில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனவமுடன் இருக்க வேண்டும். கூட்டு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற விஷயங்களில் கண்டிப்பாக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. தேவை  இல்லாமல் ஆடம்பரம் மற்றும் ஆசையை முன்னிறுத்தி பொருட்களை வாங்கி குவிக்க கூடாது.

🌼 எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கான தேவையின்றி, பார்ப்பது அனைத்தையும் வாங்கக்கூடிய விருப்பம் ஏற்பட்டால் நாளை தேவையான விஷயங்களையும் விற்க நிர்பந்தம் நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு நாம் தேவைக்காக வாங்குகின்றமோ அல்லது அதன் மீது கொண்ட ஆசைக்காக வாங்குகின்றமோ என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.#Iniyavan

✏️  சுய ஜாதகத்தில் 2,9 பதினொன்றாம் பாவ  அதிபதிகளை விட, செலவுகளை சுட்டிக் காட்டக்கூடிய 6,8, 12 பாவக அதிபதிகள் வலுத்திருக்ககூடியவர்கள்,
2, 9 பதினொன்றாம் பாவக அதிபதிகளுக்கு  வீடு கொடுத்தவர்கள் நீசம் பெற்ற நிலையில் இருக்கக்கூடியவர்கள்,
2,9 11ஆம் பாவங்களில் ராகு கேதுக்கள் நின்று வீடு கொடுத்தவர்கள் வலு குறைந்த நிலையில் இருக்கக் கூடிய அமைப்பு..
🌼 இவர்களுக்கு பணம் வந்தாலும் கையில் தங்காத நிலை மற்றும் சேமிக்க இயலாத நிலை இருப்பதால் இவர்கள் பணம் ஒரளவு இருக்கும் போதே நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகளில் fixed deposit செய்து கொள்வது நல்லது.
அல்லது அவர்களின் சுய ஜாதக ரீதியாக பணத்தை எந்த விஷயங்களில் முதலீடு செய்யும் பொழுது(நிலம்,தங்கம்) பெரிய அளவில் பாதிப்பின்றி நன்மை தருமோ அதில் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.. #Iniyavan
நன்றியுடன்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f

https://www.facebook.com/groups/374176721571838/?ref=share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக